AruL Amudham

May 18, 2023

SRI SEKAR VENKATRAMANJI SHARING HIS PARAMPARA EXPERIENCE (PART 1)

Updated: Jun 4, 2023

திரு சேகர் வெங்கட்ராமன் அவர்கள் சிறு வயதிலிருந்தே, ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவராக இருந்ததால், திருமுறைகளைக் கற்றதுடன், சிவாலயத் தொண்டிலும் ஈடுபட்டார். அவர் பணியிலிருந்தபோதும் விடுமுறை நாட்களில் சிவாலயங்களுக்குச் சென்று சிவப்பணி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இவரது ஆன்மீகப் பயணத்தில் தல யாத்திரைகள், கோயில் திருப்பணிகள், அர்ச்சகர் நலன், புத்தக வெளியீடுகள், கட்டுரை வழங்குதல், இணையதள வாயிலாகப் பதிவுகள், வானொலிப் பேச்சுக்கள் ஆகியன அடங்கும். இப்பணிகளுக்காக இவர் பெற்ற பட்டங்களுள் ‘சிவபாதசேகரன்’ என்பதும் ஒன்று.

இவர் எழுதிய ‘கண்டறியாதன கண்டேன்’ என்ற தமிழ்ப் புத்தகமும், ஆங்கிலத்தில் இவர் வெளியிட்டுள்ள ‘Temples of Forgotten Glory’ என்ற நூலும் ஆன்மீக உலகத்திற்கு பல அரிய தகவல்களைத்தரும் கருவூலமாக உள்ளன. இவ்விரு நூல்களையும் இணையதளத்தின் வாயிலாகப் பெறலாம்.

கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாக தேவாரத்திருமுறைகள் கற்பித்துவருகிறார். இவ்வாறு அவரிடம் பல ஊர்களிலிருந்து கற்கும் மாணாக்கர்கள் ஒருங்கிணைந்து, அதிகம் அறியப்படாத பல கிராம ஆலயங்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்வது குறிப்பிடத்தக்கது.

இவருடன் ஒரு நேர்காணல்

இக்காணொளியின் துவக்கத்தில் காணும் அழகிய ஆலயத்தின் புகைப்பட உதவி - நம் தஞ்சைத் தரணியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் திரு மகாலிங்கம் ஸ்வாமிநாதன்.

SRI SEKAR VENKATRAMANJI SHARING HIS PARAMPARA EXPERIENCE (PART 2)

2210
0