top of page

ஸ்ரீ ராம ஜயம்

தஞ்சாவூர் பரம்பரை

தஞ்சை ஜில்லாவில் சாதாரண மத்தியதர பிராமண குடும்பத்தின் வீட்டைப்பற்றி இங்கு எழுத முற்படுகிறேன். பிராமணர்கள் அக்ரஹாரத்திலேயே வசித்துவந்தனர். முக்கால்வாசிப்பாகம் ஓட்டு வீடுகள் தாம். மச்சு வீடுகள் மிகக்குறைவு. பிராமணர்களில் தனிகர்கள் மிகக்குறைவானதால் அக்ரஹாரத்தில் மச்சு வீடுகளும் மிகக்குறைவாகவே இருந்தன.வாசலில் ஒற்றை அல்லது இரட்டைத்திண்ணையில் நீளமான திண்ணையின் ஒரு ஓரத்தில் தூரமணா உள் . அதன் கதவு எப்பொழுதும் சாத்தியே இருக்கும் , ஆள் இருக்கும்போதும், இல்லாதபோதும். வீட்டு விலக்கு சமயத்தில் மாத விலக்கான ஸ்த்ரீகள் இருப்பதற்கு.விளக்கு முடிந்ததும் அதிகாலையில் எழுந்து காவேரிப்பக்கம் சென்றுவிட்டு ஸ்நானம் முடிந்தபின் வீடு திரும்புவார்கள். இது சூரியோதயத் திற்கு முன்னேயே நடந்துவிடும். அன்று சமையல்கட்டுப்பக்கம் போகமாட்டார்கள்.மறுநாள் மறு ஸ்நானம் செய்தபின் தான் வீட்டுவேலை செய்ய ஆரம்பிப்பார் கள்.

திண்ணையையொட்டி சேந்தி . அதன்பின் சின்னக்கூடம்.. அதன் பின் பெரிய கூடம். அதையொட்டி நீள வராண்டா. அதற்கு அடுத்தாற்போல் வாசலிலிருந்து தெரியும் மாதிரி ஓரு முற்றம். (மி த்தம் என்று அழைப்பார்கள்)மித்தத்திலிருந்து ஆகாசமும் தெரியும், சூரியவெளிச்சமும் கிடைக்கும் .குரங்குகளும் பக்ஷிகளும் வந்து தொந்தரவு செய்யாவண்ணம் இரும்பு கம்பிகளால் மூடியிருப் பார்கள். பெரிய கூடத்தின் மத்தியில் ஒரு மாடப்பிறை இருக்கும் அதன் அருகில் குத்துவிளக்கு பஞ்சாயதன பூஜை . ஸ்வாமி படங்கள் கொண்ட பூஜையறை பிற்காலத்தில் தான் வந்தது. வீடு அநேகமாக தெற்குபார்த்தே இருக்கும். வீ தியிலிருந்து படியேறி, திண்ணை தாண்டி உள்ளேவர வேண்டியிருக்கும் அதனால் வீட்டுக்குள் காற்று தாராளமாக வரும். கூட்டத்தின் தெற்குப்பக்கத்தில் ஒரு அறை . அது காமரா உள் .அதற்கு நேர் எதிர்த்தாற்போல் பெரியக்கூடத்தின் வடக்கு முனையில் சமையல் உள் . அங்கும் ஒரு மாடப்பிறை இருக்கும். சமைத்தவுடன் பூஜையில்லா நாட்களில் அங்கேயே சுவாமி நைவேத்தியம் ஆகிவிடும். சமையற்கட்டு சுமார் ஐந்து பேர்கள் ஒன்றாகச்சேர்ந்து சாப்பிடுமாறு பெரியதாகவே இருக்கும். அதிகம் பேர்கள் வந்தால் கூடத்தில் சமையற்கட்டு ஓரத்தில் சாப்பாடு எல்லருக்குமாகப்பரிமாறப்படும். கூடத்திற்கப்புறம் அடுத்த உள். வாசலிலிருந்து சமையற்கட்டு தாண்டி நேரேயே அங்கு சென்று விடலாம் . அதைத்தாண்டி ஒரு சிறிய பின் வராண்டா. அதன் பின் மாட்டுத்தொழுவம் அதன் பின் கிணறு. கிணறு தாண்டி சற்று தூரம் சென்றபின் வீட்டின் பின்புறக்கதவையொட்டி கக்கூஸ் . இந்த இடைவெளியில் வாழை தென்னை மரங்கள் ஒன்றிரண்டு இருக்கும். இந்த மாதிரி வீடுகளில் வசிப்பவர்கள் சாதார ணமாககவர்மெண்ட் ஆபீஸ் க்ளார்க்கு களா கவோ அல்லது கணக்குப்பிள்ளைகளாகவோ வாக இருப்பார்கள். இன்னும் சற்றுத்தாழ்ந்த நிலையிலு ள்ளவர்கள் மிகச்சசிரிய ஒட்டுப்பிறை களிலேயே வசிப்பார்கள். அவர்கள் உஞ்சவிருத்தி தினமும்செய்து வாழ்வார்கள். பஜனை செய்வார்கள் பஜனை மடத்திலேயே மிக்கவாறும் இருப்பார்கள எல்லாபிராமணர்களும் அன்றாடம் கோயில்செல்லத்தவறமாட்டார்கள் . கோயில் அர்த்தஜாமபூஜை கழித்தபின் தான் வீட்டுக்கு வருவார்கள். அன்றாடம் சாயரக்ஷை தீபாராதனைக்குப்பின் தான் குழந்தைகளுக்கும் சாப்பாடு . அது ஒருகாலம். இன்னும் பலவிஷயங்கள் இருக்கின்றன . அ வையெல்லாம் இன்றைய பரம்பரைக்குத்தெரிய வாய்ப்பில்லை.

தொடரும்...

Text Content Courtesy:

Sri. S.Chidambaresa Iyer, Chennai

248 views0 comments
bottom of page