சமச்சீர் நிலை காட்டும் துலாக்கோல் போன்று கல்விப் பணியையும் இறைப்பணியையும் இரு கண்களாகப் பாவித்த, பட்டுக்கோட்டை கோபு சார் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட, ஸ்ரீ ராஜகோபால ஐயர் அவர்கள் தன் வாழ்க்கையையே ஒரு தவமாக வாழ்ந்தவர். இவருடைய தந்தையார் பட்டுக்கோட்டை ஸ்ரீ ராஜா சாஸ்திரிகள் திருவிடைமருதூர் வேத பாடசாலையில் பூரண அத்யைனம் செய்தவர். ஸ்ரீ கோபு சார் அவர்கள் தன் வாழ் நாளில் ஸ்ரீமத் பாகவதம் 56 முறைகளும். ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் 68 முறைகளும், நாராயணீய ராமாயண ப்ரவசனம் 125 முறைகளும் செய்தவர். அபிராமி அந்தாதிக்கு ஆங்கிலத்தில் மிக அருமையாகவும், எளிமையாகவும் பொருள் எழுதியுள்ளார். கல்விப் பணியில் சிறந்து விளங்கி நல்லாசிரியர் விருது பெற்றவர். இவருடைய துணைவியார் ஸ்ரீமதி லலிதா இவருக்கு உற்ற துணையாக இருந்து, இவரது சிறந்த அனுஷ்டான வாழ்க்கைக்கு உதவியவர். இப்போது இவரைப்பற்றி இவரது புதல்வர் ஸ்ரீ ராமக்ருஷ்ணன் அவர்கள் கூறுவதைக் கேட்போம்.
Courtesy: Smt. Malathi Jayaraman, Kumbakonam