
ஸ்ரீ தாமிரபரணி தேவி
மேலே காணப்படும் "தாமிரபரணி தேவி" அம்பாள் சித்திரம் "தாமிரபரணி மஹாத்மியம்" நூலில் வர்ணிக்கப்பட்டுள்ளவாறுச் சைத்ரியர்களால் வரையப்பட்டதைப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது .
தாமிரபரணி புஷ்கரம் 2018, Oct 2018 முதல் Oct 2019 வரை ஆண்டு முழுவதும் வருடாந்திர கொண்டாட்டமாக சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது, அதன் தொடக்க விழா வரும் 12-10-2018 முதல் 23-10-2018 வரை பன்னிரெண்டு நாட்கள் கொண்டாடுவதற்க்காக, நதியின் பல்வேறுப் படித்துரைகளில் அனைத்து ஆன்மிக மடங்கள் , மடாலயங்கள், ஆன்மிக அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.
சரித்திரப் புகழ்ப்பெற்ற ஸ்ரீ நாறும்பூநாதர் ஆலயம் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுக்கா, திருப்புடைமருதூரில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் சார்பாக மேற் சொன்னத் தேதிகளில் , மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலி சீமைக்கும் , தாமிரபரணி நதிக்கரைகளுக்கும், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்திற்கும், ஆதிசங்கரர் காலத்திலிருந்தேத் தொடர்புகள் உள்ளதை “ஸ்ரீ தாமிரபரணி மஹாத்மியம்” மற்றும் “ஸ்ரீ நாறும்பூநாதர் திருவிளையாடல் புராணம்” ஆகிய இரண்டு நூல்களின் சுருக்கத் தொகுப்பின் முன்னுரையில் திரு சேது. ராமச்சந்திரன்I.A.S (R) விளக்கி உள்ளார்.
கீழே காண்க
மேலும் திருநெல்வேலிச் சீமையில் , ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதி “ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி” சுவாமிகள் காலத்தில், முதன் முதலாக 1922ல் மிகப்பெரிய அளவில் வரவேற்புக் கொடுப்பதற்குக் காரணமாக இருந்தவர்கள், ஒருங்கிணைந்த தஞ்சை,திருச்சி மாவட்டங்களின் காவேரி கரையின் கிராமத்திலிருந்த பல்வேறு பிராமண குடும்பங்களின் பெண்மணிகள் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள கிராமங்களின் பிராமண குடும்பங்களில் வாழ்க்கை பட்டு அவர்களுடைய மடத்தின் மீதும் ஸ்ரீ சுவாமிகளின் மீதும் இருந்து வந்த அசஞ்சலமில்லாத பக்தியின் காரணமாக, மிகக் கோலாகலமாக வரவேற்பு அளிக்கப்பட்டதைப் பதிவிடுகிறோம்.
காவேரிக் கரை கிராமங்களுக்கும் மற்றும் தாமிரபரணி கரை கிராமங்களுக்கும் திருமண சம்பந்தமானத் தொடர்புகளை நினைவுகூறும் வகைகளிலும், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்திற்கும் திருநெல்வேலிக்கும் ஸ்ரீ ஆதிசங்கரர் காலம் முதல் உள்ள தொடர்பையும் நமது தஞ்சாவூர் பரம்பரை இணையத்தளத்தில் பதிவிடுவதில் பெருமைக் கொள்கிறோம்.
இந்தச் சரித்திர புகழ்ப்பெற்ற ஆன்மிக விழாவில் ஸ்ரீ தாமிரபரணி மஹாத்மியம் மற்றும் ஸ்ரீ நாறும்பூநாதர் திருவிளையாடல் புராணம் ஆகிய இரண்டு நூல்களின் முழுமையான மூல வடிவத்தைக் கீழ் கண்டத் தொடர்புகளில் அன்பர்கள் கண்டு , பார்த்து அனுபவிக்கலாம்.
கீழ்கண்ட இணையத்தள முகவரியில் ஸ்ரீ பி.ஆர் கண்ணன் அவர்களின் “ஶ்ரீ தாமிரபரணி மாஹாத்மியம்” நூலைப்பெறலாம்
கீழ்கண்ட இணையத்தள முகவரியில் நாறும்பூநாதர் புராணம் முழுவதும் தரவிறக்கலாம்