top of page

மஹாளய / பித்ரு பக்ஷம்

மஹாளய / பித்ரு பக்ஷம் என்னும் 16 நாட்களிலும் (09.09.2014 - 24.09.2014) இறந்து போன அப்பா தாத்தா அவரது அப்பா அம்மா பாட்டி முதலான நமது குடும்பத்தில் நம்முடன் பல காலம் வாழ்ந்து, இறந்த பின்னால், பித்ருக்களாக வாழும் நமது முன்னோர்கள், அனைவரும் யமதர்மராஜாவால் ஏவப்பட்டு,நம்மைப் பார்த்து ஆசி வழங்க, நம் இருக்கும் பூ லோகம் தேடி வரும் காலமே மஹாளய பக்ஷம் எனப்படும்.

மஹாளய பக்ஷத்தில் பித்ருக்களை பூஜித்து தர்ப்பணம் ஹிரண்யசிராத்தம் செய்து அவர்களுக்கு அன்ன ஆஹாரம் ஜலம்அளித்து அவர்களை ஸந்தோஷப்படுத்த வேண்டும், அப்படி இல்லாமல் எப்போதும்போல் நமது சொந்த வேலையை செய்து கொண்டு இருந்தால் விருந்தாளியை கவனிக்காமல் நமது வேலையை கவனித்துக் கொண்டிருந்தால் விருந்தாளிக்கு எப்படி கோபம் வருமோ அவ்வாறே பித்ருக்களும் நம்மிடம் கோபிப்பார்கள். பித்ரு தாபம் / கோபம் நல்லதல்ல. ஆகவே ஒவ்வொருவரும் தனது சக்திக்குத் தக்கவாறு சிறிய அளவிளாவது மஹாளயத்தைச் செய்ய முயற்சிக்க வேண்டும்.

அத்துடன் பித்ருபக்ஷமான மஹாளய பக்ஷத்தில் சில ஆகார ஆசார நியமங்களையும் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் நாம் செய்யும் பார்வண / ஹிரண்ய சிராத்தம் / பித்ருதர்ப்பணம் போன்ற பித்ருக்களுக்கான கர்மாக்கள் முழுப் பலனைத்தரும், அதாவது ஸாதாரண நாட்களில் பற்பல இடங்களிலும் பலதரப்பட்ட உணவை சாப்பிட்டாலும் கூட, மஹாளய பக்ஷம் என்னும் 16 நாட்களிலாவது ஹோட்டல் திருமணமண்டபம் போன்ற வெளி இடங்களில் சாப்பிடாமல் வீட்டில் தாயார் மனைவி ஸஹோதரி ஆகியோர் தயார்செய்த உணவையே சாப்பிட முயற்சிக்க வேண்டும். அதிலும் வெங்காயம், பூண்டு, முள்ளங்கி, முருங்கைக்காய், சுரைக்காய், முட்டைக்கோஸ், கேரட், பீன்ஸ், கத்தரிக்காய், கோவக்காய், நாய்குடை, அரைக்கீரை, முருங்கைக்கீரை போன்ற நிஷித்தமான காய்கறி கீரை வகைகளையும் சாப்பாட்டில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.

பித்ருக்களுக்கு பார்வண / ஹிரண்ய சிராத்தம் / பித்ருதர்ப்பணம்செய்பவரின் மனைவிக்கும் இந்த நியமங்கள் உண்டு, தனது கணவன்தானே தர்ப்பணம் செய்கின்றார், அவர் மட்டும் ஆகார ஆசார நியமத்துடன் இருந்தால் போதுமே, நமக்கு என்ன என்று நினைத்து அலுவலகம் செல்லும் பெண்கள் ஆசாரமின்றி இருக்கக் கூடாது, சாஸ்திரங்களில் கர்த்ருத்வம் என்பது தனி ஒருவரிடம் மட்டுமில்லை. கணவன் மனைவி ஆகிய இருவரிடமும் பரவி இருக்கும் வ்யாஸஜ்ய வ்ருத்தித்வம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே பார்வண / ஹிரண்ய சிராத்தம் / பித்ருதர்ப்பணம் செய்யும் கணவனுக்கு என்ன நியமமோ அதே நியமம் அவரது மனைவிக்கும் உண்டு. அப்போதுதான் ஸம்பூர்ண பலன் கிட்டும்.

மஹாளய பக்ஷம் போன்ற பித்ரு பக்ஷ நாட்களில் பலரையும் அழைத்து பலதரப்பட்ட உணவளித்து நடத்தப்படும் திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகளையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக மஹாளய பக்ஷத்தில் எந்த ஜாதிக்காரரும் எந்தச் சூழ்நிலையிலும் திருமணத்தை நடத்த சாஸ்திரம் அனுமதிக்கவேயில்லை.

ஆகவே மறைந்த நம் முன்னோர்கள் மூலம் நமக்குத் தேவையான மன நிம்மதி, குழந்தைச்செல்வம், கடனின்மை மற்றும் வியாதியின்மை, ஆயுர், ஆரோக்யம் போன்ற பற்பல ஸுகங்களை ஸுலபமாகப் பெறக்கூடிய மஹாளயபக்ஷம் 16 நாட்களிலும் முன் கூறப்பட்ட சில அதம பஷ ஆகார ஆசார நியமங்களை அனுஷ்டித்து பித்ருக்களுக்கு பார்வண / ஹிரண்ய சிராத்தம் /பித்ருதர்ப்பண கர்மாக்கள் செய்து போஜன தாம்பூலம் அளித்து பித்ருக்களை ஸந்தோஷிக்கச் செய்து மன நிம்மதியுடனும் ஆரோக்யத்துடனும் நலமாக வாழ, பித்ருக்கள் ஆசீர்வாதம் பெற அனைவரும் மஹாளய பக்ஷம் அனுஷ்டிக்க வேண்டும்.

WITH PRANAMS

N.Ramesh Natarajan/S.Ramanathan/WB Kannan (SRI KARYAM)

Mobile Nos 98422 92536/90039 26542

107 views0 comments

Recent Posts

See All

தெய்வத்தின் குரலைத் தொகுத்த - ரா. கணபதி அண்ணா படைப்புகள்

அன்புடையீர், நமஸ்காரம் பூஜ்ய மகா பெரியவாளின் தெய்வத்தின் குரலைத் தொகுத்தவர் ரா. கணபதி அண்ணா என்பதை அனைவரும் அறிவோம். காஞ்சி மடத்தின்...

bottom of page