Sree Rama Navami Uthsavam, Kumbakonam
- Thanjavur Paramapara
- Mar 25, 2018
- 1 min read
ஸ்ரீராம நவமி உத்ஸவம் கும்பகோணத்திலுள்ள அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ராமஸ்வாமி ஆலயத்தில் அழகான அலங்காரத்துடன் ஸ்ரீ ராமரை தினமும் ஒரு வாகனத்தில் புறப்பாடு செய்வதைக் காணக் கண் கோடி வேண்டும்.
கும்பகோணம் சோலையப்பன் தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ ராம பஜன சபாவிலும் ஸ்ரீ ராம நவமி கர்போத்ஸவம் மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
வேணு கானம் ஸ்ரீ சரப சாஸ்திரிகளால் தொடங்கப்பட்ட இந்த சபாவில் 132ஆவது வருட உத்ஸவம் வேத கோஷத்துடன் தொடங்கியது. ஸ்ரீ ரவிராம ஷர்மாவின் வால்மீகி ராமாயண உபன்யாசம் ஒன்பது தினங்கள் நடைபெறுகிறது.
சில காணொளி காட்சிகள்:
Video courtesy: smt. Malathi Jayaraman,Kumbakonam.
Comentarios