top of page

Thirupaatrurai temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.

*கோவை.கு.கருப்பசாமி.*

பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

*(16)*

*சிவ தல அருமைகள்,பெருமைகள் தொடர்.*

நேரில் சென்று தரிசித்தது போல....

---------------------------------------------------------------------

*திருப்பாற்றுறுறை.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

*இறைவன்:* ஆதிமூலேசுவரர், ஆதிமூலநாதர்,

*இறைவி:* மேகலாம்பிகை, மோகநாயகி, நித்யகல்யாணி.

*தலமரம்:*வில்வம்.

*தீர்த்தம்:* கொள்ளிடம்.

சோழநாட்டின் காவிரி வடகரையில் அமையப்பெற்றுள்ள 63 தலங்களுள் இத்தலம் 59 வது தலமாக போற்றப்பெறுகின்றது.

*இருப்பிடம்:*

திருச்சியிலிருந்து வடகிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ளது.

திருவானைக்கா--கல்லணை சாலையில் வந்து பனையபுரம் கிராமத்துக்குள் உள்ளே நுழைந்து வர வேண்டும்.

*பெயர்க்காரணம்:*

மன்னன் ஒருவன் வேட்டைக்காக இத்தலத்திற்கு வரும் போது ஒரு பறவை பறந்து சென்று ஒரு புதர் அருகே கூடு கட்டி இருந்தது.

பால் மனம் வீசியது.

புற்றருகே வரும் போது பால் பீறிட்டுப் பாய்ந்தது.

அன்றிரவு மன்னன் கனவில் தான் லிங்க வடிவில் அப்புற்றினுள் இருப்பதாகக் கூறினார்.

பால் பொங்கிய இடத்தில் வெளிப்பட்டதால் சுவாமி பாற்றுறை நாதர் என்றும், தலம் பாற்றுறை (பால்துறை) எனப் பெயர் பெற்றது.

*கோவில் அமைப்பு:*

காவிரி, கொள்ளிட நதிகளுக்கிடையே இக்கோயில் முப்பத்தேழு சென்ட் நிலப்பரப்பளவு கொண்டவை.

இருபது அடி உயரத்தில் மூன்று நிலை இராஜ கோபுரம் ஒரே பிரகாரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்து உள்ளன.

விநாயகர், முருகர், மகாலட்சுமி, துர்க்கை சந்நிதிகள் அமையப் பெற்றுள்ளன.

பைரவர், நவக்கிரகமும் உள்ளன.

அம்பாள் தெற்கு நோக்கிய சந்நிதியில் நான்கு கரங்களுடன் (அபய, வரதம் நீலோற்பலமும், தாமரையும் ஏந்தி) காட்சியருள் புரிகிறாள்.

மூலவர் சுயம்புத் திருமேனியானவர்.

சிறிய மூர்த்தி.

அர்த்த மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடுகளுடன் நான்கு தூண்களுடன் விளங்கி, தேவசபை என்றழைக்கப் படுகிறது.

வீணா தட்சிணாமூர்த்தி கருவறைச் சுற்றுச் சுவரில் வீணை வாசிக்கும் கோலத்தில் இருக்கிறார்.

அவரது இடது கை சற்றே மடங்கி நளினமாக இருப்பதைக் காணும்போது அழகு.

இதனை வீணையின் இசைக்கேற்ப நடனமாடிய கோலம் என்கிறார்கள்.

இவரருகே சீடர்கள் யாவரும் இல்லை.

தட்சிணாமூர்த்தியின் இந்த வித்தியாசமான கோலத்தைக் காண்பது மிகவும் அபூர்வம்.

இசைக் கலைஞர்கள் இவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

அருகே.பிட்சாடனர் இருக்கிறார்.

இங்குள்ள அம்பாளை நெஞ்சுருகி வழிபட்டால் மகப்பேறில்லார்க்கு மகப்பேறு வாய்ப்பு உண்டாகிறது.

அண்டிருந்த பிணியும் தீரும் என நம்புகின்றனர்.

*தேவாரம் பாடியவர்கள்:*

*சம்பந்தர்* 1-ல் ஒரே ஒரு பதிகம் மட்டுமே பாடியுள்ளார்.

*தல அருமை:*

இப்பகுதியை ஆண்ட சோழன், இவ்வழியாக வேட்டைக்குச் சென்ற போது தன் படைகளுடன் இவ்விடத்தில் சற்று நேரம் ஓய்வெடுத்தான்.

அப்போது அருகிலுள்ள புதரிலிருந்து வெண்ணிற.நிறமுள்ள அதிசயப் பறவை பறந்து சென்றது.

மன்னன் அப்பறவையின் மீது ஆசை கொண்டு அம்பு எய்தான்.

மன்னனின் அம்புக்கு இறையாகாது அப்பறவை தப்பி விட்டது.

சில நாட்கள் கழித்து மன்னன் மீண்டும் இவ்வழியே சென்ற போது முன்பு பார்த்த அதே பறவை பறப்பதைக் கண்டான்.

புதர்தானே அதன் இருப்பிடம். அங்கு வந்ததும் அப்பறவையைப் பிடித்து விடலாம் எனக் கருதி ஒரு ஓரமாய் மறைந்திருந்தான்.

அந்த இடம் பால் மணம் வீசியது. பறவை வரவே இல்லை. சந்தேகப்பட்ட மன்னன் புதரை வெட்டினான்.

புதரை வெட்டிய இடத்தில்,ஒரு புற்று தென்பட்டது. அப்புற்றைக் கிழைக்க பால் பீறிட்டு பீச்சியடித்தது.

பால் பீறிட்டு வெளிப்பட்டதைக் கண்ட மன்னன் பயந்து போனான். அந்த பயத்தோடவே அரண்மனை வந்து சேர்ந்தான்.

அன்றிரவு மன்னனின் தூக்கத்தில் கனவு வந்தன. அந்தக் கனவில் அசரீரியாக ஒலித்த சிவன்,.....பால் வெளிப்பட்ட இடத்தில் தான் லிங்க வடிவில் இருப்பதாகக் கூறினார்.

கனவில் அசரீரியைக் கேட்டவுடன், மன்னன் அவ்விடத்தில் உடனடியாக ஆலயத்தை எழுப்பினான். அவனும் வழிபட்டு எல்லோரையும் வழிபட ஏற்படுத்திக் கொடுத்தான்.

பால் பொங்கி வெளிப்பட்ட இடமாதலால், சுவாமி பாற்றுறை என்றும், தலம் பாற்றுறை (பால்துறை) என்றும் கூறப்படுகிறது.

*தல பெருமை*

அற்ப ஆயுள் கொண்ட மார்க்கண்டேயர், ஆயுள் விருத்திக்காக சிவனை வேண்டி இத்தலத்திற்கு வந்து லிங்க பூஜை செய்ய, தண்ணீர் கிடைக்காமல் லிங்கத்தின் தலையிலிருந்து பால் பொங்கி தானாகவே அபிஷேகம் ஆனது.

தென்திசை எமனின் திசை. இவரது உக்கிரத்தைக் குறைக்க தெற்கு நோக்கிய அம்மன்களை வழிபடுவதால் பலன் கிடைக்கும்.

குழந்தைகளை இழந்து மீண்டும் குழந்தை பாக்கியத்திற்காக பெளர்ணமி தோறும் நடக்கின்ற பூஜையில் மஞ்சள் வஸ்திரம் சார்த்தி வழிபட்டால் தீர்க்க ஆயுளுள்ள குழந்தை பிறக்குமாம்.

*கல்வெட்டுக்கள்:*

கல்வெட்டில் இத்தலம் கொள்ளிடத் தென்கரை நாட்டுப் பிரமதேயமான உத்தமசீவி சதுர்வேதி மங்கலத் திருப்பாற்றுறை என்றும், இறைவன் பெயர் திருப்பாற்றுறை மகாதேவர் என்றும் குறிக்கப்பட்டுள்ளன.

முதற்பராந்தகன், விக்கிரமசோழன் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.

*திருவிழாக்கள்:*

மார்கழித் திருவாதிரை,

மகாசிவ ராத்திரி,

திருக்கார்த்திகை முதலியன.

*பூஜை:*

காமீக முறையில் மூன்று கால பூசை.

காலை 7-00 மணி முதல் பகல் 12-00 மணி வரை,

மாலை 4-00 மணி முதல் இரவு 7-00 மணி வரை,

*அஞ்சல் முகவரி:*

அருள்மிகு. ஆதிமூலநாதர் திருக்கோவில்,

திருப்பாற்றுறை & அஞ்சல்,

(வழி) திருவானைக்கா,

திருச்சி வட்டம்& மாவட்டம்-

620 005

*தொடர்புக்கு:*

சிவராஜ குருக்கள்:

0431--2460455

0431--2060455

Reposting it from Amritha Vahini Google group.

47 views0 comments
bottom of page