ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர, ஓம் ஸ்ரீ பெரியவா சரணம்.
பெரியவா உணர்த்திய “அத்வைதம்”
தரணி புகழ் தஞ்சையில் தனிகர் ஒருவரிருந்தார். அவருக்கு ஸ்ரீ பெரியவாளிடம் அபார பக்தி. மிகுந்த ஆச்சார சீலர். ஒருமுறை காஞ்சியில் பெரியவாளைத் தரிசித்து சதப்ராம்ஹண போஜனம் செய்ய வேண்டும், பெரியவா ஆசீர்வாதம் செய்யணுமென் றார். பெரியவா “சதப்ராம்ஹண போஜனம்னா பூணல் போட்டுண்டிருந்தா போறுமோன் னோ?” என்றார்.
வந்தவரோ அப்படியில்லை அத்யயனம் செய்தவர்கள் கிடைத்தால் உத்தமமாயிருக்குமேன்னு என இழுத்தார். பெரியவா, “அதான் அதான் சரி. எல்லாரும் போடறா! அதுக்குபேர் அன்னதானம். ப்ராம்ஹண போஜனம்னாலே வைதீகாளுக்குத்தான் போடணும். வேதம் தெரிஞ்சுண்டவாதான் ப்ராம்ஹ ணா! பூணல் மட்டும் போட்டுண்டா போறாது, ஒரு ருத்ரம், சமகம், புருஷஸுக்தமாவது தெரிஞ்சுக்கணு ம் என்றார்.
சரி! நன்னாபோடு! வேதப்ராம்ஹணா குக்ஷில விழற ஒவ்வொரு அன்னமும் உனக்கு ச்ரேயஸை கொடுக்கும், பக்ஷணங்களெல்லாம் போடு! என்றதும் தனிகருக்கு சந்தோஷம். பெரியவா ஆக்ஞைபடி அப்படியே செய்றேனென்றார். உங்க ஊர்லயே பண்ணப்போறயோ! என்றார் பெரியவா.பெரியவா எங்க உத்தரவு பண்றாளோ அங்கயே செய்ய சித்தமாயிருக்கேனென்றார். திருவிடமருதூர்ல பண்ணு! முடிஞ்சா வர பாக் கறேன்! என்றதும் வந்தவருக்கோ பூமி நழுவிற்று.
இப்படியொரு பாக்யமா! என கண்ணீர் மல்கியபடியே ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு போய்விட்டார்.
பெரியவா சொன்ன திரு நாளும் வந்தது. ஏற்பாடுகள் மிகச்சிறப்பான முறையி ல் நடைப்பெற்றது. பெரியவா இங்கு வரப்போவதின் அறிகுறியும் தெரிந்தது. அனைவரும் வெகு உற்சாகமாய் பணி செய்தனர். 100 வேதப்ராம்ஹணர்கள் வந்தனர். அவர்களுக்கு உயரிய முறையில் உபசாரம் செய்யப்பட்டது. பெரியவா வருகை! வேத கோஷம் விண்ணைப்பிளந்தது. அவாளுக்கு இலை போடு என்றார். தஞ்சை மாவட்டமாச்சே, தாட்டு இலை போடப்பட்டது. பரிமாறினர். ராஜபோஜனமாகயிருந்தது. 5 வகை ஸ்வீட் பேணி, லட்டு, அல்வா, போளி , மைசூர்பாகு. இதை தவிர நெய் மிதக்கும் சர்க்கரைப் பொங்கல். இதே போல் எல்லாமும். தனிகரின் கையோ முறம் போலுள்ள து. ரசம் போட்டு ஸ்வீட் போட்டு, சர்க்கரைப் பொங்கலிட்டு அதன் மேல் உருக்கிய நெய் வார்க்கப்பட்டது. அனைவருக்கும் திணறியது. சாப்பிடவே முடியவில்லை. பின் வேண்டியவர்களுக்கு அன்னமிடப்பட்டு சந்திரன் போன்ற வெளுத்த தயிர் விடப்பட்டது.
இப்போது பெரியவா சாப்பிடுமிடத்திற்க்கு வந்தார். எங்கும் பரபரப்பு. பரிமாறும் அன்பர்களை விளித்து ஏதோ பேசினார். ஒருபெரிய சாட்டாங் கூடை நிறைய லட்டு கொண்டு வரப்பட்டது. அங்கே முன்னின்று, “எல்லார் எலேலயும் நவ்வாலு லட்டு போடு” என்றார். அனைவரும் முழித்தனர். இலையிலேயே அதிகமாகயிருக்கிறது; உபரியாக நாலு லட்டு வேற எப்படி சாப்பிடுவது. பெரியவா போடச் சொல்லி போட்டார்கள், எறிந்தால் பெரிய வாளுக்கு மரியாதை குறைச்சலாகிவிடும், சாப்பிடவோ வயிற்றில் இடமில்லை. செய்வதறியாது திகைத்தனர்.
இதை காண சகியாத கருணைக்கடல், ”முடிஞ்சா சாப்பிடுங்கோ முடியலைன்னா எறிஞ்சுடலாம் தோஷ மில்லை” என்றார். அப்பாடா! பெரியவாளே சொல்லிட்டா எறிஞ்சா தப்பில்லேன்னு! என்று சமாதானம் செய்து கொண்டு கொஞ்சம் போல எடுத்துக் கொண்டு எழுந்து விட் டனர். தனிகருக்கோ மிகுத்த வருத்தம் உபரியாக போடச்சொல்லி, அதை எறியவும் சொல்லிவிட்டாரே என.
பெரியவா தக்ஷிணை கொடுத்தபின் இலையெடுக்கலாமென உத்தர விட்டார். அதே போல் சதப்ராம்ஹணர்களுக்கும் தக்ஷிணையளிக்கப்பட்டு, வாசனை தாம்பூலமும் கொடுத்து கௌரவமாக வழியனுபப்பட்டது.
பெரியவா தனிகரை விளித்தார் எனக்கு 2 சாட்டாங்கூடை வேணும். ஒரு மொழுகினகூடை, ஒரு மொழுகாத கூடையும் வேணுமென்றார்.சடுதியில் கொண்டு வரப்பட்டது.இப்போ ஒரு ஒத்தாச பண்ணுங்கோ எனக்கு, இந்த மொழுகின கூடைல லட்ட தவிர எறிஞ்ச மீதியெல்லாம் ரெண்டு கையால வழிச்சுப் போடணும். மொழுகாத கூடைல எச்ச எலல இருக்கற லட்டோட போடணும் சித்த பண்ணுங்கோ? என இறைஞ்சினார். அப்படியே செய்யப்பட்டது. மொழுகின கூடைய குப்பதொட்டில போடுங்கோ என்றார். அதுவும் செய்யப்பட்டது.
இந்த மொழுகாத கூடைய எடுத்துண்டு என்னோட வாங்கோ! நாலு பேர்போறும் கூட்டம் வேண்டாம், அப்பா! நீ வா என தனிகரை அழைத்துக்கொண்டு தண்டத்தோடு புறப்பட்டார்.
விறு விறுவென உச்சி வெயிலில் காவேரிப்பக்கம் ஒடினார். பெரிய வா நடந்தால் நாம் ஒடணும், அவர் ஒடினால் நாம்??!! ஒருவாறு போய்ச் சேர்ந்தபின் தீர்த்தவாரி மண்டபத்தில் நின்றார்.
ஓ!ஷாமி ஷாமீ எங்கிருந்தோ குறவர்களின்கூட்டம் நம் சமயக்குர வரை மொய்த்துக் கொண்டது.
சாட்டாங்கூடையை மண் இல்லாத புல் தரயா பாத்து போடுங்கோ! என்றார். அருகிலிருந்த தனிகரை அழைத்து என்ன பாக்கற! சதப்ராம்ஹண போஜனம் குறவா போஜனமா முடிஞ்சுடுத்தேன்னா? ப்ராம்ஹணா குக்ஷிய ரொப்புன்னு உன்கிட்ட சொன் னேன், ஆனா குறவா குக்ஷியும் என் கண்ணுல பட்டுடுத்து! என்ன பண்றது, நானோ சந்யாசி! எனக்கு எல்லாரும் சமம். நீயோ ரொம்ப ஆச்சாரம், இவாளுக்கு கொடுன்னா சேஷமாயிடுமேன்னு தோணும். இவாளுக்கு லட்டு வேணும்னா தனியா செஞ்சுருக்கலா மேன்னுபடறதா? படும்! படும்! ஆனா இவ்வளவு தரமும் ருசியும் வேண்டாமேன்னும் படும் சரிதானே? எச்சல் இலைல இருக்கற பதார்த்ததுக்கு சேஷம் கற தோஷம் போயிடற தோன்னோ! யார் கொடுக்கப்போறா இவாளுக்கு ஸ்வீட்டெல்லாம், பரிஜாரகாள கேட் டேன் எது உபரியாயிருக்குன்னனு, அவா லட்டு தான் மிஞ்சிப் போச்சுன்னா, அதான் ப்ராம்ஹணா எலல போடச் சொல்லி இவாளுக்கு கொடுத்தேன் உன் ஆச்சாரத்துக்கும் குந்தக மில்லாம! இப்படி செய்யலாமோன்னோ! என்றதும் தனிகர் தடாலென வீழ்ந்தார்.
அங்கே மறைமுகமான அத்வைத பாடம் நடத்தபட்டதே என### இதுதான் அத்வைதம் என்று பெரியவா உணர்த்தினார்.
- மஹா பெரியவா சரணம்
Picture drawn by... Sudhan Kalidas.......looking picture perfect..marvelous work. Only with periyawa kataksham this is possible...please appreciate and encourage sudhan Kalidas.
Courtesy:Sri.GS.Dattatreyan
Source: Repost from amirtha vahini google group