Sree Brahmendhra Saraswathi Swamigal
திருக்குடந்தை சோலையப்பன் தெரு பல வேத விற்பன்னர்களை ஈன்ற பெருமை உடையது. குடந்தை சோலையப்பன் தெருவைச் சேர்ந்த ரிக் வேத விற்பன்னராகிய ஸ்ரீ கச்சபேஸ்வர சாஸ்திரிகள், மந்திர, யந்திர சாஸ்திரங்களிலும் சிறந்து விளங்கினார்.ஆசார சீலராகிய அவர் காஞ்சி சங்கரமடத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். தன்னலமற்று பல நற்காரியங்களை செய்து வந்த அவர் பிறகு சன்னியாசம் ஏற்று 'ஸ்ரீ பிரம்மேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்' என்று அழைக்கப்பட்டார். அவருடைய சமாதி சோலையப்பன் தெருவில் உள்ளது. வருடந்தோறும் ஆராதனை விழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தன் தந்தையாரைப் பற்றி அவருடைய மூத்த புதல்வராகிய ஸ்ரீ கே. பிச்சுமணி அவர்கள் கூறுவதைக் கேட்போம். அவருடன்
இக்காணொளியில் உரையாடுபவர் சோலையப்பன் தெரு ஸ்ரீராம பஜன சபாவின் நிர்வாகி ஸ்ரீசேதுராம சர்மா அவர்கள்.
Courtesy: Smt. Malathi Jayaraman, Kumbakonam