SHADARI MARIYADHAI FOR SRI PERIYAVA AT KUMBAKONAM SRI SARANGAPANI TEMPLE ON 28-01-2026
- AruL Amudham
- May 27
- 1 min read
Updated: May 27
'நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ
விலங்கு
மால்வரைச்சுரம்
கடந்த கால் பரந்த
காவிரிக்கரைக்
குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே.'
என்று திருமழிசை ஆழ்வாரால் பாடப்பெற்ற, 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்குடந்தையில், உத்தான சயனத்தில் காட்சியருளும் திருக்குடந்தை ஸ்ரீ சார்ங்கபாணி பெருமாள் ஆலயத்தில் 28-01-2026 அன்று ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளுக்கு ஷடாரி மரியாதை மிகச் சிறப்பான முறையில் செய்யப்பட்டது.

1894ம் ஆண்டு நிறுவப்பட்ட அத்வைத சபா மற்றும் 1942ம் ஆண்டு நிறுவப்பட்ட வேத தர்ம ஸாஸ்த்ர பரிபாலன சபா ஆகியவற்றுக்குத் துணைத்தலைவரும், கும்பகோணம் சங்கரமடம் கைங்கர்ய சபாவின் செயல் உறுப்பினர்களில் ஒருவருமான ஸ்ரீ ரமேஷ் அவர்களின் பெரு முயற்சியால் பல ஆண்டுகளுக்குப்பிறகு இது துவக்கப்பட்டு நடந்தேறியது.
இந்நிகழ்வின் சிறப்பை ஸ்ரீ ரமேஷ் அவர்கள் இக்காணொலியில் விளக்கிக் கூறியிருப்பதைக்கேட்டும், அடுத்து வரும் காணொளியில் இந்நிகழ்வின் சில புகைப்படங்களைக் கண்டும் மகிழ்வோம்.


Comments