top of page

Manivasakar and Avudaiyar temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.

பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

*கோவை கு. கருப்பசாமி.*

""""""""""""'''''''''"""""""""""""""""""""""""""""""""""

*திருவாதிரைச் சிறப்பு:*

"""""'""""""""""""""""""""''""""""""""""""""""""""""""""""""""""""

*மணிவாசகரும், ஆவுடையார் கோயிலும்:*

ஆவுடையார் திருக்கோயிலிருக்கும்

சுவாமி ஆத்மநாதர்.

அம்பாள் யோகாம்பாள்.

மூர்த்தி மாணிக்கவாசகர்.

இங்கு, சிவதீர்த்தம், அக்கினி தீர்த்தம், தேவதீர்த்தம், முனிவர் தீர்த்தம், அசுர தீர்த்தம், வாயு தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம தீர்த்தம், அறுபத்து நான்கு கோடித் தீர்த்தம், வெள்ளாறு, திருத்தொட்டித் தீர்த்தம் போன்றவையாகும்.

காமதேனுப் பசு வழிபட்ட மகிழமரம் தலவிருட்சமாக உள்ளது.

பொதுவாக, சிவபெருமான் திருக்கோவில்களில், இராஜகோபுரத்தை அடுத்து முதலில் பலிபீடம், நந்தி, கொடிமரம் இருக்கப் பெறும்.

மேலும், கோவில்களில் நடைபெறும் நாள்பூசை, விழாக்களில் நாதசுரம், மேளம், பேரிகை, சுத்தமத்தளம் முதலிய வாத்தியங்கள் முழங்கப்படுவது உண்டு.

இத்தகைய வாத்திய ஒலிகளை ஆவுடையார் திருக்கோயிலில் கேட்க முடியாது. திருச்சின்னம், சங்கு, மணி முதலியவற்றின் ஒலிகள் மட்டுமே ஒலிக்கச் செய்யப்படும்.

சிவன் இத்தலத்தில் கருவறையில் அரூபமாகவும், அருவுருவமாக குருந்தமர வடிவிலும், (தலவிருட்சமாக) உருவமாக மாணிக்கவாசகராகவும் அருளுகிறார்கள்.

இங்கு குருந்தமரத்தை சிவனாகக் கருதுவதால், கார்த்திகை சோமவாரத்தில் இந்த மரத்தின் முன்பாக நூற்றியெட்டு சங்காபிஷேகம் நடக்கிறது.

மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே இருக்கிறார். இதன்மீது ஒரு குவளை சார்த்தப்பட்டிருக்கிறது.

குவளை உடலாகவும், குவளையினுள் இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது.

இதன் காரணமாகதானதாலும், ஆத்மாக்களை காத்தருள்பவர் என்பதாலும் சுவாமிக்கு *“ஆத்மநாதர்”* என்று பெயர் உண்டானது.

ஆறு கால பூஜையின்போதும், இவருக்கு நூற்றியெட்டு மூலிகைகள் கலந்த தைல முழுக்கு நடப்பது மிகச் சிறப்பு.

தட்சனின் யாகத்திற்கு சிவனை மீறிச் சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, அம்பாள் இத்தலத்தில் அரூப வடிவில் தவம் செய்தாள்.

எனவே, இங்கு அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை. அவள் தவம் செய்த போது, இப்பதியில் பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடக்கிறது.

இந்த பாதத்தைப் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதிபலிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அம்பாள் சன்னதி எப்போதும் அடைத்தே இருக்கும் என்பதால், சன்னதி முன்புள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும்.

ஆவுடையார் கோயிலில் நவக்கிரக சன்னதி இல்லை. ஆனால், நவக்கிரகத் தூண்கள் வைக்கப் பட்டுள்ளன.

சூரிய, சந்திர கிரகணங்களின்போது எல்லாக் கோயில்களிலும் பூஜை செய்யமாட்டர்கள். ஆனால், இந்த ஆவுடையார்கோயிலில் கிரகணநாளிலும் ஆறு கால பூஜை நடக்கிறது.

ஆவுடையார் கோவிலில்தான் மாணிக்கவாசகர் திருவாசகம் எழுதினார்.

இங்குள்ள தேர் தமிழகத்திலுள்ள பெரிய தேர்ககளுள் ஒன்றாகும்.

திருவில்லிப்புத்தூர் திருநெல்வேலி, திருவாரூர் ஆவுடையார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள தேர்கள்தான் தமிழகத்தில் உள்ள கோயில்களின் தேர்களில் மிகவும் பெரிய தேராகும்.

இந்த ஆவுடையார்கோயில் தேரை இழுக்க சுமார் ஐயாயிரம் பேர் கூடினால்தான் இழுக்க முடியும். *இதில் அதன் அடங்காத் தன்மையின் வெளிப்பாடு.*

*அபூர்வ சிற்பங்கள்:*

டுண்டி விநாயகர் சிற்ப உருவம்,

உடும்பும் குரங்கும்,

கற்சங்கிலிகள், சங்கிலியின் நுனியில் பாம்பு ஒன்று பின்னிக்கொண்டு தலையினைக் காட்டுவது.

இரண்டே தூண்களில் ஓராயிரம் கால்கள்.

ஆயிரத்தெட்டு சிவாலயங்களில் உள்ள இறைவன் இறைவியர் திருவுருவங்கள்.

பலநாட்டுக் குதிரையின் சிற்பங்கள்.

அனைத்து நட்சத்திர உருவச் சிற்பங்கள்.

நடனக்கலை முத்திரை பேதங்கள்.

சப்தஸ்வரக் கற்தூண்கள்.

கூடல்வாய் நிழல் விழும் பகுதி பசுமாட்டின் கழுத்து போன்று காணப்படுபவை.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமகனார் பாடி வைத்த

*கடல் கிழக்கு தெற்கு கரைபெரு வெள்ளாறு குடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில் ஏனாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம் சோனாட்டிற் கெல்லையெனச் சொல்-*எனவும்,

*வெள்ளாறது வடக்காம் மேற்குப் பெருவெளியாய் தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளாரஆண்ட கடல் கிழக்காம் ஐப்பத்தறு காதம் பாண்டிநாட் டெல்லைப் பதி-*என்றும்,

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமகனார் பாடிவைத்த *தெற்கு கரை பெரு வெள்ளாறு வெள்ளாறு வடக்காம் என்று வருகின்ற சோழ நாட்டின் தெற்கு எல்லையாகவும் பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையாகவும் இருந்து சிறப்புப் பெற்ற அந்த வெள்ளாறு இன்றளவும் குன்றாச் சிறப்போடு விளங்குகிறது.*

அதற்குக் காரணம் கவிச்சக்கரவர்த்தி கம்பனால் பாண்டிய நாட்டின் எல்லையென கூறப்பட்டுள்ள வெள்ளாற்றின் தென்கரையிலே பாண்டிய நாட்டு மன்னனாகிய அரிமர்த்தன பாண்டியரின் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் எழுப்பப் பெற்ற திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் இன்றளவும் வாழ்வாங்கு வாழ்ந்து வளரும் தமிழ்கலைக்குக்

கட்டியம் கூறுவது போல அமைந்திருப்பதே ஆகும்.

ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுப்பப்பட்ட இந்தக் கவிபாடும் கலைக் கூடத்தின் சிறப்புகளை ஒரு சிறு பதிகத்தில் சொல்லி அடக்கி விட முடியாது.

அடங்காமை என்று கூறுவார்களே, அந்த அடங்காமை இந்த ஆவுடையார்கோயிலுக்கு மிகவும் பொருந்தும்.

புதிதாகக் கோவில்கள் கட்டுகிற ஸ்தபதியார்கள் கூட ஆவுடையார்கோயில் சிற்ப அடங்கலுக்குப் புறம்பாக என்று தங்களது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு எழுதுவதிலிருந்தே இந்தக் கோயிலின் கலைத்திறன் வேறு எந்தக் கோயிலிலும் அடங்காது என்பது தெளிவாகும்.

தமிழகத்திலுள்ள ஆலயங்கள் எல்லாவற்றிலுமே உருவ வழிபாடுதான் நடைபெற்று வருகின்றன.

ஆனால் இந்த ஆத்மநாதர் ஆலயத்தில் மட்டுந்தான் அருவ வழிபாடு நடைபெற்று வருகிறது.

மூலஸ்தானத்தில் எந்த விதச் சிலையும் கிடையாது. அப்படிப் பார்த்தாலும் இது மற்ற கோவில்களில் அடங்காத கோயில் என்பது சொல்லாமலே விளங்கும்.

ஆவுடையார் கோயிலை பூதம்தான் கட்டிற்று என்று இவ்வட்டார மக்களின் நம்பிக்கை. பெரிய பாறைகளைக் கொண்டு வந்து தூண்கள் அமைத்தும் சிலைகள் வடித்தும் கொடுங்கைக் கூரைகள் இணைத்தும் மதில் சுவர்கள் கோபுரங்கள் எழுப்பியும் கட்டிவிக்கப்பட்டுள்ளது.

கோயிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள் கல்லை தேக்கு மரச்சட்டம் போல் இழைத்து அதில் (கம்பிகளை இணைத்துச் சேர்த்து அதிலே குமிழ் ஆணிப்பட்டை ஆணிகள் அறைந்திருப்பது போல) எல்லாமே கல்லில் செய்து அதன் மீது மெல்லிய ஓடு வேய்ந்திருப்பது போல செய்திருப்பது சிற்பக்கலை வியக்கத் தக்க ஒப்பற்ற திறனாகும்.

ஒரு கல்லுக்கும் மறு கல்லுக்கும் எப்படி எந்த இடத்தில் இணைப்பு சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தாழ்வாரம் எனப்படும் கொடுங்கைக்கூரையானது மொத்தம் பதிமூன்றரை அடி நீளமும் ஐந்தடி அகலமும் இரண்டரையடி கனமும் உள்ளதாகும்.

இந்த இரண்டரையடி கனத்தை இப்படி தாழ்வாரக் கூரையாக்கி செதுக்கிச் செதுக்கி ஒரு அங்குல கன்னமுள்ள மேலோடு அளவிற்குச் சன்னமாக ஆக்கப்பட்டிருக்கிறது.

திருவலஞ்சுழி பலகணி, திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு.

இதன்மூலமாக கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும்.

திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும்.

திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது.

ஆவுடையார்கோயில் கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும்.

இதே மண்டபத்தில் பத்திலிருந்து பதினைந்து வளையங்கள் வரையான வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான கற்சங்கிலி செதுக்கப்பட்டு உயரத்தில் பொறுத்தித் தொங்க விடப்பட்டுள்ளது.

இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை.

மாணிக்கவாசகர் சோதியிலே கலந்துள்ளார்

என்பதாலேயே தீபம் தருவதில்லை.

இங்கு, புழுங்கல் அரிசியினால் நெய்வேத்தியம் செய்யப்படுகிறது.

ஆறு கால பூசைக்கும் தொடர்ந்து அமுது படைத்துக் கொண்டிருப்பதனால் ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கு உள்ள அமுது படைக்கும் அடுப்பின் நெருப்பு அணைந்ததேயில்லை.

சமயக் குரவர்கள் நால்வருள் மணிவாசகர் ஒருவர்.

சிவனடியார்கள் பலர் இருந்தாலும் சிவனுக்கு மிக நெருக்கமானவர்களுள் முக்கியமானவர்களுள் இவரும் ஒருவர்.

பாண்டியவள நாட்டில் வைகை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் *திருவாதவூர்* என்னும் ஊரில் அமாத்தியர் மரபில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார்.

இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வாதவூரர்.

இவர் ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.

பதினாறு வயதுக்கு முன்னமே இவர் கல்வி, கேள்வி, ஒழுக்கம், அறிவு, ஆற்றல் இவற்றில் சிறந்து விளங்கினார்.

இவர் வேத வித்தகர். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை, பொழுதேனும் கூறிக் கொண்டிருப்பார்.

இவரது அறிவாற்றலைப் பற்றி கேள்விப்பட்ட மன்னன் அரிமர்த்தன பாண்டியன், இவரை வரவழைத்து அமைச்சர் பதவியை அளித்து *தென்னவன் பிரமராயன்* என்ற பட்டத்தை கொடுத்துப் பணிசெய்ய பணித்தான்.

பதவி, செல்வம் அனைத்தும் இருந்தும் இவை மட்டும் வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை சிந்தித்த வாதவூரர், சைவ சித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாட்டை பின்பற்றி ஒழுகினார்.

ஒருசமயம், சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்ட மன்னன் வாதவூராரை குதிரைகள் வாங்கி வரும்படி பணித்தான்.

அதற்குத் தேவையான பொன்னைக் களஞ்சியத்தில் இருந்து எடுத்துக் கொண்டு படைவீரர்களுடன் புறப்பட்டார்.

அப்போது, சிவபெருமான் தன் திருவிளையாடலை நிகழ்த்த முடிவு எடுத்து விட்டார்.

அவர் ஒரு குருவைப் போல வேடம் பூண்டு திருப்பெருந்துறை என்னும் தலத்தில் போய் ஒரு குருந்த மரத்தடியில் அமர்ந்து கொண்டார்.

திருப்பெருந்துறையை அடைந்து விட்ட வாதவூரார் இங்கேயே தங்கும் படி தன் படையினருக்கு உத்தரவிட்டார்.

வாதவூரர் ஆத்மநாதர் கோயிலுக்குள் சென்றார்.

இங்கு மூலஸ்தானத்தில் லிங்கத்திருவுரு கிடையாது. ஆண்டவன் உருவமில்லாது இருக்கிறார் என்று தத்துவம்.

ஆவுடையார் மட்டும் இருக்கும். மேலே லிங்கத்திருவுரு கிடையாது. லிங்கத்திருவுரு இருக்க வேண்டிய இடத்தில், ஒரு குவளையை கவிழ்த்து வைத்திருக்கிறார்கள்.

வாதவூரர் இங்குள்ள புஷ்கரணியில் நீராடி, உடலெங்கும் வெண்ணீறு பூசி, சிவப்பழமாக, கோயிலுக்குள் சென்று உருவமற்ற இறைவனை, மனதுக்குள் உருவமாக்கி உருகி உருகி வணங்கினார்.

அதன்பின், பிரகாரத்தை வலம் வந்தார். பிரகாரத்திலுள்ள குருந்தமரத்தடியில் தெட்சிணாமூர்த்தியாய் அமர்ந்திருந்த சடை தாங்கிய சிவத்தொண்டரைக் கண்டார்.

அவர் முன் நெடுஞ்சான் கிடையாய் விழுந்து வணங்கி பாமாலை பாடினார்.

இவர் தான் சிவம் என்று வாதவூராருக்கு உறுதியாகத் தெரிந்து விட்டார் போல.......

இதற்கேற்றாற் போல், தன் திருவடியைத் தூக்கிய சிவன், தன் முன்னால் பணிந்து விழுந்த