பருத்தியூர் மஹிமை
சூரியன் வணங்கிய இடமும் / சூரியனை வணங்கும் இடமும் பருத்தியூர்
இனகுல திலகேன ராமேன அம்பரீஷ வரதேன ச ஸுஷோபிதா
தினகர பூஜித விஷஹரேஸ்வர சுவாமி சன்னிதானம்
ராமாயண ப்ரவீனஸ்ய ஸ்ரீகிருஷ்ண சாஸ்த்ரெர் ஜன்மபூமி:
பருத்தியூர் க்ஷேத்ரோ குடமுருட்டி நதிதீரே பரமபாவனோ விராஜதே
சூரிய வம்ச திலகனான ஸ்ரீராமர் மற்றும் அம்ரீஷரை ரக்ஷித்த வரதராஜர் மஹிமையாலும், சூரியனால் பூஜிக்கப்பட்ட விஷஹரேஸ்வரர் கோவில் கொண்ட திருதலத்தில், இவர்களை பூஜித்த ராமாயண மஹாவித்வான் ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரி என்ற மஹாத்மாவின் அவதார ஸ்தலம், குடமுருட்டி நதிக்கரையில் உள்ள பருத்தியூர் என்ற தெய்வீகமான புண்ணிய க்ஷேத்ரமாகும். காவிரி நதிக்கரையோரம் உள்ள புண்ணிய கிராமங்களுக்கு என்னே ஒரு மஹிமை!
புராணம் 1
பிரம்மன் அமுதத்தையும் மண்ணையும் கலந்து பெரிதளவில் ஒரு கும்பம் செய்து உயிரினங்களின்விதைகளை அதில் வைத்து, மாவிலை இட்டு, ஒரு தேங்காயினால் குடத்தின் வாயிலை இறுக்கமாகமூடி அதனை பூணூலாலும் தர்பையினாலும் இறுகக்கட்டி, தனது இருப்பிடமான மேரு மலையின்தென்பகுதியில் வைத்தார். புதுயுகம் ஆரம்பமாகும் முன், மஹாபிரளயத்தின் புயலில் இருள் சூழ்ந்து, கங்கை, யமுனை, சரஸ்வதி, சரயு, கோதாவரி, மகாநதி, நர்மதை, காவேரி நதிகள் ஒன்று சேர்ந்துவெள்ளப்பெருக்கில் உயிரினங்கள் அழிந்தன. வெள்ள நீர் மட்டம் உயர்ந்து மேரு மலைமேல்இருந்தபிரம்ம தேவனின் படைக்கும் விதைகள் கொண்ட கும்பம் தெற்கு நோக்கி காவேரியின் கரைகளில்சிந்திய வண்ணம் மிதந்தது. பிரம்மனின் கும்பம் கவிழ்ந்து உருண்டு பிளந்து பல்வேறு கோணங்களில்சிதறியதால் இந்த இடத்திற்கு கும்பகோணம் என்ற பெயர் வர காரணமானது. கும்ப குடம் உருண்டுவந்த காவிரியின் ஒரு கிளைக்கு குடமுருட்டி நதி என்று பெயர். பிரளயம் முடிந்ததும், மும்மூர்த்திகள்மட்டுமே இருந்தனர். இவர்கள் மூவரின் பிரகாசத்தால் சூரியன் உருவானது. புயல் ஓய்ந்ததும், நீர்மட்டம் இறங்கி, கதிரவன் மீண்டும் உதிக்க, படைப்புகள் தொடங்கியது. சூரிய ஒளி அதிகபிரகாசமாக இருந்த ஒரு சில இடங்களில் சிந்திய விதைகள் முதலில் முளைவிடத் தொடங்கி, தளிர்விட்டு வளர்ந்து உயிரினம் பரவியது. இதன் காரணமாகவே இந்த இடங்கள பரிதி வழிபாட்டு மையங்களானது என கூறப்படுகிறது. தென்னிந்தியாவில், குறிப்பாக சோழ தேசத்தில், அதிலும் தஞ்சாவூரில் பல பருத்தியூர்கள் உள்ளன.
புராணம் 2
சூரியன் சிவனை எண்ணி தவம் இருந்த இடம். ஒரு முறை ராஹுவானவன் தன் வாயைப் பெரிதாகத்திறந்தவாறு சூரியனை மறைத்து விடுவதற்காக அதனை நோக்கி வேகமாகச் சென்றான். சூரியனின்கதிர்கள் சுட்டெரிக்கும் வெப்பத்துடன் இருந்ததால் அவனுக்குக் கோபம் உண்டானது. நச்சுக்காற்றை வெளியிடும் ஒரு பாம்பின் உருவத்தில் அவன் சூரியனை மெல்ல மறைக்கலானான். அந்த ஒளிமறைப்பு வேளையும் ராஹுவுக்குச் சாதகமாக அமைய, அந்த ஒளிக் கதிரவனும் ராஹுவின்நச்சுக் காற்றால் முகம் கருகி நின்றான்! தன் ஒளி முகத்தைத் திரும்பவும் பெற வேண்டிச் சூரியனும்சிவனை எண்ணித் தவம் புரிந்தான். சூரியன், குடமுருட்டி ஆற்றின் (காவிரி ஆறின் கிளை நதி) வடக்குக் கரைப் பகுதியில் ஒரு பில்வ மரத்தின் கீழமர்ந்து தவம் செய்ததாகப் புராணம். முதலில்பார்வதி தேவி தோன்றி சூரியனை ஆசீர்வதிக்கப் பின் சிவனும் சூரியன் முன் தோன்றி இருவருமாகஆசி வழங்கினார்கள். சிவனின் அருளால் கருநிறம் நீங்கித் தன் ஒளிமிகும் பழைய முகத்தைச் சூரியன் மீண்டும் பெற்றான். ராஹுவும் தன் செயலுக்கு வருந்தி சிவனிடம் மன்னிப்புக் கோரினான். இந்த இடத்திற்கு வந்து சிவன், பார்வதி ஆகிய இருவரையும் ஒருவர் துதித்தால், அவருக்கு செவ்வாய், ராஹு, கேதுவின் தோஷங்கள் நீங்கும் என்றும் விரைவில் திருமணம் கைகூடும் என்றும் நம்பப்படுகிறது. பரிதி என்றால் சூரியன். சூரியன் சிவனை வழிபட்ட இடமாதலால் இது பரிதியூர் என்றாகி காலப்போக்கில் பருத்தியூர் என்றாயிற்று. இங்குள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலில் சிவனுக்கு விஷஹரேஸ்வரர் (விஷத்தை நீக்குபவர்) என்ற திருநாமமும் அவரது துணைவியாருக்கு ப்ரசன்னபார்வதி என்ற திருநாமமும் வழங்கப் பெறுகின்றன.
புராணம் 3
வனவாசத்தின் போது சிறப்பு பாதுகாப்பு பயிற்சிகளை வசிஷ்டர் வாக்கின்படி 'மன பிரசமன உபயயோக:' என்பதற்கேற்ப சூரிய வம்ச ராம லக்ஷ்மணர் மனஅமைதி, ஆரோக்கியம், மற்றும் வெற்றி பெறவேத-யோக பயிற்சியான சூரிய நமஸ்காரம் என்ற பருதி வணக்கம் செய்த இடம் பரிதியூர் என்றானது! ‘அருணப்ரஷ்ணம்’ என்கிற இந்த சூர்ய நமஸ்காரம், யஜுர்வேத, தைத்ரேய அரண்யகத்தில் உள்ளது. 32 அனுவாகமம் ஒவ்வொன்றிலும் 130 பஞ்சாதிகள் கொண்ட இந்த வேத பாராயணத்தில், ஒவ்வொரு பஞ்சாதி ஓதி முடிந்ததும் எல்லோரும் ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்து சூர்ய பகவானை வணங்குவார்கள். (32 x 130 times). இது வேத பாராயணம் கூடிய யோக பயிற்சியும் ஆகும். பூர்வாங்க உத்தரங்க பூஜைகளுடன், நவகிரஹ மந்திரங்களும் ஓதப்படும். கேட்பதற்கே புண்ணியமான இந்த வேத பாராயணம் ஆரோக்கியம் மற்றும் சுபிக்ஷத்திற்கும் மிகவும் நன்மை தரும் சிறப்பு பாதுகாப்பு பயிற்சியாகும். நமது முன்னோர்கள் ஒன்று கூடி சூரிய நமஸ்காரம் என்ற இந்த வேள்வியை பருத்தியூர் பெருமாள் கோவிலில் செய்து வந்தார்கள்.
சூரியகுல சோழர் காலத்திலும் சூரிய வழிபாட்டுக்கு மையமாக இருந்த இடம் பருத்தியூர். இதற்குஆராய்வுச் சான்றுகள் உள்ளன. ஆக, பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகள் போற்றப்படும் இடம், சைவர்களும் வைணவர்களும் சித்தர்களும் மகான்களும் சூரியனை வணங்கி போற்றிய இடமும் இந்த பருத்தியூர்!
SOURCES & REFERENCES:
P.K. Pattabhrama Sastri ~ Diaries
Surya the Destroyer of Darkness:
http://www.sanskritimagazine.com/…/surya-the-destroyer-of-…/
Pralaya: https://en.wikipedia.org/wiki/Pralaya
Aditya: https://en.wikipedia.org/wiki/Ādityas
Surya: https://en.wikipedia.org/wiki/Surya
Gramangalil Sirandhadu Paruthiyur, By Dr Hema Santhanaraman, Thiruvarur Narpani Mandram publicarions, 2003.
Mahabalipuram, C.Sivarama Murti, Archaeological Survey of India, New Delhi 1978 Publication.
Surya Shakthi by Paruthiyur K. Santhanaraman, Poongkodi Publications, 2008.
Sarvam Rama Mayam, A story of a devotee’s life, Paruthiyur Publications, 2011.
Reposted from Paruthiyur Krishna Sasthri Parivar Facebook Page.