ஆடி மாதத்தில் அம்பிகையை வழிபடுவது மிகச்சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அதிலும் ஆடி வெள்ளியில் சக்தி வழிபாடு மிகப்புனிதமாகக் கருதப்படுகிறது.
தேவி வழிபாட்டுக்கு ஆடி மாதம் எதனால் உகந்ததாகக் கருதப்படுகிறது என்பதைப் பார்ப்போம். பூமாதேவி பூமியில் ஆடி மாதத்தில்தான் அவதரித்தாள். பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த பரமசிவன் ஆடி மாதம் அம்பிகைக்குரியது என்று வரம் அளித்தார். ஆடி மாதத்தில் சக்திக்குள் சிவன் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம்.
இம்மாதத்திற்கு ஆடி என்று ஏன் பெயர் உண்டாயிற்று என்பதை சிவமகாபுராணம் கூறுகிறது. ஒரு சமயம் ஆடி என்ற அரக்கன் அம்பிகை இல்லாத நேரத்தில் கயிலாயம் வந்தான். அச்சமயம் பார்வதி தேவியின் தோழியான உத்தாலகுசுமை அங்கு காவல் இருந்தாள். அவள் காவலை மீறி உள்ளே நுழைவதற்காக பாம்பு வடிவம் எடுத்து உள்ளே நுழைந்தான். சிவன் இருக்கும் இடம் அடைந்ததும் பார்வதியாக உரு மாறினான். எல்லாம் அறிந்த சிவன் ஒன்றும் அறியாதவர்போல் நடித்து அன்புமொழி பேசி அவனை அருகில் அழைத்தார். அவன் நெருங்கியதும் திரிசூலத்தால் கொன்றழித்தார்.
தன் உருவில் வந்ததால் தேவி மனம் இரங்கி அவனுக்கு நற்கதி அளித்தாள். அவனது பெயரால் ஒரு மாதத்திற்கே 'ஆடி' என்ற பெயர் வந்தது.
கருவிலி சர்வாங்கசுந்தரி சமேத ஸ்ரீசற்குணேஸ்வர ஸ்வாமி ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு 2-8-2019 அன்று சர்வாங்கசுந்தரி அம்பிகைக்கு லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷார்ச்சனை நடைபெற்றது. அதன் சில காணொளி காட்சிகளைக் கண்டு சர்வாங்கசுந்தரி அம்பிகையின் அருள் பெறுவோம்.
தகவல் நன்றி- தினமலர்
Video Courtesy:Smt.Malathi Jayaraman,Kumbakonam.