AruL Amudham

Oct 29, 2023

சகலகலாவல்லி மாலை (பொருளுரை)

Updated: Oct 30, 2023

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்பது தமிழ் மூதாட்டி ஔவையின் வாக்கு. கண்ணெனப் போற்றப்படும் இவற்றை நமக்கு அளிப்பது கல்வி. "கேடில் விழுச்செல்வம் கல்வி" என்கிறார் வள்ளுவர். எதனாலும் சிதைவடையாமல் இருப்பது கல்விச்செல்வமே. கலைகளுக்கு எல்லாம் ஆதாரமான கல்விக்கு அதிபதி கலைமகள். கலைமகளைத் துதிக்கும் ஒரு அரிய‌ துதி - குமரகுருபரர் அருளிய சகலகலாவல்லிமாலை. "ஒரு காலமும் சிதையாமை நல்கும் கல்விப் பெருஞ்செல்வப் பேறு" என்று சரஸ்வதி தேவியைப் போற்றுகிறார் குமரகுருபரர். சகலகலாவல்லிமாலை நூற்பாக்களின் பொருளுரையை எளிய முறையில் வழங்குகிறார் சென்னையைச்சேர்ந்த ஸ்ரீமதி சரண்யா விஸ்வநாத்

Madras Institute of Technologyயில் பொறியியல் பட்டம் பெற்று மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்த ஸ்ரீமதிசரண்யா விஸ்வநாத், தமிழ், ஆன்மிகம், இசை, இலக்கியம், கவிதை, ஸ்தல வரலாறு போன்றவற்றில் கொண்ட ஆர்வத்தால் தற்போது அவற்றில் தொடர்புடைய நூல்களைப் பயில்வதில் தன் நேரத்தைப் பயன்படுத்திவருகிறார்.

திருப்புகழில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். திருப்புகழைக் கற்றும் மற்றவர்களுக்கு இணையவழியில் கற்பித்தும் வருகிறார்.

மரபுக்கவிதைகள் புனைவதில் திறமுடைய இவர், வலைத்தளத்தில் அவற்றைப் பதிவிட்டுள்ளார். சந்தவசந்தம் என்ற இணையக்குழுவில் இவருடைய படைப்புகளைப் பதிவு செய்துள்ளார். காஞ்சி காமகோடி பீடத்தின் 69-ஆவது பீடாதிபதி ஜக்தகுரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மீது "ஸ்ரீ ஜயேந்திரர் குறவஞ்சி" என்ற சிற்றிலக்கிய காவியத்தை இயற்றியுள்ளார். அதுவும் இந்த வலைத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சகலகலாவல்லிமாலை பொருளுரையைக் கேட்டு கலைமகளின் அருளைப் பெறுவோம்.

https://youtube.com/playlist?list=PLIIBy6uM0zRC4ROUHgc1hA6ySgDj1JaKv&si=WZNyOLvcjmgiFo0X

960
2