தொன்மை மிக்க நமது பாரம்பரியத்தில் நதிகளை ஆராதிப்பது மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. 'நீரின்றி அமையாது உலகு' என்பது தெய்வப்புலவரின் வாக்கு.
ராஜமஹேந்திரவரம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள ஆந்திராவிலுள்ள ராஜமுந்திரியில், மாலை நேரத்தில் நடக்கும் கோதாவரி நதி ஹாரத்தியைக் காண கண் கோடி வேண்டும். 144 வருடங்களுக்கு ஒரு முறை வரும் புஷ்கர விழாவில் (14-07-2015 to 25-07-2015) தொடங்கப்பட்ட கோதாவரி ஹாரத்தி நாள்தோறும் மாலை 7 மணிக்குத் தொடங்கி சுமார் 30 நிமிடங்கள் தொடர்கிறது. கரையிலிருக்கும் கோதாவரி அன்னைக்கு சிறிய பூஜை செய்தபின் ஹாரத்தி தொடங்குகிறது. 6 மணியிலிருந்தே பக்தர்கள் ஹாரத்தியைக் காண படிக்கட்டுக்களில் அமர ஆரம்பித்துவிடுகிறார்கள். வேத கோஷங்களுடன், ஒவ்வொரு ஹாரத்தியின் முக்கியத்துவமும், அதை தரிசிப்பதனால் கிட்டும் பலனையும் விளக்குவது மிக அருமை. மாலை நேரத்தின் இயற்கை அழகும், தெய்வீகமும் கலந்த அந்தத் தருணங்கள் நம்மை பேரானந்தத்தில் ஆழ்த்துகின்றன.
ஒரு மாலை நேர ஹாரத்தியை இக்காணொளியில் கண்டு மகிழலாம்.