top of page

PANCHA RAMA KSHETRAS

Thillaivilangam, Vaduvur, Paruthiyur, Mudikondan, Adambar are the five auspicious places specialized as Pancha Rama Kshetras, all located in Thiruvarur District.

Thillaivilagam Ramar

Thillaivilagam.jpg

அருள்மிகு தில்லைவிளாகம் கோதண்டராமர் ஆலயம் திருவாரூர் மாவட்டம் திருத்துரபுண்டி தாலுகாவில் உள்ளது. வேலூர்தேவர் எனும் ராம பக்தர் கனவில் ராமர் கோவில் கட்ட தெய்வீக உத்தரவு வர, அதனை நிறைவேற்ற கட்டுமான பணிகளைமேற்கொண்டார். அஸ்திவாரம் சில அடிகள் தோண்டியவுடன் செங்கற்கள் தெரிந்தன. மேலும் ஆழமாக தோண்டியதும் ஒருகோவிலே புதைந்து கிடப்பதை கண்டார். 1862டில் சிறியதாக ஒரு கோவிலை எழுப்பினார். கம்பீரமான இந்த திருமேனிக்கு‘ஸ்ரீ வீர கோதண்டராமர்’ என்று பெயர். 1905க்கு பின்னர் கோவில் விரிவாக்கப்பட்டது. இந்த ஆலயத்தின் பின்புறம் கோவில்குளம் ராம தீர்த்தமும், தெற்கில் சீதா தீர்த்தமும், வடக்கில் அனுமார் தீர்த்தமும் உள்ளது. இந்த தீர்த்தங்களில் தை, ஆடிஅமாவாசைகளில் பெருந்திரளாக பக்தர்கள் புனித நீராடுகின்றனர். சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன்செலுத்துகிறார்கள். நடராஜருக்கும் இந்த கோவிலில் சன்னதி உள்ளது. இந்த தில்லைவிளாகம் கோவிலில் சிவனையும்,பெருமாளையும் ஒன்று சேர தரிசிக்கலாம். பகை விலக, புத்திர தோஷம் தீர்க்க தில்லைவிளாகம் வீரகொதண்ட ராமரைதரிசிக்கலாம். இந்த கோவிலில் ராம நவமி, ஹனுமார் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, கார்த்திகை, நவராத்திரி வைகுண்டஏகாதசி, தை, ஆடி அமாவாசை திருவிழாக்கள் நடைபெறும்.

Vaduvur Ramar

Vaduvur.jpg

அருள்மிகு வடுவூர் கோதண்டராமர் ஆலயம் திருவாரூர் மாவட்டம் வடுவூர் தாலுகாவில் உள்ளது. வனவாசம் முடித்தபிறகு,ராமபிரான் அயோத்திக்கு கிளம்ப தயாரானார். அப்போது வனத்தில் அவரது தரிசனம் பெற்ற மகரிஷிகள், அவரைத்தங்களுடனேயே இருக்கும்படி வேண்டினர். ராமர் தனது உருவத்தை சிலையாக செய்து, தான் தங்கியிருந்த இடத்தின்வாசலில் வைத்து விட்டார். ரிஷிகள் அந்த சிலையைப் பார்த்தனர். அதன் அழகில் லயித்து, ராமபிரானிடம், ""ராமா! இந்தச்சிலை உயிரோட்டம் உள்ளதாக உன்னைப் போலவே இருக்கிறது. அதை நாங்கள் வைத்துக் கொள்ள விரும்புகிறோம்,''என்றனர். சிலையின் அழகில் மயங்கியிருந்த ரிஷிகள், தாங்கள் பூஜிக்க அச்சிலையை தரும்படி கேட்டனர். அதன்படி ராமர்அவர்களிடம் சிலையை கொடுத்துவிட்டு, அயோத்தி திரும்பினார். பிற்காலத்தில், திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த பெருமாள்பக்தர்கள் இந்த சிலையை பூஜித்து வந்தனர். அந்நியர் படையெடுப்பின்போது, பாதுகாப்பிற்காக இச்சிலையை தலைஞாயிறுஎன்னும் தலத்தில் மறைத்து வைத்தனர். தஞ்சை மராட்டிய அரசர் சரபோஜி மஹாராஜர் தலைஞாயிறு எனும் இடத்தில்,அரசமரத்தடியில் விக்ரஹங்கள் இருப்பதாக கனவு கண்டார். அங்கு தோண்டியதில் கிடைத்த அற்புதமான ராமர் சீதை,லக்ஷ்மணன், ஆஞ்சநேய விக்ரஹங்களை, வடுவூர் ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ கோபாலன் கோவிலுள் பிரதிஷ்டைசெய்தார். இந்த வடுவூர் ராமர் பேரழகு. பிரகாரத்தில் ஹயக்ரீவர், விஷ்வக்ஷேனர், ஆண்டாள், ஆழ்வார்கள் சன்னதிகள்உள்ளன. தட்சிண அயோத்தி என்று அழைக்கப்படும் இந்த ஆலயந்தின் கோவில் குளம் ஸ்ரீ சரயு தீர்த்தம். சுவாமிக்குதிருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இந்த கோவிலில் ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, திருவிழாக்கள்இங்கு பிரசித்தம்.

Paruthiyur Ramar

Paruthiyur Ramar.jpg

அருள்மிகு பருத்தியூர் ராமர் ஆலயம், திருவாரூர் மாவட்டம் கொடவாசல் தாலுகாவில் உள்ளது. சூரியன் சிவனை எண்ணிதவம் இருந்த இடம், ராம லக்ஷ்மணர் சூரிய நமஸ்காரம் செய்த இடம் பருத்தியூர். தெற்கு நோக்கியுள்ள சன்னதியில்பரவசமூட்டும் பருத்தியூர் ராம பரிவாரம். ராமாயண சொற்பொழிவுகள் செய்து நூற்றிற்கும் மேல் பட்டாபிஷேகங்கள் நடத்திப்ரவசன சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த பிரம்மஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் கட்டிய ஆலயம் இது. ராமருக்குகோவில் கட்டவேண்டும் என்பதில் அவருக்கு சிறு வயது முதல் ஆசை. ஆலயங்களை சீர்திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஸ்ரீ ராமரே கனவில் வந்து, தடாகம் அமைக்குமாறு கேட்க, ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று இருக்கும் போதுதடாகம் கட்ட உத்தரவு வருகிறதே என்று வியந்தார். குளம் கட்ட ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார். ராம பக்தரானசாஸ்திரிக்கு மிகப்பெரும் ஆச்சர்யம் காத்திருந்தது. தடாகம் கட்ட நிலம் வாங்கி, ஆட்களை வைத்து செடி கொடிகளைகளைந்து, நிலத்தைத் தோண்டியபோது கிடைத்தன இந்த பழமை வாய்ந்த அழகிய விக்ரஹங்கள். பாரதமெங்கும் ராமர் கதைசொல்லி, ராமநாம பாராயணம் செய்து, ராமர் மேல் சங்கீதங்கள் பாடி, தன் இஷ்டதெய்வத்திற்கு ஒரு அழகான கோவிலைஅமைத்தார். இக்கோவிலில் வரதராஜர், மகாலட்சுமி, விஸ்வநாதர், விசாலாக்ஷி உள்ளன. தில்லைவிளாகம் போல் இங்கும்சிவனையும், பெருமாளையும் ஒன்று சேர தரிசிக்கலாம். இந்த ஆலயத்தின் கோவில் குளம் ஸ்ரீ கோதண்டராம தீர்த்தம்.வேதம், இசை, கதாசொற்பொழிவு, நாமசங்கீர்த்தனம் போன்றவற்றில் புகழும் வெற்றியும் பெற்று பேரின்பம் பெற இது ஒருசிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகும். கோவிலில் சுவாமிக்கு நாமஸ்மரணம், துவாதச பிரதக்ஷணங்கள், அர்ச்சனைகள் செய்துவேண்டுவது வழக்கம். இங்கு சன்னதியில் கொடுக்கும் துளசி தீர்த்தம் மிக சக்திவாய்ந்தது, விசேஷமானது. இந்த கோவிலில்பருத்தியூர் பெரியவா ஆராதனை, ஸ்ரீராமநவமி, கிருஷ்ணஜெயந்தி, நவராத்திரி, ஹனுமார்ஜெயந்தி பண்டிகை திருநாள்திருமஞ்சன பூஜைகள் நடைபெறுகின்றன.

Mudikondan Ramar

Mudikondan.JPG

அருள்மிகு முடிகொண்டான் ராமர் ஆலயம், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில் உள்ளது. திருவாரூரிலிருந்துமயிலாடுதுறை போகும் வழியில் உள்ளது மகுடவர்தனபுரம் எனும் முடிகொண்டான். ஊரின் பெயருக்கு ஏற்றாற்போல்தலையில் மகுடத்துடன் காணபப்டுகிறார் ராமர். பரத்வாஜர் தவம் செய்த இடம் முடிகொண்டான். மூலவர் ராமர், சீதை,லக்ஷ்மணர் மட்டுமே. ஸ்ரீராமர் இலங்கை செல்லும் வழியில், பரத்வாஜ முனிவர் அளித்த விருந்தை இலங்கையிலிருந்துதிரும்பும் போது ஏற்பதாக உறுதி கொடுத்தார். இந்தக் கோவிலில் மூலவர் ஆஞ்சநேயர் இல்லை. ராமரின் வருகை பற்றிபரதரிடம் முன்கூட்டியே தெரிவிப்பதற்காக ஆஞ்சநேயர் போய்விட்டார் என்பது புராணம். ஸ்ரீராமரை அரசராக உடனே பார்க்கபரத்வாஜர் ஆசைப்பட, பரத்வாஜர் ராமனுக்கு முடிசூட்ட, ஸ்ரீராமர் மகுடத்துடன் இங்கு கிழக்கு நோக்கி தரிசனம் தருவதாகஐதீகம். ஹனுமாருக்கு தனியாக வெளியே ஒரு சன்னதி உள்ளது. பரத்வாஜர் ராமனுக்கு முடிசூடியதை பார்க்காததால்அனுமார் கோபித்து வெளியே நிற்கிறார் என்றும் சொல்லுகிறார்கள். ரங்கநாதருக்கு இங்கு தெற்கு நோக்கி சன்னதி உள்ளதுஇந்த ஆலயந்தின் மிகப்பெரிய கோவில் குளம் ஸ்ரீ ராம தீர்த்தம் உள்ளது.சுவாமிக்கு பிரதக்ஷணங்கள், அர்ச்சனைகள் செய்துநேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகள், மற்றும் ராம நவமி திருவிழாக்கள் இங்கு பிரசித்தம்.

Adambar Ramar

adambar ramar.jpg

அருள்மிகு அதம்பார் கோதண்டராமர் ஆலயம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் உள்ளது. இந்த அதம்பார்கிராமத்தின் அருகில் தாடகாந்தபுரம், நல்லமான்குடி, வலங்கைமான், கொல்லுமான்குடி, பதகசேரி, என்ற சிறிய கிராமங்கள்ராமாயணத்துடன் தொடர்பு உடையவை. தாடகையை வதம் செய்த இடம் தாடகாந்தபுரம், அழகிய மானை சீதை பார்த்தஇடம் நல்லமான்குடி, மான் வலப்புறம் துள்ளி ஓடிய இடம் வலங்கைமான், மாயா மாரீசன் என்று அறிந்து, அதனை வதம்(ஹதம்) செய்ய முடிவெடுத்த இடம் அதம்பார், மானைக் கொன்ற இடம் கொல்லுமான்குடி, தன் பாத அணிகலன்களை சீதைகழட்டிய அடையாளம் காட்டிய இடம் பதகசேரி. தெளிவாக சிந்தித்து மாரீசனை கொல்ல (ஹதம் செய்ய) முடிவு செய்தஇடத்தில் அதம்பார் ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் விக்ரஹங்கள் ஸ்ரீ ராமர், சீதை. லக்ஷ்மணர், ஆஞ்சநேயர்,மற்றும் மான் உருவில் மாரீசன் மற்றும் பிரதான மூலவர் அதம்பார் வரதராஜ பெருமாள். இங்கு புரட்டாசி சனிக்கிழமைகள்,மற்றும் ராம நவமி திருவிழாக்கள் பிரசித்தம்.

பஞ்ச ராமர் ஸ்தலங்களுக்கு பக்தியுடன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு, அவற்றின் மஹிமை அறிந்து, தரிசித்து பூஜைகள் செய்பவர்கள், பகை விலக, புத்திர தோஷம் நீங்கி, கிரகதோஷங்கள் மறைந்து, உயர் கல்வி பெற, பிரிந்த குடும்பங்கள் மற்றும் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர, குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிலவ, நியாய நல்ல சிந்தனை உண்டாக, சித்தசுத்தி பெற்று, தெளிவான முடிவுகள் எடுக்க, பெற்றோர் சொல் கேட்கும் குழந்தைகள் பிறக்க, நல்ல பிள்ளைகள் ஈன்று, கல்வி, மற்றும் கலைகளில் புகழும் வெற்றியும் பெற்று, சகல நன்மைகளும் உண்டாகி, பஞ்ச ராமரின் அனுக்ரஹத்தால் வேண்டியவைகளும் கிடைக்கபெற்று, எல்லா நலனும் பெருகும் என்பது ஐதிகம்.

Image Source: The Hindu(for some of the pictures)

Reference: skyaasoori.shutterfly.com/dinamorudivyadesam.

Courtesy:

C. Raman Kaushik

1,972 views1 comment
bottom of page