top of page

விராடப் பர்வத்தின் முக்கியமான ஆன்மிக மற்றும் சமய அம்சங்கள்:பாகம் 1

ஶ்ரீ வால்மீகி முனிவர் அருளிய ஶ்ரீமத் ராமாயணம், அற்புதமான நடைமுறை இதிஹாசம். இக் காவ்யத்தின் மஹிமையே “பித்ரு வாக்கிய பரிபாலனம்” என்று பெருமை மிக்க “ தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, என்பதே. அரசனின் / அரசின் பொறுப்புகளும் கடமைகளும், தனிமனித ஒழுக்கம், பொதுவான தர்மம், விசேஷ தர்மம், சமூக மற்றும சமுதாய பொறுப்பும் கடமையும், என்னென்ன கர்ம வினைகள் என்னென்ன பாவங்களை பெற்றுத் தரும் போன்ற நீதிநெறிகளை போதிக்கின்றது.

ஶ்ரீமத் வ்யாஸர் அருளிய மஹாபாரதம் எனும் இதிஹாசம் முழுதுமே அற்புதமான நீதி நெறிகள் நிறைந்த காவ்யம். தர்மத்தை போதிக்க வல்லது. यदिहास्ति तदन्यत्र यन्नेहास्ति न कुत्रचित्" என்ற ஸ்லோகத்தின் பொருள் :

"இங்கே (இந்த மகாபாரதத்தில்) இருப்பது வேறு இடங்களிலும் இருக்கலாம், ஆனால் இங்கே இல்லாதது, ( உலகில்) வேறு எங்கும் இல்லை". உண்மைதான். இது மஹாபாரத இதிகாசத்தின், அருமை பெருமையை எடுத்து காட்டுவதாக உள்ளது. இதன் நோக்கம் ராஜநீதி என்பது என்ன, ராஜ்ய பரிபாலனம் என்பது அரசின் ஒவ்வொரு அங்கமும் உயர்ந்த தர்மத்தை கடைபிடித்து தம் தம் கடமைகளை ஆற்ற வேண்டும் என்பதே. “கற்பார், ஶ்ரீ ராமனைக் கல்லாது மற்றும் கற்பரோ?” என்று ஆழ்வாரதிகள் கொண்டாடுவதைப் போல், தமது வாழ்நாள் சங்கல்பமாக பல்லாயிர கணக்கான பக்தர்கள் நாள் தோறும் தம் தம் இல்ங்களில் பாராயணம் செய்கின்றனர். ஆனால் இதேபோல் ஶ்ரீமத். வ்யாஸாச்சர்யர்களின், மஹாபாரதம் காவ்யத்தை யாரும் இல்லங்களில் பாராயணம் செய்யவதில்லை. இதற்கு சில நம்பிக்கைகளே காரணங்கள். எனினும் நம்முன்னோர்கள், கோவில்களிலும் மடங்களிலும் மஹாபாரதம் முழுவதையும், பல நாட்கள் வல்லுனர்களைக் கொண்டு உபன்யாசமாக, கதையாக, கதாகாலக்‌ஷேமமாக பொது மக்களுக்கு எடுத்துச் சொல்ல ஏற்பாடுகள் செய்வது வழக்கம். இன்றும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் சிலபல கிராமங்களில் துவாதசி மடம் என்றே ஒரு பொதுக் கட்டிடத்தில் மஹாபாரத கதைகளை உபன்யாசம் செய்வது வழக்கம். (தொடரும்.)

Recent Posts

See All
விராடப் பர்வத்தின் முக்கியமான ஆன்மிக மற்றும் சமய அம்சங்கள்:பாகம் 2

(முன் தொடர்ச்சி.) மஹாபாரதம் எனும் இதிஹாசத்தின் அருமை பெருமைகளைப் பார்த்தோம் தொடர்ந்து இந்த அற்புதமான இதிஹாசத்தின் ஒரு பகுதியான விராட பர்வாவின் சிறப்பினைத் தெரிந்து கொள்வோம். 1. விராடப் பர்வம், மகாபா

 
 
 

Comments


bottom of page