பஞ்ச பூத சக்திகளை ஒரு தூணில் அமைத்து உள்ள திருப்பராய்த்துறை நாதர்

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது இங்கு பசும்பொன் மயிலாம்பிகையுடன் பராய்த்துறை நாதர் (தாருக வனோஸ்வரர்) என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார். இவரை புற்றுநோய் மற்றும் தோல்நோய் உள்ளவர்கள் வணங்கினால் நோய் தீரும் என்பதும் பேச்சு வராதகுழந்தைகளுக்கு பேச்சு வரும் என்பதும் பக்தர்களின் தீராத நம்பிக்கை. இங்குள்ள அம்பாளை வேண்டி கொண்டால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பிராத்தனை நிறைவேறியதும் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சார்த்தி பிராத்தனையை நிறைவேற்று கின்றனர்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவலயங்களில் இது 66-வது தேவாரத்தலம் ஆகும். தீர்த்தம் – அகண்ட காவேரி தலவிரிட்சம் – பாராய் மரம் இத்தலம் பராய் மரங்கள் நிறைந்திருந்தபோது சிவலிங்கம் இருந்ததை கண்டு கோவில் எழுப்பப்பட்டது. சுவாமிக்கு பராய்த்துறை நாதர் என்னும் பெயர் வந்தது. சிவனின் ருத்ரத்தை சிவனின் முகத்தில் ஈசானதிக்கிலும், தென் கிழக்கு திக்கிலும் சிவனின் ருத்ரத்தை தனிக்கும் வண்ணம் இரண்டு சூலங்கள் தாங்கி சாந்தமாக காட்சி தருகிறார். சிவனின் உருவம் கரடுமுரடாக இருப்பதால் உகந்த தினமான திங்கட்கிழமை 8 வாரம் நெய் தீபம் ஏற்றி சிவனின் திருமேனியில் அபிஷேகம் செய்யப்பட்ட விபூதியை உடலில் பூசிக்கொண்டால், உடலின் மேல்புறம், உள்புறம் உள்ள தீராத மேகநீர் சருமநோய்கள் நீங்கும்.

அர்த்தநாரியாக காட்சியளிப்பதால்

அம்மன் அர்த்தநாரியாக காட்சியளிப்பதால் நினைத்த காரியம், திருமணம், தொழில்வெற்றி, புத்திர பாக்கியம், தொலைந்த செல்வங்கள் மீளும் பாக்கியம் கிடைக்கும். கோபுரத்தில் மிக விசேஷமாக சதுஷ்காதேவி ஐந்து முகங்களும் பத்து கரங்களையும் கொண்டு சிறப்பாக உள்ளது.

வல்லப உஜ்ஜிஸ்ட கணபதி:

இந்த புகழ்பெற்ற சிறப்பு வாய்ந்த கோவிலில் உள்ள பிள்ளையார் சன்னிதி சிறப்பு வாய்ந்ததாகும். இந்த பிள்ளையார் வல்லப உஜ்ஜிஸ்ட கணபதி என்று அமைக்கப்படுகிறார். இங்குள்ள விநாயகர் தன் மடியில் அம்பாளை மடியில் அமர்த்தியபடி உள்ளார். இந்த சிறப்பு வேறு எங்கும் அமைந்திருக்கவில்லை.

சிவன் மற்றும் அம்பிகை ஆகியோரை சந்திக்கும் இடத்தில் பஞ்ச பூத சக்திகளை ஒரு தூணில் அமைத்து உள்ளது மேலும் சிறப்புக்குரியதாக அமைந்துள்ளது. அந்த இடத்தில் கை வைத்து வேண்டியதை நினைத்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்ற ஐதீகம் நடைமுறையில் உள்ளது.

அமைவிடம் :

திருச்சியில் இருந்து 14 கி.மி தொலைவில் உள்ளது.

தொடர்புக்கு: –9940843571

Courtesy: Reposting it from Amritha Vahini Group

129 views0 comments