Courtesy: PARUTHIYUR KRISHNA SASTRI PARIVAAR

Jan 24, 2019

Paruthiyur Periyava Day

Mahaperiyava Charanam - SriRamaJayam - Paruthiyur Periyava Charanam

आगङ्गावारि पुरादनुपम विभवादा च काकुत्स्थसेतोः।

यत्गीतं रामगीतं जयति विजयते कृष्णशास्त्रि स यज्वा।।

ஆகங்காவாரி பூராதனுபம விபவாதா ச காகுஸ்தஸேதொ:|

யத்கீதம் ராமகீதம் ஜயதி விஜயதே கிருஷ்ண சாஸ்திரி ஸ யஜ்வா||

யக்ஞங்கள் பல செய்து, நிகரில்லாத ராமகீதங்கள் பாடிய கிருஷ்ண சாஸ்திரி மிகவும் போற்றுதற்குரியவர். அவரது அந்த கீதங்கள், புனித கங்கையில் பிறப்பிடமான இமாலய மலைகளிலிருந்து, காகுட்ஸ்தர் சந்ததியில் தோன்றிய ஸ்ரீராமரது பாலம் இருக்கும் ராமேஸ்வரம் வரையிலும் எண்ணற்ற மக்களின் மனங்களைக் கொள்ளைக் கொண்டவை.

பருத்தியூர் பெரியவா ஆராதனை 108

அன்புடையீர் வணக்கம்,

பருத்தியூர் பெரியவா’ 'ப்ரவசன பிதாமஹர்' ‘வேதஸ்ரீ’ ‘ராமாயணம்’ ஸ்ரீகிருஷ்ண சாஸ்திரி, இந்தியா முழுவதும் பல்வேறு ஸ்தலங்களில் ஹரிகதா காலக்ஷேபம் மற்றும் ப்ரவசன செய்தவர். ராமாயண ப்ரவசனத்தில் சக்ரவர்த்தியாக திகழ்ந்தார். பல்வேறு புராண இதிகாசங்களில் தேர்ந்த வேத பண்டிதர். சிறந்த ராம பக்தர். கோவில்களை சீர்செய்வதையும், ராமருக்கு ஆலயம் அமைப்பதையும், ராம நாமம் பாடி, ராமர் கதை சொல்லி, தான தர்மங்கள் செய்வதையுமே, வாழ்க்கையின் லட்சியமாக கொண்டு வாழ்ந்து, அவற்றின் மூலம் பரந்த மக்கள கூட்டத்தினருக்கு பக்தியையும் தர்மத்தையும் நன்னெறியையும் காட்டியவர். இந்த மகான், தை மாதம் கிருஷ்ணபக்ஷ்ம் துவாதசிதிதியில் கபாலமோக்ஷம் அடைந்தார் என்பது குறிப்பிடதக்கது. இந்த 2019, விளம்பி வருடம், தை மாதம், அவரது 108 வது ஆராதனை, மஹாபெரியவாளின் அனுக்ரஹத்துடன் பருத்தியூர் ராமர் கோவிலில நடைபெற உள்ளது.

Saturday, 2 February, 2019

4 PM: Paruthiyur: Rama Puja

5 PM: Namasangeerthanam Tributes

6.30 PM: Neivedhayam, Mahamangala aarti, Prasadham

அன்பர்கள், பக்தர்கள், பருத்தியூர் வாசிகள் அனைவரும் குடும்ப சகிதம், உற்றார் உறவினர்களுடன் இந்த நிகழ்வுகளில் பெருந்திரளாகவந்திருந்து கலந்துகொண்டு, பருத்தியூர் பெரியவாளின் அருளையும், ஸ்ரீ ராமரின் பரிபூர்ண கடாக்ஷத்தையும் பெற வேண்டுகிறோம்.

இடம்:

அருள்மிகு ஸ்ரீ கல்யாணவரதராஜ பெருமாள் திருகோவில்,

31, அக்ரஹாரம் தெரு, பருத்தியூர்,

கொடவாசல் தாலுகா, திருவாரூர் மாவட்டம், TN 61260

Priest: Ravi Bhattacharya - 97868 67387


 

 
PARUTHIYUR KRISHNA SASTRI PARIVAAR

980
0