17, ஜனவரி 2015, தை கிருஷ்ணபக்ஷம் துவாதசி
‘பருத்தியூர் பெரியவா’ 104 வது ஆராதனை.
இந்து சமயச்சொற்பொழிவின் முன்னோடியான ‘பருத்தியூர் பெரியவா’ பிரம்மஸ்ரீ ராமாயணம் ஸ்ரீகிருஷ்ண சாஸ்திரி, இந்தியா முழுவதும் பல்வேறு ஸ்தலங்களில் ஹரிகதா காலக்ஷேபம் மற்றும் பிரவசனம் செய்தவர். ராமாயண ப்ரவசனத்தில் சக்ரவர்த்தியாக திகழ்ந்தார். பல்வேறு புராண இதிகாசங்களில் தேர்ந்த வேத பண்டிதர். சிறந்த ராம பக்தர். சேங்காலிபுரம் மஹாகுரு ‘முத்தண்ணாவாள்’ வைத்யநாத தீக்ஷிதர், ‘மன்னார்குடி பெரியவா’ ராஜு சாஸ்திரி முதலியோரிடம் கல்வி கற்று, மருதநல்லூர் சத்குரு கோதண்டராம சுவாமிகளிடம் நாமசங்கீர்த்தனம் பயின்று, சிறப்பு மந்திரோபதேசம் பெற்று, பின்னர் 'ஆலங்குடி பெரியவா' ஸ்வயம்ப்ரகாசானந்த சரஸ்வதி சுவாமிகளிடம் வேதாந்த ஸ்ரவணம் செய்தவர் ஸ்ரீகிருஷ்ண சாஸ்திரி.
இந்த மகான், தை மாதம் கிருஷ்ணபக்ஷ்ம் துவாதசி திதி அன்று, (17 ஜனவரி 2015), தன் அபிமான குரு முத்தண்ணாவாளின் ஆராதனை தினத்தில், பருத்தியூர் ராமரின் விஸ்வரூப தரிசனம் கிடைக்கப்பெற்று கபாலமோக்ஷத்தால் சித்தியடைந்தார் என்பது குறிப்பிடதக்கது. ஒவ்வொரு ஆண்டும் முத்தண்ணாவாளின் ஆராதனையின் போது, அர்ச்சனைகள் செய்யப்படும் ‘முத்தண்ணாவாள் அஷ்டகத்தில்’,
‘ஸ்ரீ கிருஷ்ண சாஸ்த்ரி ப்ரமுக பஹு ஸமன் வித்யாய நமஹ’
ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரி போன்ற பிரமுகமான பல மாணவர்களுக்கு சமமான முறையில் கல்வி கற்பித்தவர்க்கு வந்தனம், என்று பொருள் கொண்ட மந்திரங்களில் பருத்தியூர் சாஸ்திரியையும் நினைவுகூறபடுகிறது. அன்றைய தினம் அவரது பருத்தியூர் ராமர் கோவிலில் விசேஷ பூஜைகள் நடைபெறும். இப்புண்ணிய தினத்தில் ‘பருத்தியூர் பெரியவா’ ராமாயணம் ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரியை தியானித்து கல்வியையும், செல்வதையும், பக்தியையும், ஞானத்தையும், ஆசியையும் பெறுவோமாக!
Special Aradhana Pujas at Paruthiyur Rama Temple.
Saturday, January 17, 2015
10.00 AM: Thirumanjana for Sri Rama.
11.00 AM: Alankaram, Aradhanai and Archana
12.00 Noon: Mahamangala Aarti
Devotees are welcome to bring milk and oil and participate and recite Purusha Shuktam & Vishnu Sahsranama during the worship.
4.00 PM: Vadai Malai for Paruthiyur Anjaneya
5.00 PM: Devotee Archanas & Evening Arati & Mahaneivedhyam
6.00 P M Mahadeeparadhanai & Annadhana Prasadham.
VENUE:
Sri Kalyanavaradaraja Perumal Temple,
31, Agraharam Street, Paruthiyur P.O
Via Sengalipuram, Kodavasal Taluk,
Thiruvarur District, TN 612604.
ALL ARE WELCOME
Mahaguru Mutthannavaal Aradhana Invitation attached....
Courtesy:
Paruthiyur Krishna Sastri Smriti Seva Samiti
PARUTHIYUR KRISHNA SASTRI PARIVAAR
pksparivaar@yahoo.com