top of page

பவுர்ணமி விரதத்தின் சிறப்புகள்.!

பவுர்ணமி விரதத்தின் சிறப்புகள்.!

ஒவ்வொரு மாத பவுர்ணமியும் ஒவ்வொரு சிறப்புகளைக் கொண்டதாக இருக்கிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த தினத்தில் விரதம்கடைபிடிப்பதன் மூலம் பகவானின் அருளை பெறலாம். ஒவ்வொரு மாத பவுர்ணமியும் அவற்றின் சிறப்புகளையும் குறித்து காணலாம்.!

சித்திரை மாத பவுர்ணமி.!

எமதர்மனின் கணக்கரான சித்ரகுப்தன் அவதரித்த நாள். அன்றைய தினம் விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்.

வைகாசி மாத பவுர்ணமி.!

முருகப்பெருமான் ஆறுமுகங்களுடன் அவதரித்த நாள். வைகாசி விசாகம். அன்றைய தினம் விரதம் மேற்கொண்டால் இன்பமான வாழ்வுஅமையும்.

ஆனி மாத பவுர்ணமி.!

காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா. இந்த நாளில் விரதம் இருந்தால் இறை தரிசனம் சித்திக்கும்.

ஆடி மாத பவுர்ணமி.!

கஜேந்திர மோட்சம் நடந்த நாள். அன்றைய தினம் அம்மன் ஆலயத்தில் மாவிளக்கு வைப்பது மங்கள வாழ்வை நல்கும்.

ஆவணி மாத பவுர்ணமி.!

அன்றைய தினம் விரதம் இருப்பது சகோதர ஒற்றுமையை பலப்படுத்தும்.

புரட்டாசி மாத பவுர்ணமி.!

இந்த நாளில் விரதம் இருந்தால் முன்னோர்களின் ஆசியைப் பெறலாம்.

ஐப்பசி மாத பவுர்ணமி.!

அன்னாபிஷேக திருநாள். அன்றைய தினம் விரதம் இருந்தால் வறுமை அகலும்.

கார்த்திகை மாத பவுர்ணமி.!

கார்த்திகை தீபத் திருநாள். அன்றைய தினம் வழிபாடு செய்வதால் பிரகாசமான எதிர்காலம்

அமையும்.

மார்கழி மாத பவுர்ணமி.!

ஆருத்ரா தரிசன நாள். அன்றைய தினம் ஆருத்ரா தரி சனம் பார்த்தால், சிறப்பான எதிர்காலம்

அமையும்.

தை மாத பவுர்ணமி.!

தைப்பூசத் திருநாள். இந்த நன்னாளில் விரதம் இருந்தால் முருகப்பெருமானின் அருள் கிடைக்கும்.

மாசி மாத பவுர்ணமி.!

மாசி மகம் திருநாள். இந்த நாளில் விரதம் மேற்கொண்டால் ஜெகத்தை ஆளும் வாய்ப்பு

உண்டாகும்.

பங்குனி மாத பவுர்ணமி.!

பங்குனி உத்திர நாளான அன்றுதான் முருகன் – வள்ளி திருமணம், சிவ- பார்வதி திருமணம் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

இந்த நாளில் வழிபாடு செய்தால் திருமண வரம் கிடைக்கும்.

Reposting it from Amirthavahini Google group.

88 views0 comments

Recent Posts

See All

#Tiruvidaimarudur #2Dec2023 Announcement: Paduka Archana to commence at Tiruvidaimarudur today -shortly after 8 AM. His Holiness Jagadguru Pujya Sri Shankara Vijayendra Saraswathi Shankaracharya Swami

bottom of page