top of page

Vishwa Shanthi Mahayagna Day 7 Anugraha Bashanam

18 minutes ago
4 min read

வடநகர் ஹாடகேஶ்வர்  அனுக்ரஹ பாஷணம் Day 7 — சிறப்பம்சங்கள்

17-11-2026


1. ஹாடகேஶ்வர வணக்கம், தக்ஷிணாமூர்த்தியின் மௌன உபதேசம்


ஸானந்தமானந்த வனே வஸந்தம் ஆனந்தகந்தம் ஹதபாபவ்ருந்தம் ।

வாராணஸீநாதமநாதநாதம் ஶ்ரீவிஶ்வநாதம் ஶரணம் ப்ரபத்யே ॥


என்று காசி விஶ்வநாதரைத் துதித்து, “நமாமி ஹாடகேஶ்வரம், பஜாமி ஹாடகேஶ்வரம்”, “வந்தே குருபரம்பராம்” என்று உரையைத் தொடங்கினார்கள். தக்ஷிணாமூர்த்தியை உபாஸனை செய்யும்போது, “தஸ்மை ஶ்ரீகுருமூர்த்தயே நம இதம் ஶ்ரீதக்ஷிணாமூர்த்தயே” என்பதும், கீழ்க்கண்ட ஶ்லோகமும் நினைவுக்கு வருவதாகக் கூறினார்கள்.


சித்ரம் வடதரோர்மூலே வ்ருத்தாஃ ஶிஷ்யா குருர்யுவா ।

குரோஸ்து மௌனம் வ்யாக்யானம் ஶிஷ்யாஸ்து ச்சின்னஸம்ஶயாஃ ॥


ஆலமரத்தடியில் அமர்ந்து மௌனத்தால் உபதேசம் செய்யும் தக்ஷிணாமூர்த்தி, ஸந்துகளுக்கும் மஹரிஷிகளுக்கும்கூட ஏற்படக்கூடிய சந்தேகங்களை நிவிருத்தி செய்கிறார் என்று பூஜ்யஶ்ரீ பெரியவா  எடுத்துரைத்தார்கள்.


2. யோகமுத்ரை சொல்லும் இணைப்பு


“அங்குஷ்டதர்ஜனீயோகமுத்ரா

வ்யாஜேன தேஹினாம்” என்று பெருவிரலும் சுட்டுவிரலும் சேரும் யோகமுத்ரையைக் குறிப்பிட்டார்கள். தக்ஷிணாமூர்த்தி பக்தியின் வழியாகத் தேவதைகளையும் பக்தர்களையும் இணைக்கிறார். கல்யாணம், வேலை, வியாபாரம் என்று எதுவாக இருந்தாலும் “cement வேண்டும், chemistry வேண்டும்” என்றும், அப்போதுதான் மைத்ரி, நல்லெண்ணம், பிரேமை, அனுராகம் ஆகியவற்றோடு செயல்பட முடியும் என்றும் பூஜனீயர்கள் விளக்கினார்கள்.


3. தன்னம்பிக்கை, பணிவு, வளர்ச்சி


“நம்முடைய அதிகாரம்தான், நம்முடைய சக்திதான், நம்முடைய ஞானம்தான்” என்று எண்ணினால், அதுவே ஒரு limit ஆகிவிடுகிறது. விஸ்நகரில் ரயில் நிலையத்தைப் பார்க்கச் சென்றபோது, முன்பு ஓரிடம் வரையே இருந்த ரயில் பாதையை மேலும் விரிவுபடுத்துவதாகக் கேட்டதைச் சுட்டிக்காட்டினார்கள். “இதுவரை போதும்” என்று எல்லை வகுத்துக்கொண்டால் வளர்ச்சி ஏற்படாது. தன்னம்பிக்கை வளரவும், பணிவு, விவேகம், ஏகாக்ரதை ஆகியவற்றோடு செயல்படவும் தக்ஷிணாமூர்த்தியின் அனுக்ரஹம் வேண்டும் என்று ஶ்ரீ பெரியவா  கூறினார்கள்.


4. தீக்ஷையும் எல்லோரிடத்திலும் மரியாதையும்


தீக்ஷிதம் ஜடதியாமனுக்ரஹே

தக்ஷிணாபிமுகமேவ தைவதம் ॥


சாதுர்மாஸ்யத்தில் ஒரே இடத்தில் தங்குவது, கங்கைக் கரையில் நாற்பது நாள் கல்பவாஸம் செய்வது, காசியில் பத்து மாதம் கர்ப்பவாஸம் இருப்பது போன்ற ஸங்கல்பங்களைக் குறிப்பிட்டு, அந்த ஸங்கல்பமே தீக்ஷையாகக் கருதப்படுவதாகச் சொன்னார்கள். விஷயங்களை நன்கு அறியாதவர்களிடத்திலும் தக்ஷிணாமூர்த்தி கிருபை செய்கிறார். எல்லோரிடத்திலும் மரியாதை இருக்க வேண்டும், எல்லோரும் சேர்ந்து எல்லோருடைய வளர்ச்சிக்கும் செயல்பட வேண்டும் என்பதே தக்ஷிணாமூர்த்தியின் செய்தி என்று  பூஜனீயர்கள் எடுத்துரைத்தார்கள்.


5. சிறிய ஆலவிதை, பெரிய வளர்ச்சி


ஆலமரத்தின் விதை மிகச் சிறியது. அதன் விளைவும் வளர்ச்ரிவிக்ரமன்” என்று குறிப்பிட்டு, ஸ்வரூபத்தில் சிறியவராக இருந்தாலும் அவர் செய்யும் காரியம் பெரிது என்பதற்கு வாமன–திரிவிக்ரம அவதாரத்தை உதாரணமாகப் ஶ்ரீ பெரியவா கூறினார்கள்.


6. ஸ்வயம்வரா பார்வதி ஹவனமும் விவாஹத்தின் பொறுப்புகளும்


ஹாடகேஶ்வர க்ஷேத்திரத்தில் விஶ்வ ஶாந்தி மஹாயஜ்ஞத்தோடு, இளைய தலைமுறையினருக்கு நல்ல வீட்டில் திருமணம் அமைய ஸ்வயம்வரா பார்வதி ஹவனம் நடைபெறுவதாகக் கூறினார்கள். பள்ளி, பல்கலைக்கழகம், company ஆகியவற்றைப் போல விவாஹமும் ஓர் institution. அதில் “க்ஷமையும் இருக்கிறது, க்ஷமதையும் இருக்கிறது”, “உபவாஸமும் இருக்கிறது, உத்ஸவமும் இருக்கிறது, உபஹாரமும் இருக்கிறது, உபகாரமும் இருக்கிறது.” பொறுப்புகளும் மாறுகின்றன. மகன் தகப்பனாரிடம் பக்தியோடும் பணிவோடும் இருக்க வேண்டும். தகப்பனார் குழந்தைகளை வாத்ஸல்யத்தோடு பார்க்க வேண்டும் என்று பஜனீயர்கள் விளக்கினார்கள்.


7. குடும்பத்தில் சுயக்கட்டுப்பாடும் பகிர்ந்துகொள்ளும் பழக்கமும்


குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து வாழும்போது, இளைய தலைமுறையினர் முதியவர்களை மரியாதையுடன் பார்த்து, அவர்களுக்கு வசதிகளைச் செய்து கொடுக்கிறார்கள். எதைப் பார்க்க வேண்டும், எதைக் கேட்க வேண்டும், எங்கே பிரதக்ஷிணம் செய்ய வேண்டும், எதை உண்ண வேண்டும் என்பதில் சுயக்கட்டுப்பாடு இருக்கிறது. ஞானேந்திரியங்களாலும் கர்மேந்திரியங்களாலும் positive ஆன காரியங்கள் நடக்க வேண்டும். கோயிலில் கிடைக்கும் பிரஸாதம், விபூதி, ஸிந்தூரம், பூ ஆகியவற்றை மற்றவர்களோடு பகிர்வதைச் சுட்டிக்காட்டி, நமக்கு நல்லதாகக் கிடைத்ததைப் பிறருக்கும் கொடுக்கும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு ஆரம்பத்திலிருந்தே கற்றுக்கொடுக்கிறோம் என்று பூஜ்யஶ்ரீ பெரியவா  நினைவூட்டினார்கள்.


8. கலாசாரப் பாதுகாப்பும் மரம் வளர்ப்பதில் வாத்ஸல்யமும்


தாய் வழி, தந்தை வழி முன்னோர்களையும் வருங்காலத் தலைமுறையையும் விவாஹம் இணைக்கிறது. ஆந்திராவில் பல்வேறு சமூகச் சபைகளில் ஸ்வயம்வரா பார்வதி ஹவனம் செய்வித்ததைக் குறிப்பிட்டு, கல்வி, வேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகளோடு கலாசாரப் பாதுகாப்புக்கும் ஒரு பிரிவு இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். “மரம் நடுவதும் ஒரு யோகம்.” செடியை வளர்க்கும்போது அன்பும் பொறுப்பும் வாத்ஸல்யமும் வளர்கின்றன. “ஸ்கந்தஸ்ய மாதுஃ பயஸாம் ரஸஜ்ஞஃ” என்று மேற்கோள் காட்டி, பார்வதி தேவி கார்த்திகேயனிடம் காட்டிய அன்போடு தேவதாரு மரத்தையும் வளர்த்ததைச் சொன்னார்கள். இருபதும் ஒன்பதுமாக 29 உபதேசங்களைக் கொண்ட பிஷ்னோயி சமூகத்தினர் மரங்களைப் பேணுவதையும் ஶ்ரீ பெரியவா  குறிப்பிட்டார்கள்.


9. ஆதி தம்பதியும் ஐம்பது ஆண்டுத் தாம்பத்யத்துக்கான ஸம்மானமும்


வால்மீகி ராமாயணம் ஆதிகாவியம். பார்வதி பரமேஶ்வரர்கள் ஆதி தம்பதி.


வாகர்த்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த்தப்ரதிபத்தயே ।

ஜகதஃ பிதரௌ வந்தே பார்வதீபரமேஶ்வரௌ ॥


சொல்லும் பொருளும் இணைந்திருப்பதைப் போலத் தாம்பத்யத்தில் பரஸ்பர உறவு இருக்க வேண்டும், அன்போடு வாழ வேண்டும் என்று கூறினார்கள். காஞ்சியில் தாம்பத்ய வாழ்வில் ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்தவர்களை அழைத்து ஸம்மானம் செய்து, ஶோபாயாத்திரையில் பார்வதி பரமேஶ்வர தரிசனம் செய்து வைத்ததையும் பூஜனீயர்கள் நினைவுகூர்ந்தார்கள்.


10. எளிய வாழ்க்கையும் சமூகத்தின் ஸ்திரத்தன்மையும்


பணமானாலும் தண்ணீரானாலும் தேவையான அளவு பயன்படுத்த வேண்டும். புதிய pipeline வசதி வந்தபின் சில சமயம் தண்ணீரை அதிகமாகப் பயன்படுத்திவிடுவதைக் குறிப்பிட்டு, “simplicity, நிராடம்பர வாழ்க்கை, savings and சேவை” என்பதே பாரத ஸனாதனக் கலாசாரம் என்று கூறினார்கள். கிராமம், கோயில், குடும்பம் ஆகிய மூன்றின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தினால் சமூகம் ஸ்திரமாக இருக்கும். ஸ்வயம்வரா பார்வதி ஹவனத்தை முன்னிட்டு ஸௌந்தர்யலஹரியைப் பாராயணம் செய்யவும், நவக்ரஹ தேவதைகளையும் பார்வதி தேவியையும் ஸ்தோத்திரம் செய்து பிரார்த்திக்கவும் பூஜ்யஶ்ரீ பெரியவா  அறிவுறுத்தினார்கள்.


11. ஆயுர்வேத உபவேதமும் விவசாயிகளிடையே மூலிகைப் பிரசாரமும்


தனுர்வேதம், சங்கீதத்துக்கான காந்தர்வவேதம் ஆகியவற்றைப் போல ஆயுர்வேதமும் வேதங்களின் உபவேதம். ஸாதனை, தபஸ், பாதயாத்திரை, நர்மதா பரிக்ரமா ஆகியவற்றைச் செய்ய உடலில் சக்தி வேண்டும் என்று சொன்னார்கள். ஆயுர்வேதம் படிப்பதும், மக்களின் நன்மைக்காகச் சிகிச்சை செய்வதும் ஒரு பணி. விவசாயிகளிடம் நேரில் சென்று மூலிகைகளை அறிமுகப்படுத்துவதும் ஒரு பணி. Botanical names, ஸம்ஸ்கிருதப் பெயர்கள் இடம்பெற்ற மூலிகைப் புத்தகத்தைக் குறிப்பிட்டு, பதினைந்து மூலிகைகளை எடுத்துக்கொண்டு மெஹ்ஸாணா மாவட்டத்தில் எந்த நிலத்தில் எந்த மூலிகை நன்கு வளரும் என்பதைப் பார்த்துப் பிரசாரம் செய்யலாம் என்று ஶ்ரீ பெரியவா அவர்கள் கூறினார்கள்.


12. வனத்துறையோடு இணைந்து ஆயுர்வேதப் பணி


குஜராத்தில் தானியம், பருத்தி முதலிய பயிர்களுக்கு ஏற்ற வெவ்வேறு நிலங்கள் இருப்பதையும், நீர்வசதி கிடைத்ததால் புதிய பகுதிகளில் விவசாயம் நடைபெறுவதையும் குறிப்பிட்டார்கள். அந்தந்த நிலத்துக்கு ஏற்ற ஔஷதிகளைப் பயிரிட விவசாயிகளிடமும் வனத்துறையிடமும் தொடர்பு கொள்ளச் சொன்னார்கள். தமது குருநாதர் 1980-ல் குஜராத்தில் கிராமம் கிராமமாகச் சென்றபோது, கிர் வனத்திலும் சந்திரமௌலீஶ்வர பூஜை செய்ததையும், யானையை அழைத்துச் சென்று கஜபோஜனம் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள். பாரத ஞானம் எல்லோருக்கும் நன்மை தருவது. அதை எப்படி வளர்ப்பது, எப்படிப் பயன்படுத்துவது, அதன் முக்கியத்துவம் என்ன என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று பஜனீயர்கள் கூறினார்கள்.


13. கோயிலை மையமாகக் கொண்டு ஆயுர்வேதப் பிரசாரம்


கோயில், குருகுலம், சங்கீதம் ஆகியவற்றைக் கோயிலை மையமாகக் கொண்டு இணைக்க வேண்டும். “வடநகர் ஆயுர்வேதப் பிரசார சமிதி” அமைத்து, ஆயுர்வேதத்தின் தினசர்யா அத்தியாயத்தை மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர்களிடையே அறிமுகப்படுத்தவும், ஸுஶ்ருதர் முதலிய மஹரிஷிகள் கூறியவற்றை எடுத்துச் சொல்லவும் கேட்டுக்கொண்டார்கள். பத்து, பதினைந்து மூலிகைகளை அதிகமாக உற்பத்தி செய்து மலிவாக மக்களிடம் சேர்த்தால் ஆயுர்வேதத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும். தமிழ்நாட்டிலுள்ள ஶ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமி ஆயுர்வேதக் கல்லூரியோடும் இணைந்து பணியாற்றலாம் என்று கூறி, குஜராத்திலும் தமிழ்நாட்டிலும் ஆயுர்வேதப் பிரசாரம் நன்றாக நடைபெறப் பகவதியின் கிருபையை பூஜ்யஶ்ரீ பெரியவா  பிரார்த்தித்தார்கள்.


14. ஆதிகவி வால்மீகியும் வால்மீகி சமூகத்துக்கான பிரார்த்தனையும்


மூன்றாவது விஷயமாக வால்மீகி சமூகத்தையும் வண்கர் சமூகத்தையும் குறிப்பிட்டார்கள். அயோத்தி விமான நிலையத்துக்கு மஹரிஷி வால்மீகியின் பெயர் வைக்கப்பட்டிருப்பதையும், ஆதிகவியின் ராமாயணம் தென்னிந்தியாவில் பரவலாகப் பாராயணம் செய்யப்படுவதையும் எடுத்துச் சொன்னார்கள். வால்மீகி சமூகத்தினருக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, தர்ம காரியங்களில் ஈடுபாடு ஆகியவை சிறக்க வேண்டும் என்று பூஜனீயர்கள் பகவானைப் பிரார்த்தித்தார்கள்.


15. குழந்தைகளுக்குப் பாரதீய ஸம்ஸ்கிருதி பாடசாலை


காந்திநகர், அகமதாபாதில் “பாரதீய ஸம்ஸ்கிருதி பாடசாலை” தொடங்கவும், அதற்கான குழுவில் சென்னையிலிருந்தும் ஆந்திராவிலிருந்தும் வருபவர்கள் பங்கேற்கவும் ஏற்பாடு செய்வதைக் குறிப்பிட்டார்கள். சனி, ஞாயிறுகளில் குழந்தைகளுக்கான அறிமுக வகுப்புகளில் யோகாஸனம், முத்ரைகள், ஆயுர்வேதம், ரங்கோலி, தஞ்சாவூர் painting முதலியவை இடம்பெறும் என்று கூறினார்கள். தமிழ்ப் பெயர்களும் botanical names உம் உள்ள மூலிகைப் புத்தகத்தைக் காட்டி, அதைக் கல்வி அமைச்சருக்குக் கொடுப்பதாக ஜகத்குரு ஶ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் தெரிவித்தார்கள்.


Transcriptions by Smt. Madhu, USA and Smt. Nivedita Adinarayanan.

Comments


bottom of page