top of page

Polur School - Centenary Year Celebration




“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்ற வாவியுள் நனி சிறந்தனவே.”

நாம் பிறந்த ஊர், கிராமத்தில் நகரத்தில் வசித்த இல்லம் படித்த பள்ளி ஆசிரியர் நண்பர்கள் என்று நம் ஒவ்வொருவருக்கும் மலரும் நினைவுகள் மணக்க மணக்க ஜகத்குருவும் பரம பூஜனீயர்களுமான ஶ்ரீ பெரியவா தாம் 45 ஆண்டுகளுக்கு முன்பாக பயின்ற உயர்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசி மகிழ்ந்தார்கள்.

அவர்களது முழு உரையும் தனியே பதிவிடப்பட்டுள்ளது. ஶ்ரீ பெரியவா அவர்களின் உரையிலிருந்து சில தேன் துளிகள்:

“இப்போ எல்லாம் கிளாஸ் ரூமில் மொபைல் வைத்திருக்கிறோம் நாம் படிக்கும் போது கிளாஸே “மொபைல் கிளாஸாக”நடைபெற்றது. இடப் பற்றாக்குறையினால் மரத்தடியில் நடந்து கொண்டிருக்கும் வகுப்பு திடீரென்று எந்த அறை காலியோ அந்த அறைக்கு உடனே எங்கள் வகுப்பு மாறிவிடும்.”

“வகுப்பில் எந்த மாணவனவது வரவில்லை என்றால், அவ்வகுப்பு ஆசிரியர் உடனே இன்னொரு மாணவனை அவனது வீட்டிற்கு அனுப்பி காரணத்தை அறியச் செய்வார். சரியான காரணமில்லை எனில், வகுப்பிற்கு வராத மாணவனை வரவழைத்து அவனுக்காக மீண்டும் பாடம் எடுக்கும் ஆசிரியர் இருந்தனர். கல்வியை புகட்டுவதில் ஆசிரியர்களுக்கு அத்தனை அக்கறை”

(இன்னும் வரும்)




Comments


bottom of page