தஞ்சாவூர் மாவட்டம் வெங்கடசமுத்திரம் என்கிற கண்டமங்கலம் கிராமம்
2015 -ம் வருடம் வரை திருவையாறு வட்டமாகவும்,பின்பு பூதலூர் வட்டமாகவும் உள்ளது. அக்ரஹாரத்தில் சுமார் 25 பிராமண குடும்பங்கள் வசிக்கிறார்கள்.
குடமுரட்டி ஆற்றின் படித்துரை செல்லும் வழியில் மிகவும் சிதிலமடைந்து அதிஷ்டானம் மூன்று உள்ளது.தற்போது சரி செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
அதிஷ்டானம்
1 . ஸ்ரீ ராமப்ர்மேந்திர சரஸ்வதி சுவாமிகள் (இராமய்யர் கூட்டம் )
2 .a)பூஜ்ய ஸ்ரீ ப்ர்மேபூத ரெங்கநாத சரஸ்வதி சுவாமிகள்
b) ஸ்ரீ ஆபத்சகாஈஸ்வரர் சரஸ்வதி சுவாமிகள் (பாட்டா கூட்டம் )
ஸ்ரீ ராமப்ர்மேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானம் சுமார் 100 முதல் 120 ஆண்டு பழமையானது .1940 -ல் சில காலம் எனது தகப்பனார் ஆராதித்ததாக தகவல் . 1985 -க்குப் பின்னர் எவரும் கவனிக்கவில்லை.
தற்போது எங்கள் சுவாமிகளின் திதி தெரியாததால் உத்தேசமாக காவிரியில் தண்ணீர் உள்ள காலமாக உத்திராயண புண்ய காலத்தில், ஆனி மாதம் துவாதசி திதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆராதனை நடத்துகிறேன்.
மற்ற இரண்டு அதிஷ்டானத்தை சேர்ந்தவர்கள் எதுவும் தெரியாமல் இருந்ததால் என்னுடன் சேர்ந்து ஆராதிக்கிறார்கள்.
ஆராதனையின் போது அபிஷேகம்,அலங்காரம், பூஜை,பஜனை,வேத பாராயணம், அண்ணதானம்,ஆகியவை அதிஷ்டானத்திலும். கிராமத்தில் உஞ்ச விருத்தியும், கிரஹத்தில் வைதீக ஆராதனையும், பிராமண போஜனமும் நடைபெறுகிறது.
அதிஷ்டானம் தினமும் சுத்தம் செய்து விளக்கேற்றி பூஜை நைவேத்தியம் நடைபெறுகிறது.
எனக்கு துணையாகவும் ஆதரவாகவும் என் சித்தப்பா பையன் ஸ்ரீ K.S. வெங்கட்ரமணி உள்ளார்.
இதற்கு வழி காட்டியவர் ஸ்ரீ காஞ்சி மடம் பஞ்சாங்கம் கணிப்பவர் ஆதம்பாக்கம்
ஸ்ரீ E .K.சுப்ரமணிய அய்யர் அவர்கள்.
எனக்கு தெரிந்தவற்றை கூறியுள்ளேன்.
"கிராம வாசிகளின் ஆதரவுடன்" K .L.சுப்ரமணியம் நங்கநல்லூர் சென்னை - 61
ஸ்ரீ குருவின் அதிஷ்டான ஆராதனை விழா 13 ஜூலை 2019 -தஞ்சாவூர் ஜில்லா கண்டமங்கலம் கிராமம்.