ஸ்ரீ ராம ஜயம்
தஞ்சாவூர் பரம்பரை
தஞ்சாவூர் பரம்பரை -- 3
தஞ்சாவூர் பரம்பரையைப்பற்றி இதுவரை இரண்டு கடிதங்கள் எழுதியிருக்கிறேன் . இது மூன்றாவது கடிதம் . போன கடிதத்தில் தஞ்சாவூர் பரம்பரை என்றால் என்ன என்பதை மட்டிலும் எழுதிவிட்டு விஸ்தாரமாக ஏதும் எழுத வில்லை.இந்தப்பரம் பரையை மறுபடி எப்படிக்கொணருவது என்ற கேள்வியை மட்டும் கேட்டு விட்டுவிட்டேன். அது தான் முக்கியமான பாகம் .
தற்கால நிலையைப்பற்றி சற்று யோசித்தேன். 21-ம் நூற்றாண்டு மிகவும் மாறிவிட்டது. நாம் செய்யும் காரியம் அதற்கேற்றார்ப்போல இருக்கவேண்டும். நகரங்கள் அதிகம் ஏற்பட்டபிறகு, பல தொழில்கள் இயந்திரத்தின் மூலமாகவே இன்று நடைபெற்றுவருகின்றன. எண்ணைச்செக்கு கள் கிடையா வெள்ளையடிப்பது இன்று சுலபமாகிவிட்டது. சுண்ணாம்பு தேவையில்லை. சமூக ரீதியாக, பறைச்சே ரிகள்மாய்ந்துவிட்டன. பால் பாக்கட்டில் கிடைக்கிறது.நெசவாளர்கள் இல்லை. நெசவாலைகள் வந்துவிட்டன .ஜவுளிக்கடையில் உயர்தரப்பட்டு சேலைகளும் வேஷ்டிகளும் கிடைக்கும். இந்தத்தொழில்களை இன்று யாரும் செய்வதில்லை.ஆனாலும் விவசாயம் இன்றும் உள்ளது. வாணிபம் உள்ளது. கோயில், குளங்கள் உள்ளன. அவை பெருகவும் செய்வதையும் காண்கிறோம். இன் றைய நிலையில் இத்தொழில்களை தான் நாம் விருத்தி செய்ய முடியும். விவசாயத்திற்கான பசுக்களை விருத்தி செய்யமுடியும்.பசுவதையையும் தடுக்கமுடியும் அநேக காரியங்க ளைச்செய் யமுடியும். பசுந்தழைகளைசேர்த்து (GREEN MANURE) செய்ய முடியும். பசுவின் சாணம் கொண்டு முடிந்த அளவில METHANE GAS-ம் கிராமங்களில் உற்பத்தி செய்ய முடியும்.மிகப்புராதனமானவை யும் , நிரம்பசக்தி வாய்ந்தவையுமான கோயில்களை புனருத்தாரணம் செய்து அங்குகாலந்தவறாத, பூஜை முறையையும் மறுபடி கொணர முடியும் பலகாலமாக ஓ டாத தேரையும் ஓடவைக்க முடியும். இவ்வாறெல்லாம் செய்தால் கிராமத்து ஜனங்களுக்கு நல்லது.
பல மாதங்களுக்கு முன் இந்த பரம்பரை ஏற்பாட்டின் தொடக்கத்தில் நான் ஒன்று சொன்ன தை இன்று நினைவு கூர்கிறேன். அது தஞ்சை ஜில்லாவை தாலுகா வாரி யாக ஆறு பாகங்களாகப்பிரித்து, அவைஒவ்வொன்றிலிருக்கும் பெரியதனக்கார ர் களையணுகி , அவருக்கு இந்த ப்ராஜக்டை விவரித்து, அவருடையவும், அவரைச் சேர்ந்தவர்களுடைய வும் துணையுடன் இந்தப்ராஜக்டைச் செயல்படவைக்க வேண் இரண்டிரண்டுபேர்களாக நாம் இதையணுகவேண்டும். இதைத்தவிர வேறு வழி எனக்குத்தெரியவில்லை.
தொடரும்...
Text Content Courtesy:
Sri. S.Chidambaresa Iyer, Chennai