top of page

Kal Nadaswaram - Interview with Nadaswaram artist Sri Swaminathan.

தஞ்சைத் தரணியின் அளப்பறியா சிறப்புக்களில் ஒன்று திருக்குடந்தை ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் உள்ள தொன்மையான கல் நாதஸ்வரம். இவ்வாலயத்தின் ஆஸ்தான வித்வான் திரு என். சுவாமிநாதன் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 29ம் தேதி சரஸ்வதி பூஜை தினத்தன்று சுமார் ஒரு மணி நேரம் இவ்வரிய பொக்கிஷமான கல் நாதஸ்வரத்தை வாசித்தார்.

இங்கு உள்ள தொன்மையான கல் நாதஸ்வரத்தைத் தவிர திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தந்தத்திலான நாதஸ்வரம் உள்ளது. ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள கல் நாதஸ்வரம் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டது. இந்த நாதஸ்வரத்தின் உலவுப்பகுதி கருங்கல்லால் செய்யப்பட்ட மூன்று பகுதிகளைக்கொண்டது.

ஐந்தாவது தலைமுறை நாதஸ்வரக் கலைஞரான திரு சுவாமிநாதன் சிக்கலில் உள்ள நாதஸ்வர இசைப் பள்ளியில் பயின்று முதன்மைத் தரத்தில் தேர்ச்சி பெற்றவர். நாதஸ்வரக் கலைஞர் திரு கோட்டூர் ராஜரத்தினம் பிள்ளை இவரது தாய் மாமா என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் ஒரு சிறிய உரையாடல்

இவ்வரிய இசைக்கருவியிலிருந்து வரும் இன்னிசை

Thanks to Nadaswaram artist Sri Swaminathan.

198 views0 comments

Recent Posts

See All
bottom of page