பூஜ்யஶ்ரீ சங்கரவிஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளிய ஶ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்தோத்திரம்
மொழிபெயர்ப்பு: பி.ஆர்.கண்ணன்
भजेऽहं भगवत्पादं भारतीयशिखामणिम् ।अद्वैतमैत्रीसद्भावचेतनायाः प्रबोधकम् ॥१॥ பஜேஹம் பகவத்பாதம் பாரதீயஶிகாமணிம் | அத்வைதமைத்ரீஸத்பாவசேதநாயாஃ ப்ரபோதகம்||1|| பாரதீயர்களின் சூடாமணியாகவும், அத்வைதத்தின் மூலம் நட்பு, நல்லுறவு எண்ணங்களை எழுப்புபவராகவும் உள்ள ஶ்ரீஆதிசங்கர பகவத்பாதர்களை நான் வணங்குகிறேன்.
अष्टषष्टितमाचार्यं वन्दे शङ्कररूपिणम् ।चन्द्रशेखरयोगीन्द्रं योगलिङ्गप्रपूजकम् ॥२॥ அஷ்டஷஷ்டிதமாசார்யம் வந்தே ஶங்கரரூபிணம் | சந்த்ரஶேகரயோகீந்த்ரம் யோகலிங்கப்ரபூஜகம் ||2|| 68வது ஆசாரியர்களான, ஸாக்ஷாத் சிவஸ்வரூபியான, யோகிகளில் சிறந்தவரும், யோகலிங்கத்தினை பூஜிப்பவருமான, ஶ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களை நமஸ்கரிக்கிறேன். (யோகலிங்கம் ஆதிசங்கரரால் கைலாஸத்தினின்று கொண்டுவரப்பட்ட ஐந்து சிவலிங்கங்களில் ஒன்று. அவரால் காஞ்சியில் சங்கர மடத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.)
वरेण्यं वरदं शान्तं वदान्यं चन्द्रशेखरम् । वाग्मिनं वाग्यतंवन्द्यं विशिष्टाचारपालकम् ॥३॥ வரேண்யம் வரதம் ஶாந்தம் வதாந்யம் சந்த்ரஶேகரம்| வாக்மிநம் வாக்யதம் வந்த்யம் விஶிஷ்டாசாரபாலகம்||3|| ஒளியிற் சிறந்தவரும், வரமருளுபவரும், சாந்தஸ்வரூபியும், கொடைவள்ளலும், வாக்குவன்மை மிக்கவரும், கட்டுப்பட்ட வாக்கினையுடையவரும், எல்லோராலும் வணங்கத்தக்கவரும், ஆசாரங்களைக் காப்பதில் விசேஷ ஆர்வம் கொண்டவருமான ஶ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களை நமஸ்கரிக்கிறேன். देवे देहे च देशे च भक्त्यारोग्यसुखप्रदम्। बुधपामरसेव्यंतं श्रीजयेन्द्रं नमाम्यहम् ॥४॥ தேவே தேஹே ச தேஶே சபக்த்யாரோக்யஸுகப்ரதம்| புதபாமரஸேவ்யம் தம்ஶ்ரீஜயேந்த்ரம் நமாம்யஹம் ||4|| ஈஸ்வர பக்தி, தேக ஆரோக்கியம், தேசத்தில் சுகமான வாழ்வு ஆக்யவற்றை அருள்பவரும், சான்றோர் முதல் பாமரர் வரை எல்லோராலும் வணங்கப்படுபவருமான ஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களை நான் நமஸ்கரிக்கிறேன்.
वृत्तवृत्तिप्रवृत्तीनां कारणं करणं प्रभुम् । गुरुं नौमिनताशेषनन्दनं नयकोविदम् ॥ ५ ॥ வ்ருத்தவ்ருத்திப்ரவ்ருத்தீநாம் காரணம் கரணம்ப்ரபும் | குரும் நௌமி நதாஶேஷநந்தநம்நயகோவிதம் || 5 || சரித்திரம் படைப்பவரும், நன் நடத்தை (அல்லது நல் தொழில்), நல்ல செயல்பாட்டினையும் அருள்பவரும், வணங்குபவர் அனைவரையும் மகிழ்விப்பவரும், நீதியை நயம்பட நடத்துபவருமான குரு ஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களை நான் நமஸ்கரிக்கிறேன். प्रजाविचारधर्मेषु नेतारं निपुणं निधिम् । वन्देऽहंशङ्कराचार्यं श्रीजयेन्द्रसरस्वतीम् ॥ ६ ॥ ப்ரஜாவிசாரதர்மேஷு நேதாரம் நிபுணம் நிதிம் | வந்தேஹம் ஶங்கராசார்யம் ஶ்ரீஜயேந்த்ரஸரஸ்வதீம் || 6 || ஜனங்களை நல்வழிப்படுத்தும் தலைவரும், ஆராய்ந்து முடிவு செய்வதில் நிபுணரும், தர்மத்தின் பொக்கிஷமாகவும் உள்ள சங்கராசாரியார் ஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களை நான் நமஸ்கரிக்கிறேன். सितासितसरिद्रत्नमज्जनं मन्त्रवित्तमम् । दानचिन्तामणिंनौमि निश्चिन्तं नीतिकोकिलम् ॥७ ॥ ஸிதாஸிதஸரித்ரத்நமஜ்ஜநம் மந்த்ரவித்தமம் | தாநசிந்தாமணிம் நௌமி நிஶ்சிந்தம் நீதிகோகிலம்||7 || ஆறுகளில் ரத்தினமாகிய வெண்மை, நீல நிற ஆறுகளில் (கங்கை, யமுனை) நீராடுபவரும், மந்திரம் அறிந்தோரில் மிகச்சிறந்தவரும், கொடையில் சிந்தாமணி போன்றவரும், கவலையற்றவரும், நீதியைப் பாடும் குயிலாகவும் உள்ள ஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களை நான் நமஸ்கரிக்கிறேன். सरस्वतीगर्भरत्नं सुवर्णं साहसप्रियम् । लक्ष्मीवत्संलोलहासं नौमि तं दीनवत्सलम् ॥ ८ ॥ ஸரஸ்வதீகர்பரத்நம் ஸுவர்ணம் ஸாஹஸப்ரியம் | லக்ஷ்மீவத்ஸம் லோலஹாஸம் நௌமி தம்தீநவத்ஸலம் ||8 || ஸரஸ்வதி அம்மாளின் வயிற்றில் ரத்தினமாக உதித்தவரும், பொன்போன்ற புகழ் படைத்தவரும், தைரியச்செயல்களில் பிரியமுள்ளவரும், ஸாக்ஷாத் லக்ஷ்மிதேவியின் திருக்குழந்தையும், மனங்கவர் புன்னகையுள்ளவரும், எளியவர்களிடம் பேரன்பு கொண்டவருமான ஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களை நான் நமஸ்கரிக்கிறேன். (ஆசாரியாளின் தாயார் பெயர் ஸரஸ்வதி; ஆனால் லக்ஷ்மியின் சேயாகவும் அவர் இருப்பதினால், அவர் தொடுவதெல்லாம் பொன்னாகிறதே.) गतिं भारतदेशस्य मतिं भारतजीविनाम्। वन्दे यतिंसाधकानां पतिमद्वैतदर्शिनाम् ॥९॥ கதிம் பாரததேஶஸ்ய மதிம் பாரதஜீவிநாம்| வந்தேயதிம் ஸாதகாநாம் பதிமத்வைததர்ஶிநாம் ||9|| பாரததேசத்தின் லக்ஷியமாகவும், பாரதீயர்களின் புத்திசக்தியாகவும், அத்வைத வேதாந்த சாதகர்களுக்கு வழிநடத்தும் தலைவராகவும் உள்ள யதீஸ்வரர் ஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களை நான் நமஸ்கரிக்கிறேன். इति श्रीशङ्करविजयेन्द्रसरस्वतीशङ्कराचार्यस्वामिभिःविरचिता श्री जयेन्द्रसरस्वती श्लोकमालिका. இதிஶ்ரீஶங்கரவிஜயேந்த்ரஸரஸ்வதீஶங்கராசார்யஸ்வாமிபிஃ விரசிதா ஶ்ரீ ஜயேந்த்ரஸரஸ்வதீஶ்லோகமாலிகா. சங்கராசாரியார் ஶ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளிய ஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளைப்பற்றிய ஸ்தோத்திரம் முற்றுப்பெற்றது. ॐ तत् सत्