திருக்குடந்தையின் அளப்பறியா சிறப்புக்களில் ஒன்று பழமை வாய்ந்த சோலையப்பன் தெரு என்று கூறினால் அது மிகையன்று. இது பல வேத விற்பன்னர்களை ஈன்றது. இன்றும் பல வேத விற்பன்னர்கள் இங்கு வசிக்கின்கிறனர். நமது தொன்மையான பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தயும் இன்றளவும் இங்கு வசிக்கும் அந்தணர்கள் பேணிப் பாதுகாத்து வருகின்றனர். நமது பாரம்பரிய உடையில் பெண்டிர், ஆடவர், சிறுவர், சிறுமிகளைப் பார்ப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. சிறிய குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை கையில் கைபேசியுடன் காணப்படும் இந்த நவீன யுகத்தில், இங்கு நடக்கும் ஒவ்வொரு ஆன்மீக நிகழ்ச்சியிலும் குழந்தைகள் நமது பாரம்பரிய உடையுடன், மதச்சின்னங்கள் அணிந்து ஆர்வமுடன் கலந்து கொளவது கண் கொள்ளாக் காட்சி. சோலையப்பன் தெருவில் வேணுகானம் சரப ஸாஸ்திரிகளால் கைங்கர்யம் செய்யப்பட்டு , ஸ்ரீராம பக்தியைப் பரப்பி வரும் ஸ்ரீ ராம பஜன சபாவின் 133ஆவது ராம நவமி உத்ஸவம் 5 ஏப்ரல் அன்று தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ சந்துரு பாகவதர் அவர்களின் உபன்யாசத்தில் உத்ஸவத்தின் ஏழாம் நாளான வியாழக்கிழமையன்று சுந்தர காண்டத்தில் அனுமனுடைய பராக்கிரமத்தை அவர் விவரிக்கும் பொழுது குழந்தைகள் கை கொட்டி ஆனந்தித்து ரசிப்பதை இக்காணொளியில் காணலாம்.
Courtesy : Smt. Malathi Jayaraman, Kumbakonam