சீதலா தேவி துணை
மயிலாடுதுறை சேந்தங்குடி கிராமத்தில்
ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலயம்
ஸ்ரீ ஹம்சவர்தினி சமேத சீதலேச்வரர் ஆலயம் அஷ்டபந்தன ரஜதபந்தன
மஹா கும்பாபிஷேகப் பத்திரிக்கை
காவிரியின் வடகரையில் ஸ்ரீ வள்ளலார் கோவிலின் ஈசான்ய பாகத்தில் கோவில் கொண்டு துஷ்டர்களை அழித்து, சிக்ஷ்டர்களை காத்து, பக்தர்களுக்கு வேண்டுவனவற்றை அளித்து ஜகன்மாதாவாக விளங்கி வரும்
ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் , சீதலேஸ்வரர் ஆலயம் திருப்பணியும் , ஸ்ரீ ஹம்ச்வர்தனி அம்பாளுக்கு நூதன ஆலய நிர்மாணமும் செய்யப்பட்டு ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி பரமாச்சார்யாள் அனுக்ரஹத்துடன் நிகழும் மங்களகரமான ஜய வருடம் ஆவணி மதம் 25ஆம் தேதி (10 - 09 - 2014) புதன் கிழமை உத்திரட்டாதி நட்சத்திரம் சித்த யோகம் கூடிய சுப யோக சுப தினத்தில் காலை மணி 9:30 க்கு மேல் 10:30 க்குள் (நாழிகை 8.15க்கு மேல் - 11.00 க்குள்) துலா லக்னத்தில் ஸ்ரீ படைவெட்டி மரியாம்மனுகும் பரிவார தேவதைகளுக்கும் , ஹம்சவர்தினி சமேத சீதலேஸ்வரருக்கும், தருமை திருவாடுதுறை திருப்பனந்தால் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ குருமஹா சந்நிதானங்கள் அருளாசியுடன் , மயிலாடுதுறை இந்து சமய அறநிலைய ஆட்சி துறை இணை ஆணையர் , உதவி ஆணையர் முன்னிலையில் ஸ்ரீ மஹா கும்பாபிஷேகம் நடை பெற இருப்பதால், பக்தர்கள் அனைவரும் பங்கேற்று மஹா கும்பாபிஷேகத்தை கண்டு களித்து அருள் மிகு ஸ்ரீ மாரியம்மன் அருளை பெற வேண்டுகிறோம்.