'அருணகிரி உலா'
திருமதி சித்ரா மூர்த்தி அவர்கள் எழுதியுள்ள 'அருணகிரி உலா' என்ற புத்தகம் வலிமை தந்த வள்ளல் அருள் புரியும் வயலூரில் துவங்கி நந்தி முகம் திரும்பி அமர்ந்திருக்கும் நாகப்பட்டினம் வரை உள்ள பல தலங்களைப்பற்றி பல அரிய தகவல்களை அளிக்கிறது. நாமே நேரில் சென்று தரிசனம் செய்தது போன்ற உணர்வை அளிக்கிறது.
திருப்புகழ் ஆசிரியரான இவர், அந்தந்தத்தலங்களின் திருப்புகழின் பொருளையும், அதன் தத்துவச்செறிவையும் விளக்குவதோடன்றி ஈசன் மீது பாடப்பட்ட பதிகங்களையும் குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக இவர் திருவாரூரைப்பற்றி ஐந்து அத்தியாயங்களில் ஆய்வு செய்து அளித்துள்ள பல அரிய தகவல்கள் நம்மை வியக்க வைக்கின்றன.
பல ஆண்டுகளாக திருப்புகழ் பயிற்றுவிக்கும் இவர், சிறந்த திருப்புகழ் சொற்பொழிவாளருமாவார்.
அருணகிரி உலாவில் அவர் திருக்குடந்தையின் அருகிலுள்ள பழையாறை ஆலயத்தைப் பற்றி எழுதியுள்ள பகுதியை இங்கு பகிர்கிறோம்.








