ஸ்ரீ ராம ஜயம்
தஞ்சாவூர் பரம்பரை
தஞ்சாவூர் பரம்பரை 5
இதுவரை நான்கு கடிதங்களில் தஞ்சாவூர் பரம்பரையைப்பற்றி எழுதியாயிற்று. கடைசியாக, இதன் முக்கிய பாகமான கோயில், மற்றும் குளம் பராமரிப்புக்கு வருவோம். நம் தமிழ் நாட்டில் கோயில்கள் ஏராளம் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு குளம் இருந்தது. அபிஷேக தீர்த்தம் அதிலிருந்துதான் எடுப்பார்கள். தமிழ் நாட்டில், ஏன், இந்தியாவிலேயே கோயில்கள் தான் நமது கலாசாரத்தின் சின்னங்களாக விளங்கின. நமது வரலாற்றில் நடந்த பல சம்பவங்களின் விளைவாக, இன்று பல கோயில்கள் மறைந்தும் விட்டன. ஆயினும் நம் தமிழ் நாட்டில் பலகோயில்களை இன்றும் பார்க்கலாம்--நல்ல நிலையிலுள்ளவை, சுமாரான நிலையிலுள்ளவை, மற்றும் மிகவும் கீழ்த்தரமான நிலையிலுள்ளவை. இது போக பாதி அல்லது முற்றிலும் அழிந்த நிலையிலும் பல கோயில்கள் இன்றும் காண்கின்றன. நல்ல நிலையிலுள்ளவைகளில் பூஜை முறை நன்றாகவே நடக்கிறது . சுமாரானவை களி ல் , தினம் ஒருகால பூஜை ஒருவாறு நடக்கிறது.ஒருவாறு என்று ஏன் சொல்கிட்டேன் என்றால்,நெய்வேத்தியத்திலோ , அபிஷகப்பாலிலோ சுத்தம் எதிர்பார்க்க முடியாது. பட்டரும் சரியாக உடையணிந்து வருவது கிடையாது.அள்ளிச் சொருகி ஒரு கொண்டை. இது எந்த விதத்தில் குடுமியோடு சேரும் என்று சொல்வது கடினம். தஞ்சைஜில்லாவில் இவ்வாறான பட்டர்களை பல கோயில்களில் பார்க்கலாம்.ஆகம சாஸ்த்திரம் இவர்களுக்கு எந்த அளவுக்குத் தெரி யும் என்று சொல்ல முடியாது. ஆனால் மந்த்ர உச்சரிப்பில் பிழை அநேகம் காண மு டியும். காலையில் 9 அல்லது 10 மணிவாக்கில் பட்டர் வருவார், மணி அடிப்பார். இது நடக்கும். எவ்வாறு இவர் பூஜை செய்கிறார் என்று சொல்வது கடினம்.அரசின் ஆணைப்படி ஒருகாலபூஜை நடந்தேறிய கணக்கு கோயில்தக்கார் எழுதிக்கொள்வா ர்.இது யாருக்குப்ரீதி? ஆண்டவனுக்கே வெளிச்சம். இந்த நிலை மாறவேண்டுமானா ல்,கிராமத்துப் பொது ஜனங்கள் அவரவர் கிராமத்துக் கோயிலில் அக்கறை கொள்ள வேண்டும் . தினமும் குடும்பத்துடன் கோயிலுக்குச்செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
மெல்ல மெல்ல கோயில் பரிசரங்களை சரிப்படுத்த முனையவேண்டும்.
தஞ்சாவூர்ப்பரம்பரைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள நம் நண்பர்கள் இதில் புகவேண்டும். கிராமத்திலுள்ள மற்றவர்களின் துணைகொண்டு காரியத்தில் ஈடுபடவேண்டும். முதலில் ஒரு கோயிலை எடுத்துக்கொண்டு செயல் படவேண் டும் . அதன் பின் அடுத்தது, என்றிவ்வாறு. இதே மாதிரி கோயில் குளங்களும். இன்று பல கோயில்களில் குளங்கள் சாக்கடைகளாகக்காட்சியளிக்கின்றன. அந்த நிலை மாற உள்ளூர்வாசிகளைக்கொண்டு, ஏற்பாடு செய்யவேண்டும். ஆக, நமது நண்பர்கள் முதலில் மக்களைக்கோயில் வழிபாட்டில் ஈடுபடுத்தவேண்டும்; அதன்பின், கோயில் பராமரிப்பில் ஈடுபடுமாறு செய்யவேண்டும். மக்கள் புகுந்தால் அரசும் புகுந்துதான் ஆகவேண்டும் .கோயிலின் விருத்தியைப்பற்றி ப்பின் யோசிக்க லாம். நமது கோயில்களில் விருத்தி செய்யவேண்டியவை பல உண்டு.இவ்வாறு நாமே கோயில்காரியங்களைச்செய்ய ஆரம்பித்து விட்டால், கோயில் நிர்வாகம் தலை வணங்கித்தான் ஆகவேண்டும்.
ஒவ்வொரு கோயிலிலும் 12 வருஷங்களுக்கு ஒருமுறை கும்பாபி ஷேகம் பண்ணி யாகவேண்டும் . இது மரபு. இன்றும் பல கோயில்களில் கும்பாபிஷேகம் பண்ணி பலஆண்டுகளாகின்றன. பணச்செலவுக்கு அஞ்சியே அரசு இதில் காலம் தாழ்த்தி வருகிறது. இப்பொழுதும் கும்பாபிஷக தினச்செலவை மட்டிலும் அரசு ஏற்றுக்கொள்கிறதே தவிற , அதற்கு வேண்டிய மற்ற பல செலவுகளை மக்களே கும்பாபிஷேகக்கமிட்டி என்று அமைத்துக்கொண்டு செயல் பட்டு வருகிறதே யொழிய அரசு ஒருபோதும் அதைச்செய்வதில்லை. இன்ன ஆண்டில் இன்னார் தலைமையின் கீழ் கும்பாபிஷேகம், இன்ன தினத்தில் நடைபெற்றது என்று கல்வெட்டு பொறித்து கோயில்களில் ஸ்தாபிக்கிறார்கள் ,அதில் முதல்வர் பெயர், அறநிலையத்துறை மந்திரி, கமிஷனர் இவர்கள் பெயர் பொறிக்கப்படும் . வேறு செய்தி ஒன்றும் இருக்காது. இது என்ன கேவலம்? தமிழ் நாட்டிலுள்ள எல்லாக் கோயில்களிலும் இவற்றைப்பார்க்கலாம். பல வருஷங்களாக இந்த அவலம் நடந்துகொண்டிருக்கிறது. தர்மகர்த்தா முறை வந்தாலொழிய இது மாறாது .அரசினர் அதை வரவிடமாட்டார்கள் ருசி கண்ட பூனை .
தொடரும்...
Text Content Courtesy:
Sri. S.Chidambaresa Iyer, Chennai