அண்மையில் தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி ஆலயத்தில் நடந்த பூஜ்யஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் 64ஆவது பீடாரோஹண ஜெயந்தி விழாவைப் பற்றிய அற்புதமான விளக்கம் தருகிறார் கூடலூர் பூஜ்யஸ்ரீ ராமச்சந்த்ர சாஸ்திரிகளின் புதல்வர் ஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரிகள்(ஸ்ரீ ரவி சாஸ்திரிகள்). கூடலூர் பூஜ்யஸ்ரீ ராமச்சந்த்ர சாஸ்திரிகள் அவர்கள் இந்த வைபவத்தை முன்னிட்டு தாம் இயற்றிய 'குருவந்தன அபிநந்தன குஸுமாஞ்சலி'யை ஸமர்ப்பணம் செய்தார். அவர் முன்னமேயே இயற்றிய காமகோடி பஞ்சரத்னத்தையும் ஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்த்ரிகள் இக்காணொளியில் மொழிந்துள்ளார்.
இதன் முதல் ஸ்லோகம் ஆதிசங்கரரையும், அடுத்த ஸ்லோகம் ஆதிசங்கரர் முதலான 67ஆவது பீடாதிபதியான மஹாதேவேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் வரையிலும், மூன்றாவது ஸ்லோகம் ஜகத்குரு ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளையும், நான்காவது ஸ்லோகம் பூஜ்யஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளையும், ஐந்தாவது ஸ்லோகம் பூஜ்யஸ்ரீ விஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளையும் போற்றித் துதிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
Courtesy:
Our sincere thanks to kamakoti.org for the photos and Sri Ramganesh for the video.