பொம்மை பூ போடுதல்
திருக்குடந்தை ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் 22-04-2019 அன்று பொம்மை பூ போடுதல் என்ற நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வாணவேடிக்கையும் நடைபெற்றது. அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் சப்த ஸ்தானம் சென்று ஆலயம் திரும்பி வருகையில் தேவர்கள் அவரை வரவேற்பதாக ஒரு ஐதீகத்துடன் இவ்விழா நடக்கிறது. திருவையாற்றில் உள்ள கலைஞர்கள் அங்கு சப்த ஸ்தானம் முடிந்தவுடன் இங்கு வந்து இவ்விழாவை நடத்துகிறார்கள். பொம்மை பூ போட்டவுடன் பொம்மைக்கு தீப ஆரத்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.
பொம்மை பூ போடும் காணொளி காட்சியைக் கண்டு மகிழ்வோம்.