top of page

மைத்ரீம் பஜத

தேனம்பாக்கம் - 17/06/2020 மாலை உரையாடிக் கொண்டு இருக்கும் போது "நாம் யாரையும் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது. எந்த விதத்திலும் என்றார். " பின் என்னிடம் "மைத்ரீம் பஜத " அதை பற்றி எழுதவும் என்று ஆக்னை செய்தார். சில மாதம் முன் பெரியவா ஆற்றிய உரையை கீழே சமர்ப்பணம் செய்கிறேன்.

சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புது ஆண்டு படிப்பை துவங்கும் முன், ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள் மாணவர்களுக்கு, கல்லூரியில் சொற்ப்பொழிவு ஆற்றினார்கள். சொற்பொழிவு ஆற்றிய பின், கல்லூரியின் முதல்வர் அவர்கள் மைத்ரீம் பஜத என்ற பாடலை பாடி அரங்கத்தை நிறைவு செய்தார். உடனடியாக, பெரியவர்கள் அவர்கள், அந்த பாட்டின் அர்த்தத்தை தெளிவாக, மாணவர்கள் மற்றும் இக்காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப . வரி வரியாக அதன் அர்தத்தை எல்லோரும் அறியும் படி , எளிய தமிழில் விளக்கம் அளித்தார்கள்.

பிரபல கர்நாடக இசை மேதையான திருமதி எம். எஸ். சுப்பலக்ஷ்மி அவர்கள் இப்பாடலை உலக அரங்கில், மகாபெரியவர்கள் அவர்களின் உலக சமாதான செய்தியை, பாடி நமது நாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் பெருமை சேர்த்தார்கள். இப்பாடலின் தமிழ் உரை, பக்தர்களுக்கு நாட்டுப்பற்றை வளர்க்க உதவும். உலக அரங்கில் மஹா பெரியவர்களின் உலக அமைதி செய்தி , வருங்காலத்தில் மீண்டும் எதிரொலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

मैत्रीं भजत अखिलःर्ज्जेत्रीं - Maitrim bhajata akhilahrijjetrim

आत्मवदेव परानपि पश्यत - Atmavadeva paranapi pasyata

युद्धंम त्यजत स्पर्धां त्यज - Tyajata paresva kramamakramanam

जननी पृथिवी कामदुघास्ते - Janani prithivi kamadughaste

जनको देवः सकलदयालुः – Janako devah sakaladayaluh

दाम्यत दत्त दयध्वं जनता: Damyata data dayadhvam janatah

श्रेयो भूयात् सकल्जनानाम् - Sreyo bhuyat sakalajananam

சங்கர கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆற்றிய சொற்பொழிவு

( ஜூன் மாதம் 18ம் தேதி , 2018 )

मैत्रीं भजत अखिलःर्ज्जेत्रीं

அனைவரும் அன்புடனும், பிரியமுடனும் இருங்க. நட்புடன் இருங்க.

அனைவரையும் வெல்லக்கூடிய சக்தி அன்பிற்கு உண்டு. நட்புக்கு உண்டு.

(மஹா பெரியவர்கள் உலக நாடுகளுக்கு அளித்த செய்தி, அனைவர்க்கும் பொருந்தும். நாம் அன்புடனும், பிரியமுடனும் இருந்தால் தான் , நமது வீட்டில், நாட்டில், உலக அரங்கில் அமைதி காண முடியும். ஐக்கிய நாடுகள், ஒற்றுமையுடன் வாழ , நட்பு முக்கியம். நட்பின் மூலம், உலக நாடுகள் அமைதியாக வாழமுடியும். அமைதியே உலக வளர்ச்சிக்கு ஆதாரம். அமைதியாக வாழ, நாம் அன்பு பாதையில், பிரியமுடன் சேர்ந்து செல்ல வேண்டும்)

आत्मवदेव परानपि पश्यत

தன்னை போன்றே பிறரையும் பாருங்கள். தனக்கு பசி இருந்தால், அனைவருக்கும் பசி இருக்கும்.

உங்களுக்கு வெய்யில் தாக்கம் இருந்தால், பிறருக்கும் வெய்யில் தாக்கம் உண்டு என்று உணருங்கள். நிழல் குடையை வையுங்கள். வெப்ப மரம் நடுங்கள். எல்லாம் போல் தண்ணீர் கொடுங்கள். தண்ணீர் பந்தல் வெய்யுங்கள். தன்னை போன்றே பிறரை பார்க்க வேண்டும். தனக்கு எப்படி தேவைகள் உண்டோ, அதைபோல் பிறருக்கு உண்டு என்று அறிய வேண்டும்.

युद्धंम त्यजत स्पर्धां त्यज

சண்டை இடுவதை தவிறுங்க. அதாவது , சமாதானமாக போங்க. அம்மா, அப்பா கூடயோ, பக்கதில் இருப்பவர்களுடனோ ,பள்ளிக்கூடத்திலோ, கல்லூரிகளிலோ அமைதியாக இருக்கப் பாருங்கள். பொறாமையை தவிருங்கள். இவர் அப்படி இருக்காரே, இவர் அப்படி இருக்காரே, அவர் வசதியாக இருக்காரே என்பதை தவிருங்கள். இறைவன் வர பிரசாதத்தை, என்ன அளித்து இருக்கிறாரோ, அதை வைத்துக்கொண்டு, திருப்தியாக வாழ்ந்து மேலும் வளர்வதற்கான வழியை காணுங்கள்.போட்டியை தவிருங்கள். பொறாமையை தவிருங்கள்.

दाम्यत दत्त दयध्वं जनता:

கட்டுப்பாட்டுடன் இருங்கள். இப்படி இருந்தீங்க. இரண்டு மூன்று மணி நேரமாக கட்டுப்பாட்டுடன் இருந்தீர்கள். சாதரணமா, கல்வி ஆண்டின் முதல் ஆண்டு என்று சொன்னால், இது போன்ற நாதஸ்வர இசையுடன், நல்ல ஒரு ஆன்மீக சூழ்நிலையிலே, இந்த கல்வி ஆண்டை துவக்கி இருக்கிறீர்கள்.உங்களால் முடிந்த பொருளையோ, உதவிகளையோ, பிறருக்கு செய்யுங்கள்.

யாராவது கஷ்டப்படுவதை பார்த்தல் நீங்கள், கருணை உள்ளதுடன் இருங்கள். அவர் கஷ்ட படுகிறார். அவர் நல்ல விதமாக இருக்க நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்.

அதாவது, குறைகளோ, குறைவுகளோ இருந்தால் அதை பார்த்து நீங்கள் பரிகாசம் செய்யாமல் – உடம்பு முடியாதவர்களோ, உடம்பு கஷ்டப்படுவர்களோ இருந்தால்-அவர்கள் நல்ல விதமாக குணம் அடைவததற்காக , அவர்களுக்காக நீங்கள் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்.

जननी पृथिवी कामदुघास्ते

நாம் எந்த மண்ணில் வாழ்கிறோமோ, அந்த மண் வலமாக வளருட்டம். நமக்கு வேண்டிய அன்னத்தை, சுபீக்ஷத்தை அளிக்கறது.. பசியை போக்குகிறது. தாகத்தை போக்குகிறது. தங்கம், வெள்ளி, தாதுக்கள், நிலக்கரி, என்னனமோ கிடைகிறது பூமி மேலே.பயிர் விளைகிறது. கோதுமை விளைகிறது. இப்படி இந்த பூமியானது, பூமாதேவியானது, நமக்கு வேண்டிய செல்வங்களை அளிக்கிறது.

जनको देवः सकलदयालुः

இறைவனானவர் , அனைவருடன் அன்புடன் இருக்கிறார். அனைவரும் அன்புடன் வாழ வேண்டும் என்று, அனைவரும் நிம்மதியாக வாழ வேண்டும் என்று நமக்கு ஆசி கூறுகின்றார்.

श्रेयो भूयात् सकल्जनानाम्

நிறைவாக, அணைத்து மக்களுக்கும், அணைத்து உயிர் இனங்களுக்கும் ,அணைத்து கால் நடைகளுக்கும், பட்சி, பறவை என்று சொல்வார்கள், பறவைகளுக்கும், அனைத்துக்கும் நல்ல சிந்தனை பெறுவதற்காக, நல்லது உண்டாகட்டும் , என்று பொருள் அடங்கிய பாடலை, பாடினார்கள்.

இந்த பாட்டானது, நம்முடைய பெரியவர்களின், குருவான காஞ்சி பெரியவர்கள், ஐ நா சபை , அமெரிக்காவில் இருக்க கூடிய united nations க்காக , எம் எஸ் சுப்பலக்ஷ்மி, அவர்கள், பாட்டு பாடுபவர்கள் , நீங்கள் கேட்டு இருக்கலாம். அவர்கள் மூலமாக, ஐ நா சபையேலே, உலக சமாதநிதிர்க்காக , அமைதியாக அனைவரும் வாழ்ந்தால், ஒற்றுமையாக அனைவரும் வாழ்ந்தால், அன்புடன் அனைவரும் வாழ்ந்தால், வளர்ச்சி என்பது சாத்தியம், வளர்ச்சி வரும். அனைவருக்கும் நன்மை உண்டாகும். என்பதாக இவர்கள் எழுதி கொடுத்தார்கள்.

86 views0 comments

Recent Posts

See All
bottom of page