ஜய ஜய ஶங்கர!
ஶ்ரீ காஞ்சீ காமகோடி மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீடம்
ஶ்ரீ ஶங்கராசார்ய ஸ்வாமிகள் ஶ்ரீமடம் ஸம்ஸ்தானம்
பகவந்நாமாவை ஜபிப்பது நமது பாபங்கள், இடையூறுகள் மற்றும் இன்னல்களை விலக்கி ஆரோக்யத்தையும் லௌகிக ஆன்மீக ஶ்ரேயஸ்ஸுகளையும் அடைய உயர்ந்த வழியாக கருதப்படுகிறது, முக்கியமாக கலியுகத்தில். அத்தகைய நாம ஜபத்தில் ஸஹஸ்ரநாமங்கள் என்பதற்கு ஒரு சிறப்பான ஸ்தானம் உள்ளது. நிதானித்து பகவானின் பல குணங்களில் ஈடுபடவும் லக்ஷார்ச்சனை கோடி அர்ச்சனை முதலியவற்றுக்கும் கூட இவை வழிகோலுகின்றன.
பகவான் சிவனுக்கு பல ஸஹஸ்ரநாமங்கள் உள்ளன. இவற்றுள், பகவான் விஷ்ணு அவரை ஆயிரம் தாமரைகளால் அர்ச்சிக்க பயன்படுத்திய ஸஹஸ்ரநாமமானது லிங்க புராணம் பூர்வ பாகம் 98வது அத்யாயத்தில் உள்ளது.
நமது ஶ்ரீ காஞ்சீ காமகோடி மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீடாதிபதி ஶ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகள் ஹரி-ஹர ஒற்றுமையைக் குறிக்கும் இந்த ஸஹஸ்ரநாமத்தை ஓதுவதால், ஸமுதாயத்தின் பல நிலைகளில் காணப்படும் ஒற்றுமையின்மை விலகி மக்கள் ஸந்தோஷமாக வாழ்ந்து உயர்ந்த லக்ஷ்யங்களை நோக்கி உழைக்க முடியும் என்று அருளியுள்ளார்.
இந்த ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் நாமாவளியுடன் பல லிபிகளில் வெளியிடப்படுகிறது:
Comments