top of page

Devotee Experience at Orikkai

சந்திரமௌலீஸ்வரர் ப்ரஸாத மஹிமை


மஹா பெரியவா சரணம். போஜனம்! ஸ்ரீமடத்தில் போஜனம்!! மஹாபெரியவா ஆசீர்வாதத்தில் போஜனம்!!!


பிராமணர்கள் நம் வழக்கத்தை விட்டு விட்டோம் .

2500 + வருட தொன்மையான ஸ்ரீமடத்தில் அன்னம் போஜனம் அருமருந்தாய் அமிழ்தமாய் போஜனம் செய்தோம். லெங்காயமில்லை பூண்டில்லை சுவையூக்கிகள் இல்லை ஆனால் சர்க்கரை பொங்கல் தேனாய் இனித்தது சுகர் வந்தவாளும் இந்த பொங்கலை சாப்பிட்டால் இன்சுலின் இயற்கையாக சுரக்கும் சந்தேகமமில்லை. அவியல் அடாடா சேனைக்கிழங்கு + பீன்ஸ்+ வாழைகாய் + கேரட் காமினேஷன் Ultimate taste.


பருப்பு சாதம் கத்தரிக்காய் சாம்பார் அது ஒரு தெய்வீக அனுபவம்.


ரஸமா அல்லது மிளகு கலந்த மருந்தா செல்களில் உள்ள செல் கழிவுகளை ரேபிட் முறையில் வெளியேற்றும் மருந்து. ரஸத்தை மட்டுமே இரு முறைக்குமேல் சாப்பிட்டேன்.


வெண்டைக்காய் தயிர் பச்சடி இல்லை தேவாமிருதம் அந்த தயிர் அடாடா அருமை அருமை .அந்த தயிர் 2500 ஆண்டுகள் பழமையானது தொடரானது. இன்று அந்த தயிரில் நான் இருக்கிறேன் போடா போ மஹா பெரியவாளே சொன்னது போல் இருந்தது. ஔஷதமான தயிர் உடம்பில் செல் ஈகாலஜிகல் வளர் சிதை மாற்றத்தின் மருந்து.


தயிர் சாதம் ஜாதி நாரத்தங்காய் ஊருகாய் எல்லாமே அமிர்தம்.


உணவுக்கு அக்னியே பிரதானம் ஸ்ரீமடத்தின் உக்ராணத்தின் அக்னியின் வயதை காலத்தை கணக்கிட முடியாது .நீங்கள் சொல்லலாம் கேஸ் அடுப்பு தானே என்று இல்லை அங்கு அக்னி தேவதை வேதமந்திரத்தால் கட்டுப்பட்டது அந்த அக்னியாகப்பட்டது தெய்வாம்சம் பொருந்திய அன்னத்தை விளைவிக்கிறது. அதில் அந்த தேவதையின் சாரத்தில் அக்னியாக இருந்து மஹா பெரியவா அந்த உணவை நமக்கு சமைத்துக்கொடுக்கிறார் .தீராத வியாதியும் தவமாய் இருந்து ஒரு மண்டலம் அந்த தெயவீக போஜனத்தை சாப்பிட்டால் தீரும். இது மஹா பெரியவாளின் தேவ வார்த்தை .


நம்புங்கோ ஸ்ரீமன்நாராயணணின்

ப்ரேமை.

Comments


bottom of page