தஞ்சாவூர் "ஹிதபாஷிணீவெளீயிடுகள்" முலம் 1967ம் ஆண்டு வெளிவந்த மஹாகவி க்ஷேமேந்திய்ரன் இயற்றிய "சாருசர்யா"
முல உரை பதிப்பாசிரியர் ப்ருஹ்மஸ்ரீ முத்துக்ருஷ்ண சாஸ்திரி அவர்களுக்கும் மறு பதிப்பு - ஸ்ரீ ராஜகோபாலன் அவர்களுக்கும் (S/o ஸ்ரீ முத்துக்ருஷ்ண சாஸ்திரி) அவர்களுக்கும் நன்றி தெரிவித்து, இதில் வெளியிடுகிறோம்.
நுல் ஆசிரியர் ஒரு குறிப்பு...
--------------------------------------
தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடி தாலுக்கா சாத்தனுர் க்ராமத்தில் கீலக வருஷம், பங்குனி மாதம், முல நட்சத்திரத்தில், (18.03.1909) ப்ருஹ்மஸ்ரீ ராமனாத சாஸ்திரிகள் கோகிலாம்பாள் தம்பதியர்க்கு பிறந்தார். தமது தந்தையாரிடமே வேதாத்யயனம் செய்து, பின்னர் திருவையாறு ஸம்ஸ்க்ருத கல்லூரி மற்றும் சென்னை ஸம்ஸ்க்ருத கல்லூரியில் "பிம்மாம்ஸா சாஸ்த்தரத்தை" முறைப்படி அப்யஸித்து, 1931-ம் ஆண்டு சென்னை ஸர்வ கலாசாலை சிரோமணி பரிக்ஷையில் (ஒருங்கிணைந்த) சென்னை மாகாணத்திலேயே முதலாவதகத்
தேறி, அதற்கான் ஸர்வகலாசாலையால் வழங்கப்பட்ட பதக்கம் பெற்றார். பின்னர், ப்ரஹ்மஸ்ரீ ஆங்கரை ரங்கஸ்வாமி சாஸ்திரிகளிடம் "ப்ரஸ்தானத்ரய" பாஷ்யம் பயின்று அத்தேர்விலும் முதலாவதாக தேறினார்.
இதனை தொடர்ந்து, திருவையாறு ஸம்ஸ்க்ருத கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்து, "பிம்மாம்ஸா சிரோமணி" வகுப்பிற்கு பாடம் கற்பித்து வந்தார்.ஆசிரியராக இருக்கும்ஸமயத்திம் தொடர்ந்து படித்து வந்து "ஸாஹித்ய் சிரோமணி" அதிலும் முதலாவதாக தேறினார். ஸஹ ஆசிரியரிடம் "வியுத்பத்திவாதம்" என்ற நுலையும், மன்னார்குடி ப்ரஹ்மஸ்ரீ யஜ்ஞ ஸ்வாமி சாஸ்திரிகளிடம் "பஞ்சலக்ஷணீ " தர்க்க சாஸ்த்ரங்களையும் பயின்றார்.
ஸ்ரீ காஞ்சி மஹா பெரிவாள் அவர்கள் நல்கிய நல் அறிவுரையின்படி, உத்யோத்ததைவிட்டு, நமது மதத்தின் இதிஹாஸ புராணங்களான ராமாயணம், மஹாபாரதம், பாகவதம் மற்றும் உபநிஷத்துக்களை, தமிழ் நாட்டில் நகரங்கள் முதல் குக்க்கிராமங்கள் வரையிலும், வட இந்தியாவின் பெரு நகரங்களிலும் உபன்யாஸம் செய்து வந்தார். ஸ்ரீ காஞ்சி மஹா பெரிவாளால் ஸ்தாபிக்கப்பட்ட
வேத தர்ம சாஸ்திர பரிபாலன ஸபையின் ஆதரவில் நடைபெற்றுவந்த பல ஸம்மேளனங்களில்
வேதம், தர்ம சாஸ்திரம் ஆகியவற்றின் உட்கருத்துகளை எவரும் எளிதில் அறிந்து கொள்ளும்படியும் ப்ரசங்கங்கள் செய்து வந்தார்.
பல ஆன்மிக ஸபாக்கள் மற்றும் பக்த மண்டலிகள் அவருக்கு "ப்ரவசன ப்ரவீண" "ஸாரோபன்யாஸசதுர" "உபய பீமாம்ஸ கேஸரி" "வேதாந்தவித்வரத்னம்" "கீதாம்ருத வர்ஷீ" போன்ற விருதுகளை வழங்கி பெருமையடைந்தன.
வரும் வாரங்ளில் மேலும் பல தகவல்கள் வர இருகின்ற்ன.
தொடரும் சாருசர்யா...