கடந்த ஓராண்டாக குருபகவான் துலாம் ராசியில் இருந்து வருகிறார்.அதனை
காவிரி புஷ்கரமாக கொண்டாடி வருகிறோம் .வரும் 11-10-2018 அன்று நிறைவு விழாவுடன் காவிரி புஷ்கரம் பூர்த்தி அடைகிறது. பூர்த்தி விழா, ஸ்ரீரங்கம் வட்டம், திருச்சி மாவட்டம், அல்லூரில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது (30- 09- 2018 முதல் 11-10-2018).
அதே தேதியில் குரு பகவான் அடுத்த ராசியான விருச்சிக ராசியில் பிரவேசிக்கும் கால நேரமான 11-10-2018 மாலை 7:20 முதல் தாமிரபரணி புஷ்கர விழா தொடங்குகிறது.
தாமிரபரணி புஷ்கர தொடக்க விழா சரித்திர புகழ்ப்பெற்ற ஸ்ரீ நாறும்பூநாதர் ஆலயம் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுக்கா, திருப்புடைமருதூரில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகளின் ஆணையின்படி கொண்டாடப்பட இருக்கிறது.
தாமிரபரணி புஷ்கர விழாவினை திருப்புடைமருதூரில் 11-10-2018 அன்று மாலை மாண்புமிகு தமிழக ஆளுநர் ஸ்ரீ பன்வாரிலால் புரோஹித் அவர்கள் தொடங்கி வைக்கிறார்கள்
விழா அழைப்பிதழ்களைக் கீழே காண்க
1.தாமிரபரணி புஷ்கர தொடக்க விழா
2..காவிரி புஷ்கரம் பூர்த்தி விழா