சந்தியாவந்தனத்தின் சக்தியைப் பற்றி மகாபாரதத்தின் ஆதி பருவத்தில் ஜரத்காரு ரிஷி வாசுகியின் சகோதரியைத் திருமணம் செய்த போது நிகழந்த ஒரு நிகழவு நமக்கு உணர்த்துகிறது. [[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[ அதாவது அந்த விவாஹ காலத்தில் அந்த ரிஷி ஓர் ஒப்பந்தத்தை முன்னிட்டு விவாஹத்திற்கு ஒப்புக்கொண்டார்.
வாசுகியின் சகோதரியுடன்
'எனக்குப் பிடிக்காத செயலை நீ எப்பொழுதாவது செய்தால் உடனே உன்னை விட்டுவிடுவேன்' என்பது ஒப்பந்தத்தின் நியமமாக இருந்தது.
ஒரு நாள் ரிஷி தன் மனைவியின் மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார்
சூர்யாஸ்தமன காலம் வந்தது. ரிஷிக்கு விழிப்பு வரவில்லை.
அப்பொழுது அவனுடைய மனைவி அவரை (ஜரத்காரு) எழுப்பினால், 'அவர் கோபத்தில் என்னை விட்டுவிடுவானோ, எழுப்பாமல் விட்டால் சந்தியாலோபம் ஏற்படுமே' என்ற குழப்பத்தில், நான் என்ன செய்வேன் என்று சிந்தித்து,
'என்னைப் பரித்யாகம் செய்தாலும் பரவாயில்லை, சந்தியாலோபம் ஆகக்கூடாது' என்று நினைத்து தன் கணவனான ரிஷியை எழுப்பினாள்.
ரிஷியின் விருப்பத்திற்கு இந்த விழிப்பு விரோதமாக இருந்ததால் அவருக்குக் கோபம் வந்தது. அப்பொழுது அவர்
“ஏய்! பெண்ணே! (தன்னுடைய பூர்வ பிரதிக்ஞையை நினைத்து) இவ்வளவு காலம் என்னுடன் வாழ்ந்தாலும் எனது பிரபாவத்தை அறியாமல் இருக்கிறாயே! என்னுடைய அர்க்யத்தைப் பெறாமல் சூர்யன் மறையமாட்டான்”
சக்திரஸ்தி ந வாமோரு மயி ஸுப்தே விபாவஸோ: அஸ்தம் கந்தும் யதா காலம் இதி மே ஹ்ருதி வர்த்ததே) என்று கூறினான்.
அதாவது உபாசனைகளில் நிஷ்டை வேண்டும். பக்தனின் நிஷ்டைகளுக்காகவே பகவான் அவனைப் பின் தொடருவான்.
சந்தியாவந்தனத்தில் காயத்ரீ மந்திரத்திற்கு மிகவும் மஹத்வம் உள்ளது.
வேதமாதா காயத்ரியின் மகிமையை அனைத்து வேதங்களிலும் கூறப்பட்டு உள்ளன.
ஏதத் அக்ஷரமேதாம் ச ஜபன் வ்யாஹ்ருதி பூர்விகாம் சந்த்யயோர் வேதவித்விப்ரோ வேதபுண்யேன யுஜ்யதே
என்று கூறப்பட்டுள்ளது.
ஜபம் என்பது உபாம்சு, வாசிக, மானஸிக என்று மூன்று விதமாக இருக்கிறது.
அவற்றில் வாசிகத்தைவிட மானஸிக ஜபமும், மானஸிக ஜபத்தை விட, உபாம்சு ஜபமும் மிகச் சிறந்ததாகும்.
மஹாபாரதத்தின் சாந்தி பருவத்தில் காயத்ரியின் மஹிமை பற்றிக் கூறும் ஓர் அழகான கதை உள்ளது.
கௌசிக கோத்திரத்தில் பிப்பலாதன் என்ற தர்மிஷ்டனான ப்ராம்ஹணன் ஒருவன் இருந்தான்.
அவன் நிஷ்டையுடன் சந்தியாவந்தனம் கூடிய்காயத்ரியை தினமும் ஜபித்துக்கொண்டிருந்தான்.
ஆயிரம் வருடங்கள் இந்த நிஷ்டையில் கடந்தன.
ஒரு நாள் வேதமாதா காயத்ரீதேவி ப்ரத்யக்ஷமானாள். ஆனாலும் கூட அவன் அதை கவனத்தில் கொள்ளாமல் ஜபத்தில் மூழ்கியிருந்தான். ஜப எண்ணிக்கைகள் முழுமையாக முடிந்த பிறகு காயத்ரீதேவியை வணங்கி
ஏ தேவியே “காயத்திரி ஜபத்திலே எப்பொழுதும் என்னுடைய மனம் மூழ்கியிருக்குமாறு எனக்கு அருள் செய்” என்று கேட்டுக் கொண்டான்.
'ததாஸ்து' என்று சொல்லி தேவி மறைந்தாள்.
பிப்பலாதன் முன்பு போல் ஜபத்தைத் தொடங்கினான். 100 திவ்ய வருடங்கள் கடந்தன. ஒரு நாள் அவனது காயத்ரிதேவி புரச்சரணம் முடிந்த பிறகு தர்மமே மூர்த்தி ரூபத்தில் காட்சியளித்து வேண்டிய வரங்களைக் கொடுக்க தயாராயிற்று.
அந்த ப்ராம்ஹணன் முன்பு போல் கேட்க தர்மபுருஷனுக்கும் அவ்வாறே பதிலளித்தான்.
பிறகு காலன், யமன், தேவதைகளும் தவத்தின் பிரபாவத்திற்கு மகிழ்ந்து அங்கு வந்தார்கள்.
அரசனான இக்ஷ்வாகுவும் அங்கு வந்தடைந்தான்.
இராஜன் 'முனியாகிய உங்களுக்கு விரும்பிய அளவிற்கு செல்வங்களை அளிக்கிறேன். என்னிடமிருந்து பெற்றுக்கொள்வீராக' என்றான்.
அப்பொழுது பிப்பலாதன் 'எனக்கு செல்வங்கள் வேண்டாம். உனக்கு ஏதாவது ஆசையிருந்தால் என்னிடமிருந்து நீ பெற்றுக் கொள்ளலாம்' என்று கூறினான். இராஜன் பல திவ்ய வருடங்களாக சம்பாதித்த அந்த முனியின் தபோ பலத்தைக் கேட்டான்.
முனியோ கொடுக்கத் தயாரானார். இராஜன் க்ஷத்திரியனாக இருந்ததால், பிரதிக்ரஹ (வாங்குதல்) த்திற்குத் தயங்கினான்.
அப்பொழுது ப்ராம்ஹணன் “எம் சத்யத்தை (வாக்) நிறைவேற்ற நீ என் தவத்தின் பலனை வாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்” என்று கூறினான்.
இவ்வாறு இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றபொழுது அங்கு தேவதைகள் ப்ரத்யக்ஷமானார்கள்.
"ப்ராம்ஹணன் காயத்ரி ஜபத்தின் பலனை இராஜாவிற்கு அளிக்கட்டும், அதனால் கிடைத்த புண்யத்தின் பலனை இராஜா ப்ராம்ஹணனுக்கு அளிக்கட்டும்” என்று தேவதைகள் சமாதானப்படுத்தினார்கள்.
உடனே ப்ராம்ஹணனின் ப்ரஹ்மரந்திரத்திலிருந்து திவ்யமான தேஜஸ் ஒன்று புறப்பட்டு ப்ரஹ்ம லோகத்தை நோக்கிச் சென்றது. மஹாயோகிகளுக்குக் கிடைக்கக்கூடிய ஸ்தானம் காயத்ரி மந்திரத்தை நிஷ்டையுடன் ஜபித்த ப்ராம்ஹணனுக்குக் கிடைத்தது.
இதுதான் ஸந்த்யாவந்தனம் மற்றும் காயத்ரி மந்திரங்களின் மஹிமையாகும்.
மஹாபாரதத்தில் மேலும் ஸந்த்யோபாஸனைக் குறிப்புகள் பல உள்ளன
முடிந்தவரை அணைவரும் சந்தியாவந்தனம் மற்றும் காயத்ரி ஜெபத்தினை நிதமும் காலை மாலையில் மூன்று வேளைக்காகவும் செய்வோம் நிலையில்லா வாழ்வை விட்டு நிலையான மோட்சத்தை அடைவோம். [[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[ ஜெய் ஶ்ரீராம்!! ஜெய் ஜெய் ஸ்ரீராம்!!!
Reposting it from Amirthavahini Google Group.