நமது புராணங்களில் பவிஷ்ய புராணம் ஒரு முக்கியமான ஒன்று. இதன் கடைசி பாகத்தில் உள்ள 208 அத்யாயங்கள் பாவிஷ்யோத்தர புராணம் என்று அழைக்கப்படுகிறது. இதில் ‘பூமி க்ஷேத்ர மாஹாத்ம்யம் ‘, அதாவது திருநல்லம் என்று அழைக்கப்படும் கோனேரிராஜபுரத்தில் உள்ள ஸ்ரீஉமாமஹேச்வரர் கோவிலைப்பற்றி சொல்லப்படுகிறது. இது ஸ்ரீ நந்திகேச்வரனும் ஸனத்குமாரரும் பேசிக்கொள்வதாக பூர்வபாகத்தில் உள்ள க்ஷேத்ர காண்டத்தில் உள்ளது. இவை 51 முதல் 59 வரை உள்ள 9 அத்தியாயங்களில் காணப்படுகிறது.
மேலும் ஸ்ரீ ஸ்காந்த புராணத்தில் நாகர காண்டத்தில் பிரம்மதேவனும் ஸநத்குமாரரும் பேசிக்கொள்வதாக 88வது அத்யாயத்தில் உள்ளது.
இந்த கோவில் ஸ்ரீராஜராஜசோழனுடைய பாட்டி ஸ்ரீசெம்பியன் மாதேவி கல்பணி செய்ததாக கல்வெட்டுகளில் காணப்படுகிறது. ஸ்ரீகண்டராதித்தர் காலந்தொட்டு எல்லா சோழ வேந்தர்களும் பிறகு வந்த மற்ற வம்ச அரசர்களும் இந்த கோவிலை மிகுந்த கவனத்துடன் பாதுகாத்ததை சரித்திர ஏடுகளில் காணமுடியும்.
வாத்திமர்கள் இங்கு வந்து குடியேறிய பிறகு முன்புறம் உள்ள மண்டபம் ஏற்படுத்தி வைசாக உற்சவம் சிறப்பாக நடைபெற பஞ்சமூர்த்திகள் புறப்பட வெள்ளி வாகனங்கள் உள்பட மற்ற வாகனங்களை செய்து, ஆகம விதிப்படி, வேதவித்துக்களுடைய பங்கேற்புடன் புனர்வஸுவில் கொடியேறி வைகாசி விசாகத்தில் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறும் விதத்தில் நடத்தி வந்தார்கள். கடந்த 50 ஆண்டுகளாக இந்த உற்சவம் நடைபெறமுடியாத நிலையில், இப்போது உள்ள அதிகாரியின் முயற்சியால் மீண்டும் இந்த வருஷம் வைசாக உத்ஸவம் தொடங்கப்பட்டு சிறப்பாக நடந்தேறியது.
இந்த உற்சவம் தீர்த்தவாரிக்கு எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளின் தரிசனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Thanks to Professor Krishnsmurthy Kalyanaraman, Konerirajapuram.
Courtesy : Smt. Malathi Jayaraman, Kumbakonam.