தமிழ்நாட்டில் #சிவனுக்குரிய_பெருமைமிக்க ஸ்தலங்களின் பெருமைகள்.
ராஜ கோபுரத்தை விட மூலவருக்கு #உயர்ந்தவிமானம் உள்ள இடங்கள்
1,திருப்புனவாசல் -- ஶ்ரீவிருத்தபுரீஸ்வரர் 2,தஞ்சை – பிரகதீஸ்வரர் 3,கங்கைகொண்டசோழபுரம் – பிரகதீஸ்வரர் 4,தாராசுரம் – ஐராவதேஸ்வரர் 5,திருபுவனம் – கம்பேஸ்வரர்
சிவனுக்குரிய #விஷேசஸ்தலங்கள்.
1, திருவேள்விக்குடி – கௌதுகாபந்தன க்ஷேத்ரம் 2, திருமங்கலகுடி – பஞ்சமங்கள க்ஷேத்ரம் 3, திருவையாறு – பஞ்ச நந்தி க்ஷேத்ரம் 4, திருவிடைமருதூர் – பஞ்சலிங்க க்ஷேத்ரம் 5, திருநீலக்குடி – பஞ்சவில்வாரண்ய க்ஷேத்ரம் 6, திருவிற்கோலம் – நைமிசாரண்ய க்ஷேத்ரம் 7, திருநெல்லிக்கா – பஞ்சாட்சரபுரம் 8, காஞ்சி – சத்தியவிரத க்ஷேத்ரம் 9, திருவல்லம் – வில்வாரண்யம் 10, திருகண்டியூர் – ஆதிவில்வாரண்யம்
சிவ பூஜைக்கு #சிறந்தஸ்தலங்கள்.
1, திருக்குற்றாலம் – திருவனந்தல் பூஜை 2, இராமேஸ்வரம் – காலை சந்தி பூஜை 3, திருவானைக்கா – உச்சிகால பூஜை 4, திருவாரூர் – சாயரக்ஷை பூஜை 5, மதுரை – இராக்கால பூஜை 6, சிதம்பரம் – அர்த்தஜாம பூஜை
#காசிக்குமுன் தோன்றிய ஸ்தலங்கள்
1,திருப்புனவாசல் -- ஶ்ரீவிருத்தபுரீஸ்வரர் (வ்ருத்தகாசி)
#காசிக்குசமமான ஸ்தலங்கள்
1, திருவெண்காடு. 2, திருவையாறு. 3, மயிலாடுதறை. 4, திருவிடைமருதூர். 5, திருச்சாய்காடு. 6, ஸ்ரீவாஞ்சியம். 7, விருத்தாசலம். 8, மதுரை. 9, திருப்புவனம்
#தருமநூல்கள் 18.
கடவுளால் வகுத்தது தருமத்தை பற்றி மட்டும் உபதேசித்தது.
1.மனு, 2.அத்தி, 3.விண்டு, 4.வாசிட்டம், 5.யமம், 6.ஆபத்தமம், 7.யாஞ்ஞ வற்கியம், 8.பராசரம், 9.அங்கீரசம், 10.உசனம், 11.காத்தியாயனம், 12.சம்பவர்த்தம், 13.வியாசம், 14.பிரகற்பதி, 15.சங்க்லிதம், 16.சாதாதபம். 17.கௌதம், 18.தக்கம்.
பாரதத்தின் #முக்திஸ்தலங்கள்
1,காசி 2,காஞ்சி 3,மதுராபுரி 4,அரித்துவார் 5,உஜ்ஜையினி 6,அயோத்தி 7,துவாரகை.
பாரதமே #பரமசிவம்.
1,திருப்பரும்பதம் – தலை உச்சி 2,திருக்கேதாரம் – நெற்றி. 3,காசி – புருவநடு 4,பிரயாகை – நெஞ்சு 5,தில்லை – இதயம் 6,திருவாரூர் – மூலம்.
#முக்திதரும் ஸ்தலங்கள்.
திருவாரூர் – பிறக்க முக்தி காசி – இறக்க முக்தி திருவண்ணாமலை – நினைக்க முக்தி சிதம்பரம் – தரிசிக்க முக்தி வேதாரண்யம் – தீர்த்தமாட முக்தி மதுரை – கூற முக்தி அவினாசி – கேட்க முக்தி.
#ஜீவன்முக்தி ஸ்தலங்கள்.
1,திருப்புனவாசல் -- ஶ்ரீவிருத்தபுரீஸ்வரர். (வாழ்நாளில் ஒருமுறை வந்தாலே முக்தி. முக்தி அடைய முடியாதவர்கள் இக்கோயிலுக்குள் நுழைய முடியாது.)
ஐந்து #அற்புதங்கள்.
1, ஆவுடையார் கோவில் கொடுங்கை. 2, கடாரங்கொண்டான் மதில் 3, திருவீழிமிழலை வௌவ்வால் ஒட்டிமண்டபம் 4, தஞ்சாவூர் கோபுரம் 5, திருவலஞ்சுழி பலகணி
#திவசம் சிறப்பு இடம் {பிதுர்கடன் கொடுக்க சிறப்பு ஸ்தலம்.}
காசி, கயா {விஷ்னுபாதம் ஆலமரம்} திருவெண்காடு – ஆலமரத்தடி {ருத்ரபாதம்} பத்ரிநாத், திருக்கோகர்ணம், பவானி, திலதர்ப்பணபுரி, செதிலப்பதி, {தசரதன்,ஜடாயுக்கு இராமன் லட்சுமனன் தர்ப்பணம் செய்தது.} இராமேஸ்வரம், துவாரகாபுரி, பூம்புகார், இடும்பாவனம், சங்குமுகேஸ்வரர்.
12 தமிழ் மாதங்களும், தெய்வங்களும். 1, சித்திரை, ஆடி, ஐப்பசி, தை. – பிரம்மா, சித்திரை, ஐப்பசி பிறக்கும் காலம் விஷு {விஷாவகன் – பிரம்மா} 2, வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி – விஷ்ணு. பிறக்கும்நேரம் விஷ்ணுபதி புண்ணிய காலம். 3, ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி – சிவம். பிறக்கும் நேரம் “ஷடசீதி” {ஷடாங்கன் – சிவன்} ஆடி மாதப் பிறப்பு தட்சிணாயன – புண்ணியகாலம் – சூரியன் தெற்கு பயனிப்பது. தை மாதப் பிறப்பு உத்தராயண – புண்ணியகாலம் – சூரியன் வடக்கு நோக்கி பயனிப்பது.
#பெரியதேர்கள் உள்ள ஸ்தலங்கள்.
திருவாரூர், திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுதூர், திருவண்ணாமலை, சிதம்பரம், காஞ்சி, மதுரை.
பன்னிரு #ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்.
1, கேதாரம் – இமயம் {கேதாரேஸ்வரர்} 2, சோமநாதம் – குஜராத் {சௌராஷ்டிரம்,சோமநாதேஸ்வரர்} 3, மகாகாளேசம் – உஜ்ஜையினி {மகா காளேஸ்வரர்} 4, விஸ்வநாதம் – காசி {விஸ்வநாதேஸ்வரர்} 5, வைத்தியநாதம் – {மகாராஷ்டிரம், வைத்தியனாதர்} 6, பீமநாதம் – {மகாராஷ்டிரம், பீமநாதேஸ்வர்.} 7, நாகேஸ்வரம் – {மகாராஷ்டிரம், தாருகாவனம், நாகேஸ்வர்} 8, ஓங்காரேஸ்வரம் – மத்தியப்பிரதேசம் {அமலேஸ்வரம், ஓங்காரேஸ்வரர்} 9, த்ரயம்பகம் – {மகாராஷ்டிரம், கௌதம்} திரயம்பகேஸ்வரர். 10, குசுமேசம் – மகாராஷ்டிரம் குஸ்ருணேஸ்வர். 11, மல்லிகார்ஜுனம் – {ஆந்திரம்} ஸ்ரீசைலம் – மல்லிகார்ஜுனர். 12, இராமநாதம் – இராமேஸ்வரம் {தமிழ்நாடு}
#சப்தவிடங்கத் ஸ்தலங்கள்.
1, திருவாரூர் – வீதிவிடங்கர் – அஜபா நடனம். 2, திருநள்ளாறு – நகரவிடங்கர் – உன்மத்த நடனம். 3, நாகப்பட்டினம் – சுந்தரவிடங்கர் – வீசி நடனம். 4, திருக்காறாயில் – ஆதிவிடங்கர் – குக்குட நடனம். 5, திருக்கோளிலி – அவனிவிடங்கர் – பிருங்க நடனம். 6, திருவாய்மூர் – நீல விடங்கர் – கமல நடனம். 7, திருமறைக்காடு – புவனி விடங்கர் – ஹம்ஸபாத நடனம்.
#பஞ்சசபைத் ஸ்தலங்களும், பஞ்சாட்சர வடிவமும்.
1, திருநெல்வேலி – தாமிர சபை – ந 2, திருக்குற்றாலம் – சித்திர சபை – ம 3, திருவாலங்காடு – இரத்தின சபை – சி 4, திருத்தில்லை {சிதம்பரம்} – பொற்சபை – வ 5, மதுரை – வெள்ளி சபை – ய
திருச்சிற்றம்பலம்.
Reposting it from Amritha Vahini Google Groups.