Pachai Padaithal
ஒருங்கினைந்த தஞ்சாவூர் மாவட்டங்களில், சில குடும்பங்களில் வீட்டு தெய்வமாக கொண்டாடும் பெண் தெய்வத்திற்கு பச்சை படைப்பதில், தயாதிகளை தவிர வேறு யாரும் கலந்து கொள்ள கூடாது.வீட்டில், பெண், நாட்டுப்பெண் யாராவது கற்பமாக இருந்தால் பச்சை படைக்க கூடாது.
இதற்கு வேண்டிய பொருட்கள்
குழவி, கல்லோரக்கல், வேப்பிலை, ஏழு டம்ளர் அரிசி, ஏழு இளநி, ஏழு வெற்றிலை பாக்கு, பழங்கள், மஞ்சள் தூள், poo, குங்குமம், ஆற்றுமண்,பித்தளை periya அரை adukku, ஏழு முழு தேங்காய், கண் மலர், மூக்கு(சில்வர்), பால், பஞ்சமிருதம், சந்தனம், பன்னீர், வாழை நுனி இல்லை பெரிது, தேன்.
பச்சரிசயை ஊறவைத்து அரைக்கவேண்டும், அந்த மாவில் மாக்கோலம் போட வேண்டும், கொஞ்சம் பாயசத்திற்கு கரைத்து விட வேண்டும்.
முதலில் குழவியை அலம்பி, அடுக்கில் மண் போட்டு , அதில் மேல் குழவியை வைத்து மஞ்சளில் கண், மூக்கு வைத்து , பால், பஞ்சாமிருதம், சந்தனம், தேன், பண்ணீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்து, மீண்டும் மஞ்சளில் வெள்ளி கண், மூக்கு வெயித்து, அதன் மேல் வேப்பிலை சாற்றி (வெள்ளி இல்லாவிடில் மஞ்சளால் சாற்றலாம்). பெரிய குங்குமப்பொட்டு இட்டு பாவாடை, மலர்களால் அலங்காரம் செய்து, அம்பாள் முன் நுனி வாழை இலையை போட்டு, சுற்றிலும் வெல்லம் கலந்த மாவை கொட்டி, உடைத்த தேங்காய் மூடிகள், ஏழு வாழைப்பழ செட்டு, ஏழு இளநீர்கள் வைத்து லலிதா சஹசரநாமம் சொல்லி அர்ச்சனை செய்து வடை பாயசம் , அண்ணம் எல்லாவற்றையும் நெய்வேத்தியம் செய்ய வேண்டும். முதல் நாளே மாவு தயார் செய்ய கூடாது, அன்றே செய்ய வேண்டும். பிறகு தூபம், dheebam காட்ட வேண்டும், நெய்வேத்தியம் செய்த பொருட்களை தயாதிகாரர்களை தவிர வேறு யாரும் சாப்பிடக்கூடாது. பூஜை செய்பவர்கள் அன்று விரதம் இருக்க வேண்டும். வீட்டு பெண்கள், மருமகள்கள் கற்பமாக இருந்தால் பச்சை உடைக்க கூடாது. மறு நாள் எதாஸ்தானம் செய்ய வேண்டும்.
இன்னும் சில குடும்பங்களில் இதே வழிபாடு சற்றே மாறுபட்ட சம்ப்ரதமாய் உள்ளது .
தை, ஆடி வெள்ளிகளில் பச்சை உடைக்கலாம்.
பச்சை படைத்தல் தஞ்சாவுர் மாவட்டங்களில் இந்த முறையைய் கடைப்பிடிப்பார்கள்.இந்த படைத்தல் காவேரி அம்மனுக்காகவும்,எல்லை சுவாமிக்காக்வும் செய்யப்படுகிறது.இதனை ஆடி மாதம் முதல் வெள்ளீ அல்லது கடைசி வெள்ளியில் செய்யலாம். செய்முறை:அதிகாலையில் ஆற்று மணலை எடுத்து வீட்டினுள் ஒரு இடத்தில் பரப்பி அதில் அம்மி குழவியைய் சுத்தம் செய்து சுவற்றில் சாத்தி நிறுத்தி வைக்க வேண்டும்.குழவியில் மஞ்சள் பிள்ளையார் போல் பிடித்து மூக்கு வைக்க வேண்டும்.மையால் கண் வரைய வேண்டும். நைவேத்தியம்:துள்ளு மாவு,பழைய சாதம்,நீர் மோர்,வெங்காயம்,வெற்றிலை,பாக்கு,பழம்.கொஞ்சம் விபூதி,வேப்பிலையில் கற்பூரம் ஏற்றி காமிக்க வேண்டும்.இந்த் நைவேத்தியத்தை வீட்டில் வேலை செய்பவர்கள் அல்லது சித்தாள்களுக்கு கொடுக்கலாம்.
Posted by: Smt. Saroja Venkat
Contact Mail ID :