ஸ்ரீ ராம ஜயம்
தஞ்சாவூர் பரம்பரை
தஞ்சாவூர் பரம்பரை 4
கடிதம் --3 ல் தற்கால சூழ் நிலையில் விவசாயத்திலும் கோயில் பராமரிப்பிலும் செயல் பட முடியும் என்று எழுதியிருந்தேன். முதலில் விவசாயத்தை இந்தக்கடிதத்தில் எடுத்துக் கொள்வோம். தண்ணீர் இல்லை என்பது தெரிகிறது . ஆனாலும் இப்படியே எப்பொழுதும் இருக்காது என்று நம்பலாம் .தண்ணீரைச் சிக்கனமாக உபயோகிக் கக்கற்றுக்கொள்வது நல்லது. சொட்டு நீர்ப்பாசனத்தை எப்பொழுதுமாகவே கைக்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுவது சாலச்சிறந்தது. செலவு மிச்சமாகும். நன்செய்ப்பயிர்த்தான் என்றில்லாமல் புன்செய் தானியங்களையும்வி ருத்தி செய்யக்கற்றுக்கொண்டால் நமக்குத்தான் ஆதாயம். அதற்கு குறைவான தண்ணீரே தேவைப்படும் என்பது எல்லோ ருக்கும் தெரியும். வெயில் அதிகமாகக் கிடைப்பதால்,பூச்செடிகளையும்அங்கங்கே பயிர் செய்யலாம். அதில் வருமானம் அதிகம்.விட்டு விட்டுபயிர் செய்தால், சூரியகாந்தமும் பண வரவை அதிகமாக்கும். SUN FLOWER OIL க்கு விலை அதிகம். ரோஜா பயிரிட முடியாவிட்டால், மல்லிகை பயிரிடலாம். வயலின் எல்லையோரம் தென்னை பயிரிடலாம். பெரும்பாலான நமது விவசாயிகளுக்கு நெல்லையும், மற்ற தானியங்களையும் சேமிக்க உதவ வேண்டும். அவர்களுக்கு BANK LOAN கிடைக்கவும் தானியங்களை விற்கவும் MARKETஏற்படுத்தித்தரலாம். ஆங்காங்கே சிறிய மாட்டுப்பண்ணைகளை ஏற்படுத்தி, நல்ல தரமான காளைகளை உருவாக்கலாம். SCIENTIFIC AGRICULTURE என்று சொல்லுகிறோமே அதன் ஒரு பாகமே தான் இது . தரமான விதை, தரமான உரம்,பயிர்நடுகையில் தரம்,அளவான தண்ணீர் இவையெல்லாம் ஒன்று சேர்ந்தே பயிரின் தரத்தை உயர்த்து கிறது இதை விரிவாக எழுதுவதன் காரணம், தஞ்சாவூர் பரம்பரை எல்லா சமூகமும் சேர்ந்த சமுதாயத்திற்கு ஒட்டு மொத்தமாக நலம் சேர்க்கவேண் டியதே யல்லாது ஒரு சமூகத்திற்கு மட்டுமல்ல.
வேத விஷயத்தைப் பற்றிப் பேசும்போது அதில் எனக்கு ஒரு வெறியுள்ளதாகச் சொன்னீர்கள் . வயதான எனக்கு மட்டும் வேதத்திலும், தஞ்சாவூர் பரம்பரையிலும் வெறியோ அல்லது வேகமோ இருந்தால் போதாது. ஸ்ரீ சரணர்களின் சிஷ்யர்கள் என்று வெளியே சொல்லிக்கொள்ளும் நம் எல்லோருக்குமே அது இருக்கவேண்டும், என்று நான் நினைக்கிறேன்.மேலும் அது இப்பொழுதுள்ளதுபோல் பேச்சளவில் மட்டும் இருந்தாலும் போதாது. காரியத்திலும் இருக்கவேண்டும். தஞ்சாவூர் பரம்பரை திட்டம் ஆரம்பித்து பல மாதங்கள் கடந்துவிட்டன. இதுவரை நாம் அதில் என்ன செய்துள்ளோம் என்று சற்று யோசிக்கவேண்டும். அவ்வாறு யோசித்தால் நாம் இன்றுவரை ஒன்றுமே செய்யவில்லை என்பது நமக்குத்தெரியவரும். தாங்கள் நிர்வாகத்தில் தேர்ச்சி பெற்றவர். ஜில்லாகலக்டராக இருந்தவரும் கூட. எல்லாம் முன்பே தயாராக இருந்தால் அங்கு நிர்வாகம் தேவையில்லை.
வேலை நடக்க, சாதாரண கிளார்க் போதும். திறனுடன், ORGANISE செய்து, முன்யோசனையுடன் PLAN-ம் செய்ய,திறனுள்ள நிர்வாகியாக தாங்கள் தேர்ந்தெடுக்கப்பெ ற்றிருக்கிறீர்கள்.ஸ்ரீ சரணர்களை தியானித்து களத்தி ல் இறங்க முற்படுங்கள் . கட்டாயம் வெற்றி கிடைக்கும். ஸ்ரீ ஆஞ்சனேயஸ்வாமி க்கு முன்பாக இருந்தது 100 யோஜனை கடல். ஸ்ரீ ராமனை தியானித்துத்தாண்டினார். வெற்றியும் கண்டார். அவர் நமக்கெல்லாம் முன்னோடி. தஞ்சாவூர் பரம்பரையின் பரிமாணம் இவ்வாறாக எல்லா சமூகத்திலும் பரவியுள்ளதால் , இது மேன்மையடையும் போது எல்லா சமூகத்தினரும் மேன்மையடைகின்றனர் .மேலும் நாமும், எல்லா சமூகமும் சேர்ந்த சமுதாயத்திற்கே உழைக்கிறோமாதலால், ஏனைய சமூகத்தினர்களும் நம் சேவையை ஏற்று நம்மையும் மதிக்க ஆரம்பிக்கின்றனர் . ஆதலால் நமக்கு இதுவரையடையாத மதிப்பும், மே ன்மையும் கிடைக்கிறது. ஆகையால் இனியும் காலம் தாழ்த்தாது இரண்டிரண்டு பேர்களடங்கிய ஆறு குழுக்களை தஞ்சை ஜில்லாவின் எல்லா பாகங்களுக்குமனுப்பி தன்ஜாவூர் பரம்பரையைப்பற்றி நன்கு பிரசாரம் செய்து அதன் முக்கிய நோக்கமான காலங்காலமாக நம்மிடையே நிலவியிருந்த வாழ்க்கைமுறையை மறுபடி நிலைநிறுத்த ஆவன செய்யுங்கள்.
எந்தத்திட்டமும் காரியத்தை எடுத்துச்செய்தால் தான் நிறைவேறும். பேச்சளவில் எந்தத்திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது என்பது தங்களுக்கே தெரியும்.
தொடரும்...
Text Content Courtesy:
Sri. S.Chidambaresa Iyer, Chennai