top of page

சுற்றுச்சூழல் காப்போம் (பகுதி 2)

பம்மல் திரு இந்திர குமார் அவர்களின் இல்லத்தின் மாடி அணிந்திருக்கும் பச்சைத் தொப்பியில், பல மலர்ச்செடிகளோடு, வெட்டி வேர், சித்தரத்தை மற்றும் பல அரிய மூலிகைகளும் உள்ளன. செங்குத்து வேளாண்மை (vertical farming) முறையில் பல தாவரங்களைப் பயிரிட்டிருக்கிறார்.

குளியலறையிலிருந்து, சோப், டிடர்ஜென்ட் கலந்த கழிவு நீர் வரும் இடங்களில் சேம்பு, கல் வாழை போன்ற அந்த நீரை சுத்திகரிக்கும் செடிகளை பயிரிட்டு அந்த சுத்தப்படுத்தப்பட்ட நீர் மற்ற செடிகளுக்குப் போகிறது. தேங்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க மீனுக்கு உணவாகும் சிவப்பு புழுக்கள் உள்ளன.

Vermi composting முறையில் இயற்கை உரம் தயாரிக்கிறார்.

கழிவறை நீரை (Septic tank) ஈ.எம் என்ற ஒரு வகை பாக்டீரியாவைக்கொண்டு சுத்தப்படுத்தி அந்த நீரை செடிகளுக்கு உபயோகிக்கிறார். நம் முன்னமேயே தொட்டியைத் திறந்து அந்த நீரை அவர் ஒரு குவளையில் எடுத்தபோது எந்தவித துர்வாடையும் இல்லை. ஈ.எம் பாக்டீரியாவை உபயோகிப்பவர்கள் கழிவறையை காய்ந்த ஆரஞ்சு தோல் பொடியையோ, அல்லது எலுமிச்சைப்பழத்தையோ (Citric acid) கொண்டுதான் சுத்தம் செய்யவேண்டும். இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட கழிவறைகள்தான் இரசாயன திரவங்கள் உபயோகித்து சுத்தம் செய்யும் கழிவறைகளைவிட ஆரோக்கியமானவை என்கிறார்.

நாம் பிளாஸ்டிக் பாட்டில்களில் வாங்கிப் பருகும் நீர் உடலுக்குத் தீங்கு விளைவிப்பது என்று உறுதியாகச் சொல்கிறார். செப்புப் பாத்திரத்தில் நிரப்பிய தேற்றாங்கொட்டை தேய்க்கப்பட்ட நீர் மிகவும் சிறந்த நீர் என்று கூறுகிறார்.

அவரை சந்தித்து இந்த அரிய தகவல்களை எல்லாம் அறிந்தபின், கும்பகோணத்தில் எங்கள் இல்லத்தில் செப்புப்பாத்திரத்தில் நிரப்பிய தேற்றாங்கொட்டை கலந்த நீரையே அருந்துகிறோம். கரிமக் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரித்து அதை செடிகளுக்கு உபயோக்கிறோம். கழிவறையில் Bacillus Subtilis பாக்டீரியாவை பயன்படுத்தி காய்ந்த ஆரஞ்சுத்தோல் பொடியால்தான் சுத்தம் செய்கிறோம். கழிவறையிலோ, கழிவறைத் தொட்டியிலோ எந்த துர்நாற்றமும் இல்லை. நம்மால் முடிந்தவரை சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்யவேண்டும். பின் வரும் சந்ததியினருக்கு நம் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியத்தைக் கற்றுக்கொடுப்பதோடு, சுற்றுச்சூழல் பராமரிப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்க வேண்டும். மாசு இல்லாத சுற்றுச்சூழலையும் பரிசளிக்க வேண்டியது நம் தலையாய கடமை. இப்போது அவர் இல்லத்தை உலா வருவோம்.

Courtesy:Smt. Malathi Jayaraman,Kumbakonam.

33 views0 comments

Recent Posts

See All

தெய்வத்தின் குரலைத் தொகுத்த - ரா. கணபதி அண்ணா படைப்புகள்

அன்புடையீர், நமஸ்காரம் பூஜ்ய மகா பெரியவாளின் தெய்வத்தின் குரலைத் தொகுத்தவர் ரா. கணபதி அண்ணா என்பதை அனைவரும் அறிவோம். காஞ்சி மடத்தின்...

bottom of page