இத்திருக்கோவில் 1300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஸ்வாமியின் பெயர் தயாநிதி. அம்மன் பெயர் ஜடாமகுடநாயகி. ஸ்தல விருக்ஷம் தென்னை.
ஸ்வாமிக்கு மூன்று காரணப்பெயர்களும் உண்டு. வாலிக்கு வால் வளர அருள் செய்ததால் வாலிநாதர் என்றும் கர்ப்பிணி பெண் தாகம் தீர்க்க தென்னை மரக்குலையை வளைத்துக் கொடுத்ததால் குலைவணங்கிநாதர் என்றும், ஒரு சிட்டுக்குருவிக்கு மோக்ஷம் அளித்ததால் சிட்டிலிங்கேஸ்வரர் என்றும் பெயர்கள் உண்டு.
சில அபராதம் நீங்க ஹனுமன் பூஜை செய்த ஐந்து கோவில்களுள் இதுவும் ஒன்று. இங்கு வீற்றிருக்கும் தக்ஷிணாமூர்த்தியை பூஜிக்க குருபலம் வேண்டுவோர் வருவர். அதேபோல் கர்ப்பிணி பெண்களும் தயாநிதீஸ்வரர் அருள் பெற வருவதுண்டு.
கல்லினால் செய்யப்பட்ட நடராஜர், சிவகாமி, விஷ்ணுதுர்கை, அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் கோவிலின் சிறப்பைக் கூட்டுகிறார்கள். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோர் பாடிய ஸ்தலம் இது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்தது.