top of page

Bhikshavandanam Offered to Sri Kanchi Shankaracharya Swamigal During Chaturmasya.

Sep 6
2 min read

Updated: Sep 8


* சாதுர்மாஸ்யத்தில் ஶ்ரீ காஞ்சி காமகோடி ஜகத்குரு பூஜ்யஶ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகளுக்கு பிக்ஷாவந்தனம் சமர்ப்பணம்*


மோக்ஷபுரி ஏழில் ஒன்றாம் காஞ்சிபரம் அதன் அருகே புராண புகழ் பெற்ற பாலாற்றங்கரையில் அமைந்துள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் நின்ற கோலத்தில் அருள் பாலிக்க, நடமாடும் தெய்வமென அன்றும் இன்றும் அனைத்து பகதர்களாலும் போற்றி வணங்கப்படுகின்ற ஶ்ரீ காஞ்சி மஹாஸ்வாமி மோனத் தவம் செய்த புண்ணிய பூமியாம் ஓரிக்கை கிராமத்தில், இன்று ஒருநாள் ஒரு பொழுது, ஒரேஒரு பொழுது, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பிராமணர் சங்கத்தினர் காலை பொழுதில் பிக்ஷாவந்தனம் சமர்ப்பணம் செய்திட ஏற்பாடானது. மகிழ்சியுடன் கலந்து கொண்ட ஶ்ரீ காஞ்சி ஶ்ரீ மடம் பக்தர்களில் அடியேனும் ஒருவன்.

சுப நிகழ்சிக்கு முந்தின தினமே காஞ்சி நகரில் முகாமிட்டு, அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அன்னை ஶ்ரீ காமாட்சி அம்பாளை கண்குளிர தரிஸனம் செய்து கொண்டோம். தொடர்ந்து ஏகாம்பரேஸ்வரையும் ஏகாந்தமாய் தரிசனம் செய்து மகிழ்ந்தோம்.

இன்று அதிகாலை எழுந்து நாங்கள் குளித்து சந்தியாவந்தனம் செய்து *பத்தாரில் நாங்களும் மடிசாரில் பாரியாள் சமேதமாக சென்றோம். மணி காலை 6.30 இருக்கும் அப்போதே ஸ்ரீசந்திர மௌளீஸ்வரர் பூஜை மண்டபம் களை கட்ட தொடங்கியது.

பூ, பழ கூடைகளை கையில் ஏந்திய படி தம்பதி தம்பதியராய் பல ஊர் பிராமண பந்துகள் ஒன்று கூட ஆரம்பித்தனர்.

இவைகள் ஒரு நாள் ஒரு பொழுதில் ஏற்பட்ட மன மாற்றமில்லை பாரம்பரியமாக, பரம்பரையாக வழி வழியாக செய்தது, செய்து வந்தது மட்டுமல்ல அடுத்தடுத்த தலைமுறைகளோடு ஆனந்த தவமாய் சங்கமித்தது.*ஒரு ஒழுங்கு (*discipline) இது ஸ்ரீமடத்தின் பாரம்பரியம் அதில் நனைவதும் அதன் சாரலை அனுபவிப்பதும் தெய்வீகம்.

காலை 7 .30 மணிக்கெல்லாம் பூஜை மண்டபத்தின் திரை விலகியது. ஶ்ரீ மஹா திரிபுர ஸுந்தரி அம்பா சமேத ஶ்ரீ சந்திரமௌளீஸ்வர ஸ்வாமி பளீரென ப்ராகசிக்க அந்த ஓளி முழுதையும் கண்ணாடியோவென விகஸித்த ஶ்ரீ இளைய ஜகத்குருவின் புன்னகை பொருந்திய முகத்தில் பிரதிபலிக்க ஶ்ரீ இளைய பெரியவா பூஜையை தொடங்கினார்கள்.

அந்த பூஜை மண்டபத்தில் பூஜை பொருட்கள் பாத்திரங்கள் மங்கள ஸ்நான பாத்திரங்க சீர் செய்ப்பட்டு வேதியர்கள் சூழ ஶ்ரீ இளைய பெரியவா தொன்மையான வழிகளை ஸ்வீகரித்தவாறு பூஜை ஸ்டூலில் அமர்ந்தார். வழக்கமான பூஜைக்கான முன் ஏற்பாடு சம்ரதாயப்படி தொடங்கியது.

எங்களுக்கு சங்கல்பத்திற்கான ஏற்பாடுகளும் சம்ரதாய வழக்கங்களும் நடை பெற்றது. பிக்‌ஷா வந்தன ப்ராம்மண போஜன சமாராதனை சங்கல்பம் எடுத்துக் கொள்ள நீண்ட வரிசையில் கலந்து கொண்டோம் எங்கள் குழுவினை தஞ்சாவூர் -பட்டுகோட்டை பிராமண சங்கம் என்று அழைத்தனர். திவ்யமாக சங்கல்பம் செய்து வைத்தனர். நாங்கள் நமஸ்காரம் செய்து கொண்டு முன் மண்டபத்தில் அமர்ந்தோம்.

2535 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கபட்ட அந்த சந்தர மௌளீஸ்வரர் பூஜையின் தொடர் சங்கிலியென இடைவெளி இல்லாது அடுத்தடுத்த ஆச்சார்ய பரம்பரையினர் தம்தம் தாமரை கரங்களால் அபிஷேக ஆராதனை செய்திட்ட ஶ்ரீ ஸ்வாமிக்கு இன்றும் 71 ஆவது பீடாதிபதிகளான ஶ்ரீ இளைய பெரியவா தொடர்ந்து செய்திட்டது எம் போன்றோர்க்கு காணக் கிடைக்காத காட்சி. நமக்கு புரியவில்லை ஆனால் அந்த பூஜையில் நுட்பம் தொன்மை மெய்சிலிர்க்கவைக்கும் நிகழ்வு.


இடையில் ஆதி சங்கராச்சாரியார் அவர்களின

பொற்பாத பூஜையில் நானும் என் பாரியாளும் கலந்து கொண்டோம். நந்த வனத்திலிருந்து தானே வந்த புஷ்பங்கள் நான் அவரின் பாதத்தை அலங்கரிக்கிறேன் என்று புஷ்பாஞ்சலி செய்தோம் ஆனாலும் எனக்கு சிகை இல்லாத காரணத்தால் ஆச்சார்யாள் பதகமலசரணங்களில் நேரடியாக சமர்பணம் செய்ய வழக்கம் இடம் கொடுக்க வில்லை. மிக அழகாக நடந்த பூஜை தீபம் தூபம் காட்டப்பட்டு எங்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.


சந்திர மௌளீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வழக்கமாக அலங்காரம் செய்து தீப ஆராதனை 10.40 மணி வாக்கில் நடந்தது.


பின்னர் தீர்த்தம் ஶ்ரீ பெரியவாளின் திருக் கரங்களால் பெற்றுக்கொண்டோம்.


மொத்தத்தில் அனைத்தும் ஆனந்தமாக

நடந்தது. *சென்னை நங்க நல்லுர் எங்கள் பந்துகளில் ஒருவர் **பட்டுக்கோட்டையை பூர்வீகமாக கொண்ட RTD IAS ஸ்ரீராமசந்தர ஐயர் தகவல் கொடுத்திருந்தார். *கைங்கர்யத்தில் இருந்தவர்கள் பெரியவாளிடம் சொன்னதன் பெயரில் நம்மை பட்டுக்கோட்டை பிராமண சங்க பந்துகளை, ஶ்ரீ பெரியவர்கள் தனி கவனம் கொடுத்து கேட்டுக்கொண்டு ஆசீர்வாதம் செய்தது எமது பாக்கியம். * அவரின் புரிதலில் நம் பந்துகளிடத்தில் ஈர்ப்பு இருந்தது.


ஒருவழியாக பெரியவா தரிசனம் அந்த சனாதன தேடலின் முயற்சிக்கு மஹாபெரியவா ஆசீர்வாதம் கிடைத்த உணர்வோடு இந்த ஓரிக்கை யாத்ரா இனிதாய் அமைந்தது.


அரிதரிது பிராமணராய் பிறத்தல் அரிது அதனினும் அரிது பிராமணர் இனத்தின் சிஷ்டாசாரம் எனும் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் நம் கலாச்சாரத்தை அனுஷ்டித்தல் அதை வழி வழியாக நம்மையும் தனது தர்ம ப்ராச்சரங்கள் மூலமாகக் கடைபிடிக்க வைத்தல் என்று நமது ஶ்ரீ சங்கரமடம் தமது தர்மத்தை இடையறாது செய்து வருகிறது. சங்கரமடமும் இல்லை என்றால் நாம் திண்டாட வேண்டியதுதான்.


ஒரு முறை ஓரிக்கை செல்வோம் முடிந்த காரியங்களில் பற்றில்லாமல் சேவை செய்வோம் இது பிறந்த ஒவ்வொரு பிராமணரின் கடமை.


இவைகளில் பின்னால் நல்ல ஸத்தான குழந்தைகள் குறிப்பா பெண் குழந்தைகள் கலந்து கொண்டது நம் குடும்பத்தின் கோத்திரத்தின் குல வழக்கங்களை அடுத்த தலை முறைக்கு கொண்டு செல்லுபடியாக இருந்தது.


இந்த பயணக் கட்டுரையை நமது பூஜ்யஶ்ரீ பெரியவாளின் பாத கமலங்களிலும்


*மனதின் குரலாக வந்த நம் குல தெய்வமான மஹாபெரியவா பொற் பாதங்களிலும் மாலையாக சமர்பிக்கிறேன்.


Source: Sri பட்டுக்கோட்டை வெங்கடேஸ்வரன்

Comments


bottom of page