Jayanti Mahotsavam of Pujyashri Sri Shankara Vijayendra Saraswati Mahaswami ji - Svarna Pada Puja & Kesara Pushparcanam
- Thanjavur Paramapara
- 2 hours ago
- 3 min read

Suvarna Pada Pooja to the 70th Jagadguru Shankaracharya of Moolamnaya Sarvajna Shri Kanchi Kamakoti Peetham Sri Shankara Vijayendra Saraswati Mahaswami ji by his Uttaradhikari sishya Sri Satya Chandrashekharendra Saraswati Mahaswami Ji.
नमामः शङ्करान्वाख्य-विजयेन्द्र-सरस्वतीम्।
श्रीगुरुं शिष्ट-मार्गानुनेतारं सन्मति-प्रदम् ॥
सत्यनारायणक्षेत्रात् सत्यव्रतमुपागतम्।
आश्रये कामकोटीशं सत्यश्रीचन्द्रशेखरम् ॥




ஜகத்குரு பூஜ்யஶ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார் அருளுரை
சமுதாய சேவை செய்ய நிறைய எண்ணிக்கையில் இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் முன் வரவேண்டும்- 58வது ஜயந்தி விழாவில் ஜகத்குரு பூஜ்யஶ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார் அருளுரை.
இன்று ஒரு புதுவிதமான நிகழ்சி. ஜணங்களுடைய ஆகாங்க்ஷை, சில சங்கல்பங்கள் ஜனங்களுக்காக என்றால், ஜனங்களே சில சங்கல்பங்களை செய்து கொள்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் ஆதிசங்கர பகவத் பாதர்களை நினைத்து அவரது சொர்ண பாதுகைகளை ஆராதித்தோம். இந் நிகழ்சி பக்தர்கள் நம்மீது கொண்ட அபிமானம், வாத்ஸல்யம், நம்பிக்கை முதலியவற்றின் வெளிப்பாடு. அவர்களின் உத்ஸாகம் உத்ஸவமாக மாறியது. இப்போது கூட ஒரு சாஸ்த்ரோத்ஸவம் எனும் உத்ஸவத்தில் கலந்துகொண்டு வந்துள்ளோம். சமஸ்கிருத மொழியில், அகில இந்திய அளவில் 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள், 100 வித்வான்கள் கலந்து கொண்டு 36க்கும் மேற்பட்ட subjects, “கடிகாஸ்தாநம்” என்ற புகழ்பெற்ற காஞ்சியில் கூடி விஷயங்களை விவாதித்தார்கள். இன்று Indian knowledge system என்று நமது பாரம்பரிய பொக்கிஷங்களை ஆராய்ந்து வருகின்றனர். ஆனால், 1990 களிலேயே நமது புதுப் பெரியவா பழைய கல்வி முறையும் சமகால கல்விமுறையும் இணைந்த கல்வித் திட்டத்தை வித்யா மந்திர் போன்ற நிறுவனங்களில் அறிமுகப் படுத்தினார்கள். இன்று Indian Knowledge System என்று சொல்லி நிறைய society க்கு செய்கிறார்கள். Civilised society என்பதற்கு, ஏழையோ, பணக்காரனோ, பண்டிதனோ பாமரனோ யாராக இருந்தாலும் பொறுப்போடு பொறுமையும் பெருமையும் கூடிய சமூகம் நமது சமூகம். பொறுப்பும் பொறுமையும் விவேகமும் நிறைந்த தலைமை இருப்பதால் உலக அரங்கில் பாரதம் தலைமை தாங்கி நிற்கிறது. பாரதத்தில் உள்ள பல்தரப்பினரையும், பூமாலை தொடுத்த நார் போல பக்தி இணைக்கிறது. சத்தியம், சாத்வீகம், சரணம் சமாதானம் முதலிய மணம் கொண்டது நமது பாரம்பரியம். பெருமைமிகு பரம்பரை குடும்ப வாழ்விற்கு. லௌகீக உலகிற்கு பாரம்பரியம். பரம்பரை பெருமை காப்பற்றப் படவேண்டும் தேசத்தின் பாரம்பரிய பெருமை வளர வேண்டும். வாழ்விப்பது பரம்பரை வளர்வது பாரம்பரியம். சமுதாயத்திற்கு தைரியம் நிறைய தேவைப்படும் நேரம் இது. தற்போது சாஸதிரத்திலிருந்து சமுதாயம் வெகு தாரத்திலிருக்கிறது. ஆனால் சாஸ்திரங்களை சமூகத்துக்கு கொண்டு செல்லும் நமது முயற்சிகள் தூரத்தில் இருக்கலாகாது. ஒவ்வொரு கோவிலும் தர்மங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் கேந்திரங்களாக மன வேண்டும். ஆத்ம தரிசனத்திற்கு முயற்சிகள் தேவை. எல்லோருக்கும் இக பர ஶ்ரேயஸ் கிட்டவேண்டும். ஆத்யாத்மிகமாகவும் லௌகீகமாகவும் சனாதன தர்மத்தின் ஒவ்வொரு பாகமும் சேர்ப்பிக்கப்பட வேண்டும். தேசம் ஸ்வதந்திரம் பெற்றுள்ளது, ஆனால், தேச ஸ்வதந்திரத்தின் முழு பலனும் தனிமனித ஆன்மிக ஸ்வதந்திரம் பெற்றால்தான் கிடைக்கும். South Indian Society முன்னேற்றம் என்பது ஆன்மிக மற்றும் தேச பக்தி முதலியவற்றிலும் முன்னேற வேண்டும். சங்கீதம் கம்மியானாலும், சத்பாவம் மிகுந்த பெரிய community. நிறைய எண்ணங்களை செயல்படுத்த ஒவ்வொருவரும. ஸ்வரூபத்தில் institution மாற வேண்டும். தரமான தீவிரமான ஈடுபாடு எனபது எந்த சூழ்நிலையிலும் நமது சமூக பாரம்பரிய அடையாளத்தை இழக்காமல் அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் சமூக சேவை செய்திட முன் வரவேண்டும். ஶ்ரீமடம் பக்தர்கள் சங்க்யையும் (எண்ணிக்கை) குறையாது, சம்மானமும் குறையாது ஆன்மிக தர்மத்தில் முன்னேற்றம் காணப்படுகிறது. நம்முள் உறையும் சைதன்யத்தை அடையாளம் காண, சரியான நேரத்தில் சரியான கோணத்தில் சரியான அளவில் சமூக முன்னேற்றத்திற்கான சேவையினை மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும். பம்பரமாய் உழைத்து சம்பரமாய் இருக்க வேண்டும். சேவையின் மூலமாகத்தான் அனைவரும் இணைய முடியும்.
ஶ்ரீமத் பகவத்பாதர்கள் அன்று தேசம் முழுதும் பயணித்து வைதீக மார்கத்தை அரும்பாடுபட்டு சனாதன தர்மத்தை நிலைநாட்டினார். அவர்வழி வந்த அனைத்து ஆச்சார்யர்களும் தர்மத்தைக் காத்து ரக்ஷித்தனர். நமது சமகாலத்தில் பரமாச்சார்யர் உழைத்த உழைப்பும் ஆற்றிய பணிகளும் நாம் அறிந்ததே. புதுப் பெரியவர்களின் சமயப்பணிகளும் சமுதாயப் பணிகளும் அளப்பரியது. ஶ்ரீ பெரியவர்கள இருவரும் சங்கல்ப்பித்தவாறே இங்கு புதுப் புது பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஶ்ரீ பெரியவர்கள் மிகப் பெரிய தர்ஸியாக தூரதர்ஸியாக மார்க தர்ஸியாக இருந்து சமுதாய ஆன்மிக முன்னேற்றத்திற்கு பணியாற்றினார்கள், என்ற வரலாற்றை நாம் போற்ற வேண்டும். 1920, 1930 களில் ஶ்ரீமகாஸ்வாமி தஞ்சாவூர் ஜில்லாவில் சின்ன வயதில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்ட போதும் தொடர்ந்து கார்த்திகை தீப பூஜையின்போது முன்பு வழக்கத்தில் இருந்த தீப பூஜை பாடலை கண்டு பிடித்து அதனை தமிழில் அச்சுப் போட்டு, ஶ்ரீமடத்தில் சாயங்கால தீப்பூஜை பாடலாக மீண்டும் அறிமுகப் படுத்தினார்கள். அது இப்போதும் தொடர்ந்து நடைபெறுகிறது. அப்போது, அவர்கள் கூறியதாவது, ( பீடாதிபதி) என்பது சம்ப்ரதாய பதவி இல்லை; சம்ப்ரதாயத்தைக் காக்கும் பதவி.
இங்கு “பராக் ஸ்வாமின்” என்று நாம் வரும்போது கட்டியம் கூறினார்கள். நாம் “பராக்காக” இருக்கக் கூடாது. ஶ்ரீமடம் என்றும் அக்ஷய பாத்திரமாக தொடர்ந்து இருந்திட அக்ஷயதிருதியை அன்று ஒருவரைத் தந்துள்ளோம். பக்தர்கள், தம் சமூக பாரம்பரிய identifyயை இழக்காத immunity யுடன் community யாக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில், மோக்ஷபர்யந்தம், தர்ம மார்கம் உள்பட பல படிகள் உள்ளன. இவை சாஸத்ரபடி தேவை. அதோடு பரா படிப்பும் தேவை.நல்ல நோக்கம் கொண்ட நல்ல செயல்பாடு ஆதர்ஸமாக, ஆசாரமாக,ஆதுர்யமாக இருக்கவேண்டும். சமயம் சாலப்யம் என்று பக்தி சமர்ப்பண புத்தியோடு இருக்க வேண்டும்.



Comments