சிவப்ரியா அம்பிகை சமேத ஸ்ரீஉன்னதபுரீஸ்வரர் ஆலயம், ஏரகரம்
- Thanjavur Paramapara
- Jul 13, 2017
- 1 min read
இயற்கை எழிலுடன், பசுமையான வயல்களுக்கு நடுவே கட்டப்பட்டிருக்கும் இக்கோவிலின் இறைவன் நாமம் ஸ்ரீஉன்னதபுரீஸ்வரர். இவர் மட்டும் ஒரு சிறிய கொட்டகையில் அருள்பாலித்து வந்தார். ஊர் மக்களின் முயற்சியாலும் சில நல்ல உள்ளங்களின் உதவியாலும் தற்போது அழகான ஒரு ஆலயத்தில் அம்பிகை சிவப்ரியாவுடனும் விநாயகர், முருகன், பைரவர் மற்ற தெய்வங்களுடனும் அருள் பாலிக்கிறார். கடந்த ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட இந்த ஆலயம் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு அழகாகக் காட்சி அளிக்கிறது
Courtesy:
Smt. Malathi Jayaraman, Kumbakonam
Comments