கதிரவன் தன் தெற்கு நோக்கிய பயணத்தை முடித்துக்கொண்டு, வடக்கு நோக்கிய பயணத்தைத் துவங்குவதைக் கொண்டாடுவதே 'ரத சப்தமி' ஆகும். ஏழு குதிரைகள் பூட்டிய ஒரு சக்கரமுள்ள தேரில் பவனி வரும் ஆதவன் அவதரித்த தினமும் இதுவே. ரத சப்தமி அன்று காலைப்பொழுதில் ஆடவர்கள் ஏழு எருக்கன் இலைகள், அக்ஷதை, அருகம்புல், பசுஞ்சாணம் ஆகியவற்றைத் தலை மேல் வைத்துக்கொண்டு நீராட வேண்டும். பெண்டிர் ஏழு எருக்கன் இலைகள்,மஞ்சள், அக்ஷதை, அருகம்புல் ஆகிய பொருட்களைத் தலை மேல் வைத்துக்கொண்டு நீராட வேண்டும். நீராடியபின் சூரிய வழிபாடு செய்வர். அன்று பித்ரு தர்ப்பணம் செய்வது உகந்தது.
இவ்வாறு நீராடுவது உடலுக்கும் நன்மை பயக்கக் கூடியது. கதிரவனின் நல்ல கதிர் வீச்சுக்கள் எருக்கன் இலை வழியாக நம் உடலுக்குள் பாய்ந்து உடலுக்கு நன்மை பயக்கும். அன்றைய தினம் வாசலில் தேர்க்கோலமிட்டு சூடான சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்ய வேண்டும். கும்பகோணத்தைச் சேர்ந்த திருமதி இராஜலெட்சுமி அவர்கள் இக்காணொளியில் அன்று வாசலில் அலங்கரிக்க வேண்டிய தேர்க்கோலத்தை வரைந்து கொண்டே தம் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
Courtesy: Smt. Malathi Jayaraman, Kumbakonam