top of page

TIRUVARUR  AZHI THER

Image source:https://en.wikipedia.org/wiki/Tiruvarur_Chariot_festival

TIRUVARUR AZHI THER--THE HISTORIC PRIDE OF TAMILNADU

Source:-Indian Express Dt.,July16th 2010.

The temple of sri. Thiagaraja and the temple tank "Kamalalayam" are ages hold, with the legend behind them. So also is the temple car"Azhither" which is unique in the history of temples. Thus the town holds a three fold historical treasure in its bosom.

A special feature of the temple relates to Nandhi Deva who has taken a standing posture unlike other shiva shrines, as a mark of respect to the deity.

Thiagaraja,as per legend, had indulged in more than 350 divine leelas. The sthala vriksham is trumpet flower tree and river chandra flows to the north of the temple. Temple tanks called Brahma theertham,Indra Theertham and Agasthya Theertham are located infront of the temple and to the south and west respectively.

The Sakthi Theertham near Amman sannadhi serves to the abhishekam of the deities. The temple covers a huge area, having in its fold 9Rajagopurams,80 domes(vimanam),12 high raised walls, 13 mandapams, 15 holy water wells,three flower gardens, three big prakaras and more than 100 shrines.

The temple chariot called Azhi ther is an ancient monument that attracts

one and all by its majestic stature.

The carnatic trinity who hail from this place had added more divine charm to the temple through their rendition of kritis in praise of Lord Thiyagaraja. The ancient glory is retained by the temple and Azhi ther which will be eternal.

****************************************************************************

Key Details:

The Azhi ther which is primarily a wooden structure with beautiful

carvings,

gets added beauty when decorative pieces are fixed to it. A variety of objects are used which include big horses(4), Vrishabam(8),Yaalam(1),Snake Yalam(1),birma(1), dwarapalaka(2),Kamaikal(2),mel kradhi(4),

Keezhi kradhi(2), big sword(1),shield(2), flowerpot(16), King-Queen(2),elderly couple(2),surutti(4) leaves(8), rear kamaikal(6),and Quiver(2). In all 68 decorative pieces will adorn the chariot.

Unique features:

The Azhi Ther is known for its special features. Normally,the dome of the cars will be in the format of hexagon,octagon, or circular.But the basement to the dome part of Azhither have five bands per

side,totalling 20 in all.

The undecorated height of the car is 30ft upto the dome with multicolour

cloth decorations,it is 48ft. The dome is 12ft and Kalasam 6ft,the car stands

majestically to a height of 96ft. BHEL Trichy supplies iron axles,four iron wheels and hydraulic

brake.

The car gets additional load by way of 50 tonne ropes,5tonne decorative cloth and miscellaneous items five tonne.

The decorative pieces fixed in front account for another five tonne. With all decorations, when it starts moving the Azhi ther is a giant structure, 300 tonnes in weight. the "Vadam" huge ropes 21 inches in grith, and 425ft long. the two bulldozers will be operating from the rear to push the car,besides jock-eyes and iron plates to assist in turning the car. All said, one needs a crore eyes as said the poet,to enjoy the beauty of Azhither in sublime devotion.

Tamil version as appear in Shiva temples.com:-

வான்மீகிநாதர் கோவில், திருவாரூர்

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை

சிவஸ்தலம் பெயர் திருவாரூர் (திருமூலட்டானம் என்றும் திருவாரூர் பூங்கோயில்

என்றும் அழைக்கப்படுகிறது)

இறைவன் பெயர் வன்மீகிநாதர், புற்றிடங்கொண்ட நாதர்

இறைவி பெயர் அல்லியங்கோதை

பதிகம் திருநாவுக்கரசர் - 21

திருஞானசம்பந்தர் - 5

சுந்தரர் - 8

எப்படிப் போவது இத்தலம் திருவாரூர் நகரில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை,

கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.

திருவாரூர் அரநெறி என்று அழைக்கப்படும் மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இந்த

ஆலயத்தின் உள்ளே இருக்கிறது. திருவாரூர் நகரின் கிழக்கு ரத வீதியில் ஆரூர்

பறவயுண்மண்டளி என்று அழைக்கப்படும் மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமும் உள்ளது.

ஆலய முகவரி அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில்

திருவாரூர்

திருவாரூர் அஞ்சல்

திருவாரூர் மாவட்டம்

PIN - 610001

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

* திருவாரூர் பிறக்க முக்தி தரும் தலம்.

* பாம்புப் புற்றை தான் எழுந்தருளி இருக்கும் இடமாக தானே விரும்பி ஏற்றுகொண்ட

வன்மீகி நாதர் கருவறையில் குடிகொண்டிருக்கும் தலம்.

* கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என்று போற்றப்படும் மிகப்பெரிய

சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடைய திருத்தலம்.

* முசுகுந்த சக்கரவர்த்தி, மனுநீதிச் சோழன் போன்றோரால் ஆட்சி செய்யப்பட்ட

தலைநகரமாகிய விளங்கிய திருத்தலம்.

* சப்தவிடங்கத் தலங்களில் மூலாதாரத் தலம், பஞ்ச பூதங்களில் பிருத்வி (பூமி)

தலம், முக்தியளிக்கக்கூடிய தலம். மற்ற சப்த விடங்கத் தலங்கள்: (1) நாகைக்காரோணம்,

(2) திருநள்ளாறு, (3) திருமறைக்காடு, (4) திருக்காறாயில், (5) திருவாய்மூர் மற்றும்

(6) திருக்கோளிலி ஆகியவையாகும்.

* திருமுதுகுன்றம் சிவஸ்தலத்தில் மணிமுத்தா நதியில் சுந்தரர் தான் இட்ட பொன்னை

கமலாலயம் திருக்குளத்தில் எடுத்துக் கொள்ள அருளிய தலம்.

* சுந்தரர் வேண்டிக் கொண்டதின் பேரில் அவருக்காக தியாகராஜப் பெருமான்

நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது போக இவ்வூர் தெருக்களில் நடந்து சென்ற

பெருமையுடைய திருத்தலம்.

* சங்கிலி நாச்சியாரைப் பிரிய மாட்டேன் என்று செய்து கொடுத்த வாக்கை மீறி

திருவொற்றியூரில் இருந்து புறப்பட்டதால் தன் இரண்டு கண் பார்வையும் இழ்ந்த சுந்தரர்

காஞ்சீபுரத்தில் இடது கண் பார்வை பெற்றபின், திருவாரூர் தலத்தில் பதிகம் பாடி வலது

கண் பார்வையும் பெற்ற தலம்.

* விறன்மிண்ட நாயனார், நமி நந்தி அடிகள் நாயனார், செருத்துணை நாயனார்,

தண்டியடிகள் நாயனார், சுழற்சிங்க நாயனார் முதலிய சிவனடியார்கள் வழிபட்டு

முக்தியடைந்த திருத்தலம்.

* தியாகராஜா பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் தலம்.

இத்தியாகேசப் பெருமானே சோமாசிமாற நாயனாரின் வேள்விக்கு அம்பர் மாகாளம் தலத்தில்

எழுந்தருளி அவிர்ப்பாகம் ஏற்றார் என்னும் சிறப்பை உடைய தலம்.

* திருவாரூர்க் கோயிலுக்குள் சென்று விட்டால், குவித்த கரங்களை விரிப்பதற்கு

வழியேயில்லை என்ற அளவிற்கு ஏராளமான சந்நிதிகள் இருக்கும் சிறப்பை உடைய தலம்.

* எந்த ஒரு சிவஸ்தலத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு திருவாரூர் தலத்திற்கு

உள்ளது. கோவில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றி தேவாரப் பாடல்கள்

கொண்ட சிறப்பைப் பெற்றுள்ள தலம் இதுவே.

என்ற பல பெருமைகளை உடைய தலம் திருவாரூர் ஆகும்.

திருவாரூர் திருக்கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று

திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது

பதிகத்தில் பாடியுள்ளார். சப்த விடங்கத் தலங்கள் ஏழில் திருவாரூரே முதன்மையானதும்,

பிரதானமானதுமாகும். திருவாரூரைத் தொடர்ந்து திருமறைக்காடு (வேதாரண்யம்),

திருநள்ளாறு, திருக்குவளை, திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்), திருக்காரவாசல்

மற்றும் திருவாய்மூர் ஆகிய தலங்களிலும் ஸ்ரீ தியாகராஜப் பெருமான் கோயில்

கொண்டுள்ளார். திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன்

இராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும்,

சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம்

அமைந்துள்ளது. திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச்

சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு

இத்தலத்திற்கு உண்டு.பிற்கால சோழ மன்னர்களில் ஒருவனான கண்டராதித்ய சோழனின் மனைவியான

செம்பியன் மாதேவி இக்கோவிலை கற்றளிக் கோவிலாக மாற்றியதாகவும், பின்னர் குலோத்துங்க

மன்னர்கள் காலத்தில் பெரியதாக விரிவாக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

திருவாரூர் ஆலயத்தில் எட்டு துர்க்கை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. முதல்

பிரகாரத்திலுள்ள மகிஷாசுரமர்த்தினி பிரதான துர்க்கையாகும். மேலும் 2 துர்க்கை

சந்நிதி முதல் பிரகாரத்தில் உள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் நான்கும், கமலாம்பாள்

சந்நிதியில் ஒன்றும் ஆக மொத்தம் எட்டு துர்க்கை சந்நிதிகள் இவ்வாலயத்தில் இருப்பது

இதன் சிறப்பமசம். நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் நிற்கும் கோலத்தில் காணப்படுவதும்

இக்கோவிலில் காணும் ஒரு சிறப்பம்சம்.

அறநெறியப்பர் கோவில், திருவாரூர் அரநெறி

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை

சிவஸ்தலம் பெயர் திருவாரூர் அரநெறி

இறைவன் பெயர் அரநெறியப்பர், அகிலேசுவரர்

இறைவி பெயர் வண்டார்குழலி

பதிகம் திருநாவுக்கரசர் - 2

எப்படிப் போவது திருவாரூரில் உள்ள வன்மீகிநாதர் ஆலயத்தின் உள்ளே இத்தலம்

அமைந்துள்ளது.

ஆலய முகவரி அருள்மிகு அகிலேசுவரர் திருக்கோயில்

தியாகராஜசுவாமி திருக்கோயில் தேவஸ்தானம்

திருவாரூர்

திருவாரூர் வட்டம்

திருவாரூர் மாவட்டம்

PIN - 610001

இவ்வாலயம் தினந்தோறும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல்

இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருவாரூர் அரநெறி என்னும் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர்க் கோயிலுக்குள்ளேயே

தெற்குச் சுற்றில் அமைந்துள்ளது. இக்கோயில் அசலேச்சரம் என்று வழங்கப்படுகிறது.

இச்சந்நிதியில் சிவராத்திரி வழிபாடு விசேஷமானது. இங்கு சிவன் மேற்கு நோக்கிய

சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். இப்பெருமானின் - அசலேஸ்வரர் கோயில்

மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுவதில்லை

என்ற தனி மகிமை வாய்ந்தது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில்

இது கட்டப்பட்டுள்ளது. இத்தல பெருமானை அப்பர் இரண்டு பதிகங்களால் பாடியுள்ளார்.

63 நாயன்மார்களில் ஒருவரான நமிநந்தி அடிகள் இக்கோவிலில் சிவலிங்க வழிபாடு செய்து

வந்தார். திருவாரூரில் பிறந்தவர்களை எல்லாம் சிவரூபமாக கருதியவர் இவர். ஒருமுறை

அரநெறியப்பர் கோயிலுக்கு மாலை வேளையில் வழிபாடு செய்ய வந்த நமிநந்தி அடிகள், கோயில்

விளக்குகளில் உள்ள நெய் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டு விளக்கின் ஒளி மங்க்த்

தொடங்கியது. அப்போது அடிகள் விளக்கேற்ற யாராவது வருகிறார்களா என பார்த்தார். யாரும்

வரவில்லை. தொலைவிலுள்ள தமது வீட்டிற்கு சென்று நெய் வாங்கி வருவதற்குள் நன்றாக

இருட்டிவிடும், விளக்கும் அதற்குள் அணைந்துவிடும் என்று நினைத்த நமியந்தி அடிகள்

கோயில் வாசலில் இருந்த வீட்டிற்கு சென்று விளக்கிற்காக சிறிது நெய் கேட்டார்.

அந்தக்காலத்தில் கோயிலை சுற்றி சமணர்கள் அதிகம் வசித்து வந்தனர். இவர் நெய் கேட்ட

விட்டில் சமணர்கள் வாழ்ந்து வந்தனர். "கையில் தீ ஏந்தி நடனம் செய்யும் உங்கள்

இறைவனுக்கு விளக்கு தனியாக தேவையில்லை, அப்படியும் நீ விளக்கு ஏற்ற வேண்டுமானால்,

கோயில் எதிரில் உள்ள குளத்து நீரை எடுத்து தீபத்தை ஏற்று" என்று சமணர்கள் பரிகாசம்

செய்தனர். இதனால் வருத்தமடைந்த அடிகள் கோயிலுக்கு வந்து இஇறைவனிடம் மனமுருகி வேண்ட

இறைவன் அசரீரியாக "அவர்கள் கூறியபடி இங்குள்ள குளத்து நீரை எடுத்து எனது சன்னதியில்

விளக்கேற்று"' என்று கூறினார். இதைக்கேட்ட அடிகளுக்கு மிகுந்த சந்தோஷத்துடன் சங்கு

தீர்த்தம் எனப்படும் குளத்திலிருந்த நீரை எடுத்து வந்து விளக்கில் ஊற்றி தீபத்தை

தூண்டிவிட்டார். தீபம் முன்பை விட பலமடங்கு பிரகாசமாக எரிந்தது. அத்துடன்

அங்கிருந்த பல விளக்குகளிலும் நீரை ஊற்றி தீபம் ஏற்றினார். சிவபெருமானின் அருளால்

நீரூற்றி கோவில் விளக்கெல்லாம் எரியச் செய்து, சமணர்களின் கொட்டத்தை அடக்கி

இறைவனின் பெருமையை உலகறியச் செய்தார்.

தூவாய் நாயனார் கோவில், ஆரூர் பறவயுன்மண்டளி

தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை

சிவஸ்தலம் பெயர் ஆரூர் பரவையுண்மண்டளி

இறைவன் பெயர் தூவாய் நாயனார்

இறைவி பெயர் பஞ்சின் மெல்லடியம்மை

பதிகம் சுந்தரர் - 1

எப்படிப் போவது திருவாரூரில் கிழக்கு ரத வீதியில் இத்தலம் இருக்கிறது.

ஆலய முகவரி அருள்மிகு தூவாய் நாயனார் திருக்கோயில்

கீழரத வீதி

திருவாரூர் அஞ்சல்

திருவாரூர் வட்டம்

திருவாரூர் மாவட்டம்

PIN - 610001

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல்

இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருவாரூரில் கிழக்கு ரத வீதியில் தேர் நிலைக்கு அருகில் இக்கோவில் அமைந்துள்ளது.

கிழக்கு பார்த்த சந்நிதியை உடைய இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

இத்தல இறைவனின் பெயர் தூவாய்நாதர். மக்கள் இக்கோயிலைத் தூவாய் நாயனார் கோயில்

என்றழைக்கின்றனர். சுந்தரர் பாடல் பெற்றது. இதன் பின்புறம் திருநீலகண்ட நாயனார்

கோயிலும், தெற்குச் சந்நிதியில் பரவை நாச்சியார் கோயிலும் உள்ளன.

சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் 7-ம் திருமுறையில் இடம்

பெற்றுள்ளது.

தலப் பெருமை: "உன்னை விட்டு எப்போதும் பிரியமாட்டேன்"என்று உறுதி மொழி கொடுத்து

சங்கிலி நாச்சியாரை திருவொற்றியூரில் திருமணம் செய்து கொளிகிறார் சுந்தரர். நாட்கள்

செல்ல, திடீரென அவருக்கு முதல் துணைவியான பரவை நாச்சியார் நினைவுக்கு வந்தவுடன்

திருவாரூர் புறப்படுகிறார். சங்கிலி நாச்சியாருக்கு செய்து கொடுத்த உறுதி மொழியை

மீறியதால் சுந்தரரின் பார்வை பறிபோனது. மனம் கலங்கிய சுந்தரர் பார்வை வேண்டி

ஒவ்வொரு சிவத்தலங்களாக சென்று, மீண்டும் பார்வை தந்தருளும்படி வேண்டினார்.

காஞ்சிபுரம் வந்தபோது காமாட்சியின் கருணையால் ஏகாம்பரேஸ்வரர் சுந்தரருக்கு இடது கண்

பார்வை மட்டும் தந்தருளினார். மீண்டும் அவர் பல சிவத்தலங்களை தரிசித்து திருவாரூர்

வந்து மற்றொரு கண்ணுக்கு பார்வை தந்தருளும்படி வேண்டினார். இவரது வேண்டுதலை ஏற்ற

இறைவன், "இத்தலத்தில் அக்னி மூலையில் உள்ள குளத்தில் நீராடி தன்னை வணங்கினால் வலது

கண் பார்வை கிடைக்கும்" என்றருளினார். சுந்தரரும் அதன்படி செய்து வலது கண் பார்வை

பெற்றார். சுந்தரருக்கு இங்கு கண் கிடைத்ததன் அடையாளமாக, இத்தலத்து இறைவனுக்கு

அபிஷேகம் செய்யும்போது அவரது திருமேனியில் கண் தடம் தெரிவதை காணலாம். கண்பார்வை

குறைபாடு உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இக்குளத்தில் நீராடி இங்குள்ள இறைவனுக்கு

செவ்வரளி மாலை சாற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால் பார்வை குறைபாடு சரியாகும்

என்பது நம்பிக்கை.

தல வரலாறு: பிரளய காலத்தில் கடல் பொங்கி எழுந்த போது, உலகை காப்பாற்ற தேவர்களும்,

முனிவர்களும் சிவனிடம் முறையிட்டனர். சிவபெருமான் துர்வாச முனிவரிடம் "இத்தலத்தின்

அக்னி மூலையில் குளம் அமைத்து தன்னை வழிபட்டால் கடல் அமைதியடையும். உயிர்கள்

காப்பாற்றப்படும்"' என்றார். அதன்படி துர்வாசர் தலைமையில் முனிவர்கள் இங்கு ஒன்று

கூடி குளம் அமைத்து இறைவனை பூஜைசெய்தனர். முனிவர்களின் பூஜையை ஏற்ற சிவன்

பொங்கிவந்த கடலை அக்னி மூலையில் அமைத்த குளத்தின் மூலம் ஈர்த்துக் கொண்டார்.

கோயிலின் அக்னி மூலையில் அமைந்துள்ள இககுளம் தனி சிறப்புடையது.

196 views0 comments
bottom of page